இப்படிதான் நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துகள் வீணாகிறதா?

ஆரோக்கிய குறிப்புகள்

இப்படிதான் நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துகள் வீணாகிறதா?

ஆரோக்கிய குறிப்புகள்:-

நாம் சில காய், கணிகளை ஜூஸ் செய்து குடிப்போம், சிலவற்றை பச்சையாக சாப்பிடுவோம், சிலவற்றை பாதி வேகவைத்து சாப்பிடுவோம். சிலவற்றை ழுழுமையாக வேகவைத்து சாப்பிடுவோம். இப்படி ஒவ்வொரு விதமாக நாம் உணவு அருந்துவதன் காரணம் ஏன்?

நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுகளின் சத்துகள் எந்த முறையில் சாப்பிட்டால் அதிக நன்மை கிடைக்குமோ அந்த முறையில் தான் உணவை நாம் சாப்பிட வேண்டும். உதாரணத்திற்கு முட்டையை வேகவைத்து சாப்பிட்டால் தான் உடலில் விரைவில் ஜீரணமாகும். முழுமையான சத்து உடலில் சேரும்.

முட்டையை வேகவைக்காமல் பச்சையாக சாப்பிட்டால் சரியாக ஜீரணகிக்காமல் உடலிலும் சத்துகள் சேராது. அதே போல் பச்சை காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றை நாம் வேகவைக்கும் போது அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் வெளியேறிவிடுகிறது.

இதனால் நம் உடலில் சத்துகள் மிக குறைந்த அளவில் தான் சேர்கிறது. காய்கறியில் தான் அதிக வைட்டமின் சி சத்துகள் கிடைக்கிறது இருந்தாலும் காய்கறியை வேகவைப்பதன் மூலம் வைட்டமின் சி சத்துகள் வெளியேறுகிறது.

தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைத்தால் ? அற்புத நன்மைகள்..!

சரி நாம் சாப்பிடும் உணவின் சத்தானது குறையாமல் முழுமையாக நம் உடலில் சேர எந்த உணவு முறையை பயன்படுத்தலாம் என்று நாம் இங்கு காண்போம்.உணவு முறை

ஆரோக்கிய குறிப்புகள்..!

பச்சை காய்கறிகள்:

சில பச்சை காய்கறிகளான கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி போன்ற பச்சை காய்கறிகளை நாம் தினமும் பச்சையாக சாப்பிடலாம் இவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் (ஆரோக்கிய குறிப்புகள் health tips tamil) முழுமையாக நம் உடலில் சேரும்.

வேகவைத்து சாப்பிடும் காய்கறிகள்:

உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை வேகவைத்து சாப்பிட்டால் தான் முழுமையான சத்துகள் நம் உடலுக்குள் (ஆரோக்கிய குறிப்புகள் health tips tamil) செல்லும்.

மீன்:

மீன் துண்டுகளை குழம்பாக வைத்து சாப்பிடும் போது அவற்றில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நம் உடலுக்குள் முழுமையாக (ஆரோக்கிய குறிப்புகள் health tips tamil) கிடைக்கும்.

மீனை வறுத்தாலோ அல்லது மைக்ரோ ஓவனில் வைத்து சுட்டாலோ முழுமையான ஒமேகா 3 கொழுப்பு சத்து நம் உடலில் சேராது.

கிரில்லிங்:

கிரில்லிங் என்று சொல்லக்கூடிய முறையில் சூடாக்கப்பட்டு கோழி இறைச்சி தயாரிக்கப்படுகிறது. இந்த முறையில் வெப்பம் கீழ் இருந்து மேல் வரும். இது சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

ஆனால் கிட்டதட்ட 40 சதவீத சத்துகள் இந்த கோழி இறைச்சியிலிருந்து வழியும் கொழுப்பு சாறுடன் சேர்ந்து வெளியேறிவிடும். இதே போன்றுதான் ப்ராய்லிங் என்று சொல்லக்கூடிய இறைச்சி உணவுகளும் தயாரிக்கப்படுகிறது.

இந்த இரு உணவுகளிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிபொருட்கள் சேர்க்கப்படுகிறது. இதன் காரணமாக புற்று நோய்கள் உருவாகின்றது (ஆரோக்கிய குறிப்புகள் health tips tamil).

மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..!

மைக்ரோவேவ்:

மைக்ரோவேவ் பயன்படுத்தி சமைப்பது ஒரளவு நன்மையை தருகிறது (ஆரோக்கிய குறிப்புகள் health tips tamil). இவற்றில் விரைவில் சமைத்துவிடலாம் என்பதால் அதிக நேரமும் அதிக வெப்பமும் இந்த உணவுக்கு நிலைக் கொண்டிருக்காது.

இவற்றில் உணவுகள் பாதுகாக்கப்படுகிறது மற்றும் இவற்றில் சமைப்பதன் மூலமாக உணவுப் பொருட்களின் சத்துக்கள் ஒரளவு பாதுகாக்கப்படுகிறது. முக்கியமாக பூண்டு, காளான் போன்ற உணவுப்பொருட்களில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் பாதுகாக்கப்படுகிறது.

பேப்பர் ரோஸ்ட்:

தோசை சாப்பிடுவது பலருக்கு மிகவும் பிடிக்கும். ரோஸ்ட் என்றாலே பலருக்கு நினைவிற்கு வருவது சைவத்தில் தோசையும், அசைவத்தில் மட்டன் ரோஸ்ட்டும் தான் அனைவருக்கும் ஞபகத்திற்கு வரும்.

இவை மிதமான வெப்பத்தில் தயாரிக்கப்படுகிறது. எனவே இவற்றை அதிகம் உணவாக எடுத்துக்கொண்டால் வைட்டமின் குறைவு ஏற்படுவதில்லை (ஆரோக்கிய குறிப்புகள் health tips tamil).

பேக்கிங் உணவுகள்:

பேக்கிங் உணவான ரொட்டி, கேக், பிஸ்கெட், மப்பின் மற்றும் பப்ஸ் போன்ற உணவு பொருட்கள் பேக்கிங் முறையில் தாயரிக்கப்பட்டு கடைகளில் விக்கப்படுகிறது.

இந்த முறையில் அவற்றை நாம் சாப்பிடுவதால் வைட்டமின் சத்துகள் வெளியேறப்படுவதில்லை (ஆரோக்கிய குறிப்புகள் health tips tamil).

Stir frying:

இந்த உணவு தயாரிக்கப்படும் முறை நீண்ட கை கொண்ட கடாயில் போடப்பட்டு சிறிதளவு எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

இதை தொடர்ந்து கிளறி கொண்டே இருப்பதால் விரைவில் வெந்துவிடும்.

எனவே இதை தயாரிக்க அதிக வெப்பமும், அதிக தண்ணீரும் தேவையில்லை என்பதால் இவற்றில் உள்ள சத்துகள் வெளியேரப்படுவதில்லை.

அதனால் இந்த உணவை நாம் எடுத்துக் கொண்டால் முழுமையான சத்துகள் நம் உடலில் சேர்கிறது (ஆரோக்கிய குறிப்புகள் health tips tamil)..

Deep Frying:

இந்த உணவு அதிக வெப்பத்திலும், அதிக எண்ணெயும் சேர்க்கப்டுவதால், உணவுப்பொருட்களில் உள்ள சத்துகள் அனைத்தும் வெளியேற்றப்படுகிறது.

இந்த உணவு தயாரிக்கும் போது புதிதான விசப்பொருள் ஒன்று உருவாவதால் இதை உட்கொண்டால் புற்று நோயை ஒருவாக்கும் (ஆரோக்கிய குறிப்புகள் health tips tamil).

ஸ்டீமிங்:

இந்த முறை ஆவியின் மூலம் வேகவைக்கும் முறையாகும். இந்த உணவு முறை மிகசிறந்ததாக விளங்குகிறது.

இந்த உணவு முறையை சாப்பிடுவதால் முழுமையான ஊட்ச்சத்துகள் நம் உடலுக்குள் சேர்கிறது.

எனவே இவ்வாறு உணவு தயாரிக்கும் போது ஊட்டச்சத்துகள் வீணாகுவதில்லை (ஆரோக்கிய குறிப்புகள் health tips tamil).

ஒரு துண்டு நெல்லிக்காய் சாப்பிட்டால் அப்படி என்ன நன்மை கிடைக்க போகிறது?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> udal edai athikarikka tips