Suvarotti Disadvantages
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆட்டு சுவரொட்டி தீமைகள் என்ன.? அதனை யார் சாப்பிடக்கூடாது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக ஆட்டு சுவரொட்டி பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆட்டு சுவரொட்டி சாப்பிட்டால் உடலிற்கு அவ்வளவு நன்மைகள் இருக்கிறது . அதிலும் குறிப்பாக இரத்தசோகை உள்ளவர்கள் ஆட்டு சுவரொட்டி சாப்பிட்டால் இரத்தசோகை நோய் நீங்கும். ஆட்டு சுவரொட்டி என்பது ஆட்டின் மண்ணீரல் ஆகும். இது பச்சையாக இருக்கும்போது சுவற்றில் ஒட்டிக்கொள்ளுமாம். அதனால் தான் இதனை சுவரொட்டி என்று கூறுவார்கள். ஆட்டு சுவரொட்டியில் புரோட்டீன், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி12, பாஸ்பரஸ், செலினியம் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
மட்டன் சுவரொட்டியை இப்படி செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்
ஆட்டு சுவரொட்டி தீமைகள்:

எடை அதிகரிப்பு:
சுவரொட்டியில் அதிக அளவில் கொழுப்பு உள்ளது. எனவே, இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஆட்டு சுவரொட்டியை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் அல்லது குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதய நோய்:
சுவரொட்டியை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது இதய நோய் போன்ற போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல், சுவரொட்டியில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் இரத்த ஓட்டத்தில் பிரச்சனை ஏற்படும். மேலும், சுவரொட்டியில் அதிக அளவில் புரோட்டீன் மற்றும் கால்சியம் இருப்பதால், சுவரொட்டியை அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. எனவே, சுவரொட்டியை அளவோடு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஆட்டு சுவரொட்டி யார் சாப்பிட கூடாது.?
- உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் ஆட்டு சுவரொட்டி சாப்பிட கூடாது.
- இதய நோய் உள்ளவர்கள் ஆட்டு சுவரொட்டியை அதிகமாக சாப்பிட கூடாது.
- இரத்த ஓட்டத்தில் பிரச்சனையில் உள்ளவர்கள் ஆட்டு சுவரொட்டி அதிகமாக சாப்பிட கூடாது.
- உடலில் அளவுக்கு அதிகமாக புரதம் மற்றும் கால்சியம் உள்ளவர்கள் ஆட்டு சுவரொட்டி சாப்பிட கூடாது.
- சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் ஆட்டு சுவரொட்டியை அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. இதன் மூலம் சிறுநீரக கற்கள் உருவாகும்.
- செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இத்தனையோ எடுத்து கொள்வதை தவிர்க்க வேபண்டும்.
- எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சுவரொட்டியை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
எனவே, சுவரொட்டியை அதிக அளவில் எடுத்து கொள்ளாமல், குறைவான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே ஆரோக்கியத்திற்கு சிறந்தது. சுவரொட்டியில் அதிக அளவில் சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. ஆரோக்கியத்திற்கு நன்மையை தருவதாக இருந்தாலும் கூட அளவோடு எடுத்து கொள்வது நல்லது.
சுவரொட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |














