இயற்கை உணவு பட்டியல் | Iyarkai Unavugal List in Tamil
Organic Foods List in Tamil:- இந்த உலகில் வாழ்கின்ற பலருக்கு உடலில் எந்த ஒரு நோய்களும் இன்றி, வெகு காலம் வரை நல்ல ஆரோக்கியமாக வாழவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இருப்பினும் நாம் இப்பொழுது சாப்பிடும் உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் அனைத்தும் இந்த உலகில் நீண்ட நாள் வாழவேண்டும் என்ற ஆசைக்கு எதிராக உள்ளது. நமது உடலில் நோய் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணமே நாம் இப்பொழுது சாப்பிட்டு கொண்டிருக்கும் உணவு முறைதான். நாம் சாப்பிடும் உணவுகளினால், உடலில் கபம், வாதம், பித்தம் இவற்றின் அளவு இயல்பை விட கூடும்போதோ அல்லது குறையும்போதோ, நமக்கு நோய்கள் வருகின்றன. நாம் சாப்பிடும் உணவு நன்கு ஆரோக்கியமாக இருந்தாலே நமது உடலும் ஆரோக்கியமாக இருக்கும். நம் உடல் ஆரோக்கியமாக இருந்தால் நாம் இந்த உலகில் நீண்ட காலம் வரை ஆரோக்கியமாக வாழலாம். சரி இந்த பதிவில் இயற்கை உணவு பட்டியல்கள் சிலவற்றை பார்க்கலாம்.
எந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்..? |
இயற்கை உணவு பட்டியல்:
நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த வித இரசாயனங்களும் இல்லையென்றால் அது இயற்கை உணவு வகையை சேர்ந்தது தான். மேலும் என்னதான் இராசயனம் சேர்க்காத உணவாக இருந்தாலும் நாம் சாப்பிடும் உணவை அளவோடு தான் சாப்பிட வேண்டும். அதேபோல் இனிப்பு, உப்பு, கார்ப்பு, புளிப்பு இவற்றையும் அளவோடுதான் உபயோகப்படுத்த வேண்டும்.
காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்:
உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அத்துணை பேரும் காலையில் சாப்பிட வேண்டியவை என்னவென்றால்.. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அதிகளவு தண்ணீரை அருந்த வேண்டும்.
அதன் பிறகு சிறிது நேரம் கழித்து அருகம்புல் சாறு அல்லது புதினா சாறு அல்லது நீராகாரம் அல்லது நெல்லிச்சாறு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பருகலாம்.
காலையில் எடுத்துக் கொள்ளும் சத்தான உணவே நம்மை, அந்த நாள் முழுவதும் சுறு சுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். ஆகவே காலையில் இட்லி, தோசை போன்ற உணவுகளை எடுத்து கொள்வதற்கு பதில் முட்டை, தயிர், ஓட்ஸ், சியா விதை, பப்பாளி, ஆரஞ்சு, பிளாக்ஸ் விதை, கிரீன் டீ, பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுகளை காலையில் எடுத்துக்கொள்ளலாம்.
மதியம் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்:
மதிய உணவாக நாம் சாப்பிட வேண்டிய உணவு என்பது இனிப்பு, பழங்கள், காய்கறிகள், பருப்பு சாம்பார், ரசம் மற்றும் மோர் என்ற வரிசையில், நிறைவான உணவாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
மதியம் நேரத்தில் அவசியம் கைகுத்தல் அரிசி சாதம், இந்துப்பு சிறிது சேர்த்து, புளி சேர்க்காத, குறைந்த பருப்புகளும் அதிக காய்கறிகளும் கொண்ட காரமில்லாத சாம்பார், கீரைக்கூட்டு, காய்கறி பொரியல் போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.
மாலை நேரத்தில்:
பின் டீ, காபி போன்ற பானங்களை அருந்துவதை முற்றிலும் தவிர்த்து விட்டு ராகி, கேள்வரகு, சத்து மாவு போன்றவற்றில் கஞ்சி தயார் செய்து அருந்தலாம்.
இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய இயற்கை உணவுகள்:
இரவு நேரங்களில் பொதுவாக அனைவரும் கோதுமையில் செய்ய கூடிய உணவுகளை எடுத்து கொள்ளலாம் இருப்பினும் அவற்றில் எண்ணெய் அதிகம் சேர்க்க வேண்டும். அல்லது தேங்காய், கருப்பட்டி கலந்த உலர் பழங்கள் கொண்ட பழக்கலவை மட்டும் எடுத்துக் கொள்வதும் நல்லது.
குறிப்பு:
- உணவில் இனிப்பு சுவைக்கு நீங்கள் சர்க்கரையை பயன்படுத்துவதற்கு பதில், கருப்பட்டி, வெல்லம், நாட்டு சர்க்கரை, தேன் போன்றவற்றை மட்டும் பயன்படுத்துங்கள்.
- உணவு உட்கொள்ளும் அரைமணி நேரம் முன்பு டீ அல்லது காபி போன்ற எந்த ஒரு பானத்தையும் அருந்தக் கூடாது. அதேபோல், உணவு அருந்திய பின் ஒரு மணி நேரம் இடைவெளி விட்ட பிறகு இது போன்ற பானங்களை அருந்த வேண்டும்.
- உணவுக்குப் பின் சிறிய நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
- உணவருந்தும் போது தரையில் அமர்ந்து சம்மணமிட்டு சாப்பிட வேண்டும். மேலும் உணவை சுவைத்து நன்கு மென்று உண்ணவேண்டும், கட்டாயம் டிவி பார்த்துக்கொண்டோ, பேசிக்கொண்டோ, அல்லது கவலையிலோ சாப்பிடக்கூடாது.
40 கீரை வகைகள் அதன் பயன்களும்..! |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |