எந்த அறிகுறியும் இல்லாமல் கர்ப்பம் எப்படி இருக்கும்

Advertisement

அறிகுறி இல்லாத கர்ப்பம்

ஹலோ நண்பர்களே இன்று நம் ஆரோக்கியம் பதிவில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவலை பற்றி பார்க்கப்போகிறோம். அறிகுறிகள் இல்லாமல் கர்ப்பமாக இருக்க முடியுமா..? நாட்கள் தள்ளி போகிறது ஆனால் கர்ப்ப அறிகுறிகள் தோன்றவில்லையா.? இதற்கான பதிலை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.

அறிகுறிகள் இல்லாமல் கர்ப்பம் தரிக்குமா..?

எல்லா பெண்களுக்கும் கர்ப்ப காலத்தின் போது ஒரே மாதிரியான அறிகுறிகள் உண்டாகும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் தோன்றும். அதேபோல் சிலர் கர்ப்பமாக இருப்பார்கள் ஆனால் எந்த அறிகுறியும் இல்லை என்று கூறுவார்கள். அதற்கு காரணம் அவர்களின் உடல்நிலை பொறுத்தே அறிகுறிகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ தோன்றுகிறது. இதுபோன்று அறிகுறிகள் இல்லாமல் கர்ப்பமாக இருப்பது சிலருக்கு மட்டுமே இருக்கும்.

முதல் மாதத்தில் கர்ப்பத்தின் அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா

 

ஆனால் பொதுவாக கர்ப்பகாலத்தின் போது பெண்களுக்கு குமட்டல், வாந்தி, அதிக வாசனை உணர்வு, அதிகப்படியான உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும். சில பெண்களுக்கு சமைக்கும் வாசனை கூட பிடிக்காது. எந்த உணவையெல்லாம் விரும்பி சாப்பிட்டார்களோ, அந்த உணவுகளை முற்றிலும் வெறுப்பார்கள். அதேபோல், வெறுத்த உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்.

சிலருக்கு அதிகப்படியான உடல் சோர்வு உண்டாகும். உடல் பலவீனமாக இருப்பதாக உணர்வார்கள். சிலருக்கு பசி உணர்வு இல்லாமல் இருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் அனைத்தும் கர்ப்பகாலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகள் என்றே கூறலாம். அதுபோல் சில பெண்களுக்கு 3 மாதங்கள் அறிகுறிகள் இருக்கும். 3 மாதங்களுக்கு பின் அந்த அறிகுறிகள் இல்லாமல் போய்விடும். இந்த அறிகுறிகள் அனைத்தும் ஹார்மோன் மாற்றத்தினால் உண்டாகிறது.

கர்ப்பம் எத்தனை நாளில் உறுதி செய்யலாம்

அறிகுறி இல்லாத கர்ப்பம்:

  • கர்ப்பகாலத்தின் போது அறிகுறிகள் இல்லாத பெண்களுக்கு அதிகளவு பசி உணர்வு ஏற்படும். இந்த அறிகுறிகளும் ஹார்மோன் மாற்றத்தினால் தான் உண்டாகின்றன.
  • இதுபோன்ற அறிகுறிகள் இல்லாத கர்ப்பம் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாது.
  • ஆனால் அறிகுறிகள் தெரிந்தால் தான் ஆரோக்கியம் என்று சில ஆய்வுகளில் கூறுகிறார்கள்.
  • கருவுற்ற பெண்களுக்கு முதல் 3 மாதங்கள் எந்த ஒரு அறிகுறியும் தோன்றாது. அறிகுறிகள் இல்லை என்று சொல்லும் பெண்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகு அறிகுறிகள் தோன்றலாம். எனவே, அறிகுறிகள் இல்லை என்று கவலைபட தேவையில்லை.
  • எப்பொழுதும் இயல்பாக இருப்பதாகவே உணர்வீர்கள். உங்களிடம் எந்தவொரு மாற்றமும் தெரியாது.
  • எந்தவொரு கர்ப்ப அறிகுறியும் இல்லாதவர்கள் அதிர்ஷ்டமானவர்கள். உணவின் மீது வெறுப்பு இல்லாமல் பிடித்த உணவை உண்டு கருவை சுமப்பார்கள்.
  • நீங்கள் கருவுற்று இருந்தும் அறிகுறிகள் தோன்றவில்லை என்றால் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்வது நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil
Advertisement