உடல் சூடு அதிகமாக இருப்பதைக் காட்டும் சில அறிகுறிகள்

Advertisement

உடல் சூடு அறிகுறிகள் 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் உடல் சூடு அதிகமாக இருப்பதை கண்டுபிடிப்பதற்கான சில அறிகுறிகளை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். உடல் சூடு என்பது சூடாக இருக்கும் வரை எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது. உடல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு இல்லாமல் அதிகம் வெப்பத்தை தரும் பொழுது உடலில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களே கிடையாது, அந்தவகையில் ஸ்மார்ட் போன்கள் அதிகம் உபயோகிப்பதாலும், கணினிகளில் வேலை செய்பவர்களுக்கும் உடலில் உஷ்ணகள் ஏற்படுகிறது. மேலும் உடல் சூட்டின் அறிகுறிகள் மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை பார்க்கலாம்.

உடல் சூடு குறைய சாப்பிட வேண்டிய உணவுகள்

 

உடல் உஷ்ணம்:

உடல் உஷ்ணம் என்பது நம் உடல் இயக்கத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். நம் உடலில் உள்ள உறுப்புகள் சீராக இயங்குவதற்கும், ஜீரண வேலைகள் சரியாக நடக்குவதற்கும் முக்கியமான ஒன்றாக வெப்பம் தேவைப்படுகிறது. இதிலும் அளவுக்கு அதிகமாக காணப்படும் உடல் உஷ்ணம் உடலுக்கு பல பாதிப்புகளையும் தரக்கூடியதாக இருக்கிறது.

நம் உடல் ஆனது வாதம், பித்தம், கபம் இதனுடைய அடிப்படையில் தான் இயங்குக்குகின்றது. இதில் பித்தங்கள் அதிகரிக்கும் பொழுது உடலில் சூடு ஏற்படுகிறது.

உடலில் அதிக சூடு ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் நாம் அன்றாட வாழ்வில் உண்ணக்கூடிய சில உணவுகளே இதற்கு முக்கிய காரணமாகும்.

உடல் சூடு அதிகமானால்:

உடலில் அதிகமாக சூடு ஏற்படும் பொழுது பித்தப்பையில் பாதிப்புகள் ஏற்படும். அதோடு கல்லீரலும் பாதிக்கப்படுகிறது.

உடலில்  சூடு அதிகரிக்கும் பொழுது கண்களில் எரிச்சல், வாய்ப்புண், தூக்கமின்மை, வயிற்று வலி, குமட்டல் இது போன்ற சாதாரண அறிகுறிகள் ஏற்படும். இது போன்ற பாதிப்புகள் ஏற்படும் பொழுதே சரி செய்துகொள்வது நல்லது.

மேலும் உடல் சூடு இன்னும் அதிகமாக அதிகரிக்கும் பொழுது மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், வயிற்று எரிச்சல், சிறுநீரக எரிச்சல், சிறுநீரக தாரை எரிச்சல், மூலநோய், மலக்குடல் எரிச்சல் போன்றவை ஏற்படும்.

மாதவிலக்கு நாட்களில் உடல் சூடு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது, இல்லையன்றால் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகள்:

உடலில் சூட்டை அதிகரிக்கும் புளிப்பு, உப்பு, காரம் போன்றவற்றை அதிக அளவு சாப்பிடும் பொழுது உடலில் அதிக அளவு உஷ்ணங்களும் ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி டீ, காபி, கருவாடு, புளித்த மோர்,வினிகர், ஊறுகாய் போன்றவற்றை அதிகமாக சாப்பிடும் பொழுது உடலில் சூடு ஏற்படுகிறது.

மது பழக்கம், புகை பழக்கம் போன்றவற்றாலும் உடலில் அதிக சூடுகள் ஏற்படுகிறது.

உடல் சூட்டை குறைக்க வழிகள்:

நம் உடலில் அதிகமாக சூடு ஏற்படும் பொழுது நீர் சத்துக்கள் அதிகம் நிறைந்த காய்கறிகளான புடலங்காய், வெள்ளரிக்காய், வெண்பூசணி, முள்ளங்கி போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அதுமட்டுமின்றி இளநீர் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.

கீரை வகைகளான மணத்தக்காளி கீரை, பொன்னாக்கண்ணி கீரை போன்றவை  உணவில் எடுத்துக்கொள்ளும் பொழுது உடலில் உள்ள உஷ்ணகளை கட்டுப்படுத்த உதவிக்கிறது.

உடல் சூட்டை தணிக்க சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, நார்த்தம்பழம் போன்றவை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.

உடல் முழுவது ஏற்படக்கூடிய சூட்டை தணிப்பதற்கு வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement