இரத்த சோகை குணமாக உடனடி தீர்வு..!

Advertisement

இரத்த சோகை குணமாக

இரத்த சோகை நீங்க – உடலில் இரத்தத்தின் அளவானது குறைவாக இருந்தால், அதனை இரத்த சோகை நோய் அல்லது அனீமியா (anemia) என்று சொல்வார்கள். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், அவற்றை ஒருசில அறிகுறிகளை வைத்தே சரியாக சொல்லலாம்.மேலும் இந்த அனீமியாவானது உடலில் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவை சரியான ஊட்டசத்துக்கள் இல்லாதது, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவை முக்கிய காரணங்கள் என்று சொல்லலாம்.

இதையும் படிக்கவும்  அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..?

 

இரத்த சோகை குணமாக (Anemia Treatment In Tamil) உடனடி தீர்வு..!

இரத்த சோகை நீங்க – தேன்:

  • இந்த இரத்த சோகை நோய்  என்றதும் பல வகையான மத்திரையை முழுங்குபவர்கள் அதற்கு பதிலாக நமக்கு கிடைத்த இயற்கை பிரசாதமான தேன் நிரந்தர தீர்வு அளிக்கிறது. நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த ஜூஸ் குடித்து வர வேண்டும்.
  • தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் சாப்பிடக்கூடாது. அதாவது காலை 30 கிராம், மதியம் 40 கிராம் மற்றும் இரவு 30 கிராம் என்ற அளவில் பிரித்து உட்கொள்ள வேண்டும்.
  • தேனை ஏதாவது ஒரு ஜூஸ், பால் அல்லது தண்ணீரில் கலந்து ஒரு மாதம் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வர உடலில் சிவப்பணு அதிகரிக்க செய்து இரத்த சோகை குணமாகும்.

இரத்தசோகை குணமாக தேன் மற்றும் இஞ்சி:

  • இரத்த சோகை நீங்க தேனுடன் கொஞ்சம் இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சைப்பழம் இரண்டையும் சேர்த்து ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கி எளிதில் ஜீர்ணகிக்க உதவுகிறது. மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் அதிகரிக்கும் தன்மை தேனிற்கு உள்ளது.
  • தேனை தினமும் அரை டம்ளர் அல்லது சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி வரை) வெண்ணீரில் அல்லது அதே அளவு கொதிக்க வைத்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன் வரை தேன் கலந்து இரவு படுக்கும் முன் குடிக்க வேண்டும்.
  • இவ்வாறு அருந்துவதனினால் இரத்த சோகை நீங்க ஆரம்பிக்கும் (anemia treatment in tamil).
இதையும் படிக்கவும்  அல்சர் குணமாக பாட்டி வைத்தியம்.! Ulcer Tamil Maruthuvam

இரத்த சோகை குணமாக சத்துள்ள கீரை வகைகள்:

  • இரத்த சோகை நீங்க தினமும் அதிகளவு இரும்பு சத்து உள்ள கீரை வகையான முருங்கைக்கீரை, அரைக்கீரை, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, அகத்திக்கீரை, பொன்னாங்கன்னிக்கீரை போன்ற கீரைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு சத்துள்ள கீரை வகைகளை தினமும் அன்றாட உணவுகளில் எடுத்து கொள்வதினால் இரத்த சோகை நோய்  சரியாகும்.

இரத்த சோகை குணமாக சத்துள்ள பழங்கள்:

  • இரத்த சோகை நீங்க தினமும் சத்துள்ள பழங்களை அதிகளவு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
  • அதாவது தினமும் திராட்சை, பேரீச்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திபழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள் மற்றும் நெல்லிகனி போன்ற பழங்களை அதிகமாக தினமும் சாப்பிட வேண்டும்.
  • மேலும் அதிகளவு முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுந்தங்களி, பாதாம், பிஸ்தா போன்றவை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • காய்கறி சாலட்டுகள் அடிக்கடி சாப்பிட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு பருவ வயது வரையும் அதற்கு பின்பும் கொடுத்து வந்தால் இரத்த சோகை நீங்க ஆரம்பிக்கும்.

இரத்தசோகை குணமாக தக்காளி:

  • இரத்த சோகை குணமாக தக்காளிச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் இவை அனைத்தையம் ஒன்றாக கலந்து சம அளவு எடுத்துக் கொண்டு காலை, மாலை என்று இரண்டு முறை 30 மில்லி அளவு குடித்து வந்தால் நம் உடலில் இரத்த அளவு அதிகரிக்கும்.
  • இந்த முறையை பின் பற்றி வந்தால் இதயம் வலிமையடையும், கல்லீரல் பலம் பெறும்.
  • இது காசநோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. தக்காளியை தினமும் பச்சையாக சாப்பிட்டு வர சிறு வயதில் ஏற்படும் முக சுருக்கம் குணமாகும், சொரி மற்றும் சிரங்கு குணமாகும்.
  • தக்காளியை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சப்பிட்டு வந்தால் பித்தத்தை சமப்படுத்தும்.
  • தக்காளிளை தினமும் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள உறுப்புகள் பலம் பெறும்.
 இதையும் படிக்கவும்  இயற்கையான முறையில் தலைவலியை எப்படி குணப்படுத்தலாம்?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement