உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வழிமுறைகள் !!!

Advertisement

உடலை பாதுகாப்பது எப்படி ?

அனைவருமே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்போம் ஆனால் பின்பற்ற மாட்டோம். இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் சாதாரணமாக நம்மால் அனைத்து வேலைகளையும் செய்யமுடியும். அதாவது உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தால்தான் நம்மால் எந்த ஒரு காரியத்தையும் செய்யமுடியும்.

கால் விரல் சொத்தை விழுவதன் காரணம், சொத்தை நகத்தை குணப்படுத்தும் முறை !!!

எனவேஉடல் ஆரோக்கியமாக இருக்க சில எளிய வழிமுறைகள்.

1. தினமும் சில எளிய உடற்பயிற்சி:

உடல் ஆரோக்கியமாக இருக்க (body health tips tamil):- உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்வதல்ல, தினசரி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம்.

அதாவது படிகளில் ஏறி இறங்குவது, அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப் பயிற்சி என எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.

2. உணவு முறை:

உடல் ஆரோக்கியமாக இருக்க (Body health tips tamil) :- அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், தினமும் மூன்று அல்லது நான்கு வேலை மூக்கு முட்ட அசைவ உணவை வயிற்றுக்குள் திணிப்பதை இன்றுடன் விட்டுவிடுங்கள்.

அதாவது வாயை அடக்கி கொண்டு ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

தினமும் 5 முறை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள். பெரும்பாலானவை வேக வைக்காததாக இருக்க வேண்டியது முக்கியம்.
சில காய்கறிகள் பாதி வேக வைத்து உண்ணலாம்.

3. வரைமுறை இல்லையா டீ மற்றும் காபிக்கு:

உடல் ஆரோக்கியமாக இருக்க (Body health tips tamil):- எதற்கெடுத்தாலும், எங்கு சென்றாலும், யாராவது வீட்டிற்கு வந்தாலும் ஒரு டீ அல்லது காபி குடிப்போம் என்ற எண்ணத்தை இன்றுடன் விட்டுவிடுங்கள்.

அதற்கு பதிலாக எலுமிச்சை சாறு, செயற்கை இனிப்பு கலக்காத பழச்சாறு மற்றும் கீரின் டீ போன்றவற்றை அருந்தலாம்.

4. முக்கியமாக நல்ல பழக்கவழக்கங்கள்:

உடல் ஆரோக்கியமாக இருக்க (Body health tips tamil) :- புகை பிடித்தல், மது அருந்துதல், எதிர் மறை எண்ணங்கள் போன்றவை அனைத்துமே உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை.

எனவே நல்ல பழக்கவழக்கங்களை கற்று கொள்வது மிகவும் நல்லது.

5. கொழுப்பு நிறைந்த உணவுகளை தூக்கியெறியவும்:

உடல் ஆரோக்கியமாக இருக்க (Body health tips tamil) :- சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா போன்ற அதிக கொழுப்பு உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள்.

நலமான வாழ்வுக்கு உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம், அதற்கு தேவையற்ற கொழுப்பு பொருட்களை ஒதுக்குவது மிக மிக அவசியம்.

அல்சர் குணமாக பாட்டி வைத்தியம் ..! Ulcer Tamil Maruthuvam

6. அதிக உப்பு ரொம்ப தப்பு:

உடல் ஆரோக்கியமாக இருக்க (body health tips tamil):- அளவுக்கு அதிகமான உப்பு உடலில் பல்வேறு நோய்களைக் கொண்டு வரும். அதிகம் உப்பை உட்கொள்ளும் போது உடலில் சோடியம் அளவு அதிகரிக்கிறது, இது மினரல்களின் சமநிலையைப் பாதிக்கிறது.

உயர் இரத்த அழுத்தத்துக்குக் கூட இது காரணமாகி விடுகிறது. எனவே அதிக உப்பு ரொம்ப ரொம்ப தப்பு என மனதுக்குள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

7. உணவு உண்ணும் முறை:

உடல் ஆரோக்கியமாக இருக்க (Body health tips tamil):- நாம் தினமும் உண்ணும் உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் தேவையற்ற கொழுப்பு சேர்வதிலிருந்தும், வாயுத் தொல்லை, செரிமானப் பிரச்சினை போன்ற அனைத்திலிருந்தும் அது உங்களை காக்கும்.

மேலும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீரை குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது மிகமிக நன்மையை தரும்.

8. இனிப்பு தீனியை அளவுடன் வைத்துக்கொள்ளவும்:

உடல் ஆரோக்கியமாக இருக்க (Body health tips tamil):- இனிப்பு சுவை உள்ள தீனியை அதிகம் சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது கொழுப்பு, இன்சுலின், டிரைகிளைசெரிட்ஸ் போன்றவற்றின் அளவு உடலில் அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்கச் செய்கிறது.

9. எலும்புகள் வலிமை பெற:

உடல் ஆரோக்கியமாக இருக்க :- உடலில் எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது மிக முக்கியம். உடலில் எலும்புகள் வலிமையாக இல்லை என்றால்.

ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு உடைவு நோய் வந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி விடும்.

எனவே உடலுக்குக் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கக் கூடிய உணவுகளை தவறாமல் உண்ணுங்கள். மேலும் காலை வெயிலிலும் கொஞ்ச நேரம் உலவுங்கள் வைட்டமின் டி இலவசமாய்க் கிடைக்கும்.

10. ஆரோக்கியமான உடலுக்கு:

உடல் ஆரோக்கியமாக இருக்க :- தேவையான அளவு ஓய்வு, தூக்கம், மன அமைதி ஆகியவை மிகமிக அவசியம். உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செயல்களை தினமும் சற்று நேரம் செய்யுங்கள்.

இவையே ஆரோக்கியமான உடலுக்கு சிறந்த வழியாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement