உடல் நோய் அறிகுறிகள் ..!
நமது உடல் உறுப்பானது ஒவ்வொரு செயல்களை செய்கிறது. அவ்வாறு இருக்கையில் நமது உடல் உறுப்புகள் பழுதடைந்தால் நிச்சயம் நோய் வந்து தாக்கும்.
எனவே நமது உடல் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய் என்று தெரிந்துகொள்ளலாம்.
உடல் நோய் அறிகுறிகள் 1 – கண்கள் வீங்கி இருந்தால் என்ன நோய் என்று தெரிந்து கொள்ளலாம்:
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது.
சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை.
அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும்.
இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
கால் விரல் நகம் சொத்தை காரணம் மற்றும் குணப்படுத்தும் முறை !!! முழு விளக்கம் !!!
இந்த பிரச்சனையை சரி செய்ய:
உணவில் அதிகம் உப்பு சேர்க்க கூடாது. மேலும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதினால் சிறுநீரகத்தை சரி செய்ய உதவும்.
உடல் நோய் அறிகுறிகள் 2 – கண் இமைகளின் வலி:
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
இந்த பிரச்சனையை சரி செய்ய:
அதிகளவு ஒய்வு எடுக்க வேண்டும். மேலும் உணவில் முட்டை கோஸ் மற்றும் கீரைகளை அதிகளவு சேர்த்து கொள்ளவேண்டும்.
உடல் நோய் அறிகுறிகள் 3 – கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்:
அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது.
அந்த டென்ஷனால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது.
அந்த நேரத்தில் நமக்கு அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
பிரச்சனையை சரிசெய்ய:
எப்பொழுதும் நிமிர்ந்து நிக்க வேண்டும். மேலும் அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தை குறைத்து கொள்ள வேண்டும்.
உடல் நோய் அறிகுறிகள் 4 – கண்கள் உலர்ந்து போவது:
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் அப்போது நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
இந்த பிரச்சனையை சரிசெய்ய:
குறைந்தது 8 மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம்.
தினமும் கண்களை மேலும் கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய கண்களுக்கான உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
உடல் நோய் அறிகுறிகள் 5 – தோலில் தடிப்புகள் ஏற்படுதல்:
தோலில் தடிப்புகள் ஏற்பட்டால் இருதய நோயாக இருக்க கூட வாய்ப்பு இருக்கிறது.
அதுவும் காது பக்கத்தில் இருக்கும் தோள்களில் தடிப்புகள் ஏற்பட்டிருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு இருதய கோளாறு இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
இவற்றை சரி செய்ய:
அதிகப்படியான மன அழுத்தத்தின் காரணமாக ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும்.
எனவே மனதினை அமைதியாக வைத்து கொள்வதன் மூலமும் இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வை அணுகுவதன் மூலமும் குணப்படுத்த முடியும்.
உடல் நோய் அறிகுறிகள் 6 – தோல் இளமஞ்சளாக மாறுவதன் காரணத்தினால்:
கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை.
இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
இவற்றை சரி செய்ய:
அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சனை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.
ஜிம்மிற்கு செல்லாமலேயே உடலை வலுப்படுத்த எளிய பயிற்சிகள் !!!
உடல் நோய் அறிகுறிகள் 7 – முகம் வீக்கமாக இருப்பதன் காரணமாக:
உடலில் நீர் சத்து குறைவின் காரணமாக இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
எனவே உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கவேண்டும்.
இவற்றை குணப்படுத்த:
உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடல் நோய் அறிகுறிகள் 8 – பாதம், கை, கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி?
சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது.
இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
இவற்றை சரி செய்ய:
வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.
உடல் நோய் அறிகுறிகள் 9 – நகங்களில் குழிவிழுந்தால்:
சோரியாஸிஸ் இருக்கிறது என்று அர்த்தம். இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும்.
இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
இவற்றை சரி செய்ய:
சிறந்த தோல் மருத்துவரிடம் சென்று இந்த பிரச்சனைக்கான தீர்வினை காணவும்.
மேலும் தெரிந்துகொள்ள பகுதி – 2ஐ படிக்கவும். பகுதி – 2 க்கு கீழே கிளிக் செய்யவும்.
உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய்? என்று தெரிந்துகொள்ளலாமா.?? – பகுதி – 2
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |