அவல் பயன்கள் | Aval Benefits in Tamil

Advertisement

அவல் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் | Aval Benefits in Tamil

காலையில் சாப்பிட அவல் மிக சிறந்த உணவு. இந்த அவலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது முன்பு கைக்குத்தல் மூலம் பெறப்பட்டு வந்தது. இப்பொழுது எளிமையாக இயந்திரம் மூலம் மென்மையான தட்டையான அவல் பெறப்பட்டு வருகிறது. இதன் நிறம் அரிசியின் நிறத்தை சார்ந்தது. இது அரிசி, கம்பு போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதை காலையில் குழந்தைகளுக்கு உணவாக கொடுப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன அப்படி என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

அவல் தயாரிக்கும் முறை:

  • முதலில் நெல்லை ஊறவைத்து கொள்ள வேண்டும். பின் அதனை உலர்த்தி, வறுத்து கொள்ள வேண்டும்.
  • வறுத்த அரிசியை இடித்து பெறப்படுவது தான் இந்த அவல்.
  • அவல் நொதித்தல் முறையில் செய்யப்படுவதால் அரிசியில் உள்ள முழு சத்துக்களும் நமக்கு கிடைக்கிறது.
  • சிகப்பு அவல் சிவப்பு அரிசியில் இருந்து பெறப்படுகிறது. வெள்ளை அவல் வெள்ளை அரிசியில் இருந்தது பெறப்படுகிறது.

அவல் வகைகள்:

  1. சிவப்பு அவல்
  2. வெள்ளை அவல்
  3. கம்பு அவல்
  4. தினை அவல்

அவல் பயன்கள்:

  • இந்த அரிசியில் இருக்கும் Anthocyanin நிறமி இந்த சிவப்பு அவலிற்கு ஏரளமான நன்மைகளை கொடுக்கிறது. இந்த அவல் தயாரிக்கப்படும் அரிசியில் வைட்டமின் பி1, பி3, பி6, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம், செலினியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து போன்றவைகளை கொண்டுள்ளது.
  • இந்த அவலில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் இதய நோய் வராமல் தடுக்கவும், இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.

குடலை பாதுகாக்க:

  • ஆந்தோசயனின், பாலிபீனால் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளது. குடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தயிர் போன்று ப்ரோபயாடிக் சத்து அவலில் இருப்பதால் புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரெட் இருப்பதால் குடலில் நல்ல பாக்டீரியாக்களை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது.

aval benefits in tamil

  • எளிதில் செரிமானமடைவதால் குடல் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படாது. உடம்பில் இருக்கும் Pre- Radical-களை அழிப்பதற்கு உதவும் ஆக்ஸிஜனேற்றிகளை கொண்டுள்ளது.

எலும்பு வளர்ச்சியை அதிகரிக்க:

  • குடலில் புற்று நோய் செல்கள் வளருவதை தடுக்கிறது. இதனால் குடல் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.

sigappu aval benefits in tamil

  • எழும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்கவும், குடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

ரத்த சோகையை குணப்படுத்த:

  • இதில் இரும்பு சத்து அதிக அளவில் இருப்பதால் உடம்பில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்தத்தின் அளவை உடம்பில் அதிகரிக்க உதவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உண்டாகும் ரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது.

red aval benefits in tamil

  • அவலுடன் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து சாலட் போல சாப்பிடுவதன் மூலம் எலுமிச்சையில் இருக்கும் விட்டமின் சி சிவப்பு அவலில் இருக்கும் இரும்பு சத்தை குடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
  • அவலை ஊறவைத்து அதனுடன் வெள்ளம், துருவிய தேங்காய், ஏலக்காய்  சேர்த்து  குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதன் மூலம் ரத்தத்தின் அளவை அதிகரிக்கவும் மற்றும் ரத்த சோகை உள்ளவர்களுக்கு ரத்த சோகையை குணப்படுத்தவும் உதவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு உணவாக கொடுப்பதன் மூலம் மூளை வளர்ச்சி அதிகரிக்கவும், சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது.
  • அவல் வயிற்று புண், வாய் புண், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், உடல் சூட்டை தணிக்கவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க:

aval health benefits in tamil

  • உடல் பருமனாக காரணமான கொழுப்பு அதிகரிப்பதால் ஏற்படும் இதய நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றை குணப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும், மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவையும் குறைக்க உதவுகிறது.

சர்க்கரை நோயை குணப்படுத்த:

  • அவலில் நார்ச்சத்து இருப்பதால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்கவும் மற்றும் குளுக்கோஸ் அளவு உடம்பில் அதிகரிக்காமல் இருக்கவும் பயன்படுகிறது. குறைந்த அளவு Glycemic இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் பசிக்கும் வேலையில் இந்த அவலை சாப்பிடலாம்.

benefits of eating red aval in tamil

  • குழந்தைகளுக்கு இதனை பாலில் ஊறவைத்து, நாட்டுச் சர்க்கரை, துருவிய தேங்காய், ஏலக்காய் சேர்த்து கொடுக்கலாம்.
  •  சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை சேர்க்காமல் அவல் உப்புமா, சாலட் செய்து சாப்பிடலாம். அவலுடன் பால், நெய், மோர் சேர்த்து சாப்பிடலாம். ஆனால் தயிர் சேர்த்து சாப்பிட கூடாது. அப்படி அவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் மந்த நிலை ஏற்படும். 
அம்மான் பச்சரிசி பயன்கள்
சாமை அரிசி பயன்கள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement