உடல் எடை குறைய உணவு அட்டவணை

Advertisement

 உடல் எடை குறைய எளிய வழிகள்

நம்மில் பலர் உடல் எடையை கச்சிதகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக பலவகையான டிப்ஸை பாலோ செய்து உடலை அதிகளவு வருத்திக்கொள்கின்றன. உடல் எடையை குறைக்க என்னதான் பலவகையான டிப்ஸை பாலோ செய்தாலும் அவர்களது உடல் எடை குறைவதில்லை. இதனால் பலர் மன உளைச்சலை சந்திக்கிறார்கள். இருப்பினும் யாராக இருந்தாலும் சரியான டயட் முறையையும், முறையான உடற்பயிற்சியையும் பாலோ செய்தாலே மிக எளிதாக உங்களது உடல் எடையை ஓரளவு குறைத்துவிட முடியும். சரி இந்த பதிவில் உடல் எடை குறைய உணவு அட்டவணை பற்றி பார்க்கலாம். வாரம் ஏழு நாட்களில் நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் அட்டவணையை இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

உடல் எடை குறைய உணவு அட்டவணை – Weight Loss Tips in Tamil in One Week

உடல் எடை குறைய உணவு அட்டவணை – முதல் நாள் திங்கட்கிழமை:

காலை நீங்கள் எழுந்தவுடன் பிரஸ் ஆகிட்டு சிறிது நேரம் அதாவது குறைந்தது 1/2 மணி நேரமாவது நடைபெயர்ச்சியை மேற்கொள்ள வேண்டும்.

அதன்பிறகு வெயிட் லாஸ் ட்ரிங்க்ஸ் அருந்த வேண்டும். அதாவது முதல் நாள் இரவு 1/2 ஸ்பூன் வெந்தயம், 1/2 ஸ்பூன் சீரகம் மற்றும் 1/2 ஸ்பூன் கொள்ளு ஆகியவற்றை சேர்த்து நன்றாக ஊறவைக்கவும். பின் மறுநாள் காலை அதனை நன்கு கொதிக்கவைத்து வடிகட்டவும். பின் மிதமான சூட்டில் அந்த நீரில் 1/2 ஸ்பூன் தேன், அரைமூடி எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இந்த பானத்தை காலை உணவு சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் அருந்த வேண்டும். இது ஓரு சிறந்த வெயிட் லாஸ் ட்ரிங்க்ஸ் அப்படினு சொல்லலாம். இந்த பானமே உங்களது உடல் எடையை குறைக்க உதவும். இந்த பானத்தை மட்டும் தினமும் காலை வெறும் வயிற்றில் பருகிவந்தாலே போதும் உடல் எடை சீக்கிரம் குறைய ஆரம்பிக்கும்.

காலை உணவு: புதினா சட்னியுடன் 3 இட்லி சாப்பிடலாம்.

மதிய உணவு: ஏதாவது ஒரு தானியம் மற்றும் காய்கறியுடன் ஒரு தானிய ரொட்டி எடுத்துக்கொள்ளலாம்.

இரவு உணவு: காய்கறி கலவை / கோழிக்கறி மற்றும் தானிய ரொட்டி. இதனுடன் கீரை சாலட் அல்லது சிக்கன் குழம்பை சேர்த்துக் கொள்ளலாம்.


உடல் எடை குறைய உணவு அட்டவணை – இரண்டாம் நாள் செவ்வாய்க்கிழமை:

காலை எழுந்ததும் சிறிது நேரம் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை செய்யுங்கள் பின் மேல் கூறப்பட்டுள்ள பானத்தை செய்து அருந்துங்கள்.

அதன் பிறகு காலை உணவாக  காய்கறி கலவையுடன் கடலைப் பருப்பில் செய்த அப்பம், இதனுடன் ஒரு கிளாஸ் பால் / முட்டை சேர்த்துக்கொள்ளலாம்.

மதியம் உணவாக பழுப்பு அரிசி சாதம் மற்றும் கொண்டை கடலை குருமா சேர்த்துக் கொள்ளவும்.

இரவு உணவாக முளைக்கட்டிய பயிறு சாலடோடு கிச்சடி அல்லது பரோட்டா சேர்த்துக் கொள்ளலாம்.

1 வாரத்தில் உடல் எடை குறையணுமா..!

உடல் எடை குறைய உணவு அட்டவணை – மூன்றாம் நாள் புதன்கிழமை:

காலை எழுந்தவுடன் ப்ரஸ் ஆக்கிவிட்டு வெறும் வயிற்றில் அந்த வெயிட் லாஸ் ட்ரிங்ஸை அருந்துங்கள் பின் சிறிது நேரம் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

அதன்பிறகு காலை உணவாக ஆப்பிள் மற்றும் இலவங்கப்பட்டை சாறு மற்றும் காய்கறி சாம்பாருடன் ஊத்தாப்பம் சாப்பிடலாம்.

மதியம் உணவாக எதாவது ஒரு அசைவம், காய்கறி கலவை மற்றும் ரொட்டி சாப்பிடலாம்.

இரவு உணவாக பழுப்பு அரிசி சாதம், சத்துள்ள காய்கறி குழம்பு சாப்பிடலாம்.

தொப்பை குறைய 15 வழிகள்..!

உடல் எடை குறைய உணவு அட்டவணை – நான்காம் நாள் வியாழக்கிழமை:

காலை உணவாக நறுக்கிய பழங்கள் மற்றும் சூரியகாந்தி விதைகள் அல்லது சத்துள்ள காய்கறி கூட்டு செய்து சாப்பிடலாம்.

மதிய உணவாக காய்கறி கூட்டு மற்றும் குருமா அல்லது தானிய ரொட்டியுடன் அசைவ குருமா மற்றும் பழுப்பு அரிசி சாதத்தை எடுத்துக் கொள்ளலாம்.

இரவு உணவாக காய்கறி கலவை / கோழிக்கறி மற்றும் தானிய ரொட்டி. இதனுடன் கீரை சாலட் அல்லது சிக்கன் குழம்பை சேர்த்துக்கொள்ளலாம்.

வெந்தியம் ஒரு ஸ்பூன் போதும் 3 கிலோ வரை தொப்பை குறைய..!

உடல் எடை குறைய உணவு அட்டவணை – ஐந்தாம் நாள் வெள்ளிக்கிழமை:

காலை உணவாக காய்கறிகள் மற்றும் ஒரு கிளாஸ் பால் அல்லது 3 முதல் 4 பருப்பு தானிய உருண்டைகள் மற்றும் சாம்பார் சாதம் செய்து சாப்பிடலாம்.

மதிய உணவாக பழுப்பு அரிசி சாதம் மற்றும் காய்கறி சாம்பார்.

இரவு உணவாக உருளைக்கிழங்குடன் கோழிக்கறி மற்றும் காய்கறி கலவைகள் அல்லது கோழிக்கறி அல்லது 2 ரொட்டிகள் செய்து சாப்பிடலாம்.

தொப்பை குறைய வேண்டுமா இந்த Magical காபி குடிங்க போதும்

உடல் எடை குறைய உணவு அட்டவணை – ஆறாம் நாள் சனிக்கிழமை:

காலை உணவாக அவகோடா மற்றும் நறுக்கிய பப்பாளி அல்லது பருப்பு கலந்த காய்கறி கூட்டுடன் கோதுமை பரோட்டா செய்து சாப்பிடலாம்.

மதிய உணவாக இறைச்சி மற்றும் பழங்கள் அல்லது காய்கறி சாலட் சாப்பிடலாம்.

இரவு உணவாக முளைக்கட்டிய பயிறு சாலடோடு கிச்சடி அல்லது பரோட்டா சேர்த்துக் கொள்ளலாம்.

5 நாளில் உங்கள் எடை குறைய உருளைக்கிழங்கு தான் சிறந்த வழி..!

உடல் எடை குறைய எளிய வழிகள் – ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை:

காலை உணவாக ஒரு மாம்பழம் மற்றும் ஒரு கிளாஸ் பால் அல்லது பழங்கள் கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடலாம்.

மதிய உணவாக முழு தானிய ரொட்டியுடன் காய்கறி சூப் அல்லது ஒரு கிண்ணம் தினை மற்றும் தானிய கிச்சடி செய்து சாப்பிடலாம்.

இரவு உணவாக மசாலா சேர்க்கப்பட்ட காய்கறி அல்லது அசைவ உணவு (கோழி அல்லது கடல் உணவுகள்) சாப்பிடலாம்.

இந்த டயட் முறையை சரியாக பின்பற்றி வர ஒரு மாதத்திற்குள் தங்களது உடல் எடையை குறைந்துவிடலாம் நன்றி..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil
Advertisement