உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய்? என்று தெரிந்துகொள்ளலாமா.?? – பகுதி – 2

உடல் நோய் அறிகுறிகள்

உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய்? என்று தெரிந்துகொள்ளலாமா.?? – பகுதி – 2

உடல் நோய் அறிகுறிகள் :-

நாம் உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய்? என்று தெரிந்துகொள்ளலாமா.?? என்று ஏற்கனவே பகுதி – 1ல் பார்த்தோம். இது அந்த தொடரின் பகுதி – 2 ஆகும். பகுதி – 1 ஜ படிக்க கீழே கிளிக் செய்யவும்.

உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய்? என்று தெரிந்துகொள்ளலாமா.?? – பகுதி – 1

உடல் நோய் அறிகுறிகள் 1 – பாதங்கள் மட்டும் மறத்து போனால் என்ன நோய்?

நீரிழிவு நோயாக இருக்கலாம்.

இதன் காரணமாக இரத்தத்தில் இருக்கும் செல்களை பாதிப்பதுடன், நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்துவிடுகிறது.

கால்களில் அணியும் செருப்புகள் உரசும் போது எரிச்சலோ அல்லது வலியோ கூட ஏற்படும்.

நீரிழிவு நோய் சரி செய்ய:

பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும்.

உடல் பருமனும்கூட டயாபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

உடல் நோய் அறிகுறிகள் 2 – பாதங்களின் உலர்ந்த வெடிப்புகளுக்கு என்ன நோய்?

தைராய்டு பிரச்சனையாக இருக்கலாம், தைராய்டு சுரப்பிகள்தான் நம் தோள்களுக்கு தேவையான ஹார்மோன்களை வழங்குகிறது.

எனவே தைராய்டு சுரப்பிகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால், நம் பாதங்களின் தோல் உலர்ந்து வெடிப்புகள் ஏற்படும்.

இந்த பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

தைராய்டு பிரச்சனையை சரி செய்ய:

தைராய்டு பிரச்சனைக்கு வேறு சில காரணங்களும் இருக்கிறது அவை அதிக உடல் சோர்வு மற்றும் உடல் பருமன் அதிகரித்தல் இவற்றில் எந்த அறிகுறிகளாக இருந்தாலும் மருத்துவரிடம் சென்று சிகிச்சைபெறுவது மிகவும் நல்லது.

ஜிம்மிற்கு செல்லாமலேயே உடலை வலுப்படுத்த எளிய பயிற்சிகள் !!!

உடல் நோய் அறிகுறிகள் 3 – உள்ளங்கை சிவப்பாக இருந்தால் என்ன நோய்?

கல்லீரல் பிரச்சனை இருந்தால் இந்த உடல் நோய் அறிகுறிகள் இருக்கும்.

இதன் காரணமாக கல்லீரலால் நம் இரத்தத்திற்கு ஹார்மோன்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும்.

இதன் விளைவாக இரத்தத்தில் நிறம் அதிக சிவப்பாகிவிடும்.

உங்களது உள்ளங்கையின் நிறத்தை வைத்தே உங்களுக்கு கல்லீரல் பிரச்சனைவுள்ளது என்று கண்டுபிடித்து விடலாம்.

கல்லீரல் பிரச்சனை சரி ஆக:

கீழாநெல்லி கீரையை வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டு வர கல்லீரல் பிரச்சனை குணமாகும்.

உடல் நோய் அறிகுறிகள் 4 – வெளுத்த நகங்களுக்கு என்ன நோய்?

இரத்த சோகை இருக்கிறது என்று அர்த்தம்.

இரத்தத்தில் உள்ள சிவப்பணு குறைவின் காரணமாக இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

இதன் காரணமாகவே நகங்கள் வெளுத்த நிறத்தில் காணப்படும்.

இரத்த சோகை சரியாக :

இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் ஈரல், கீரை வகைகள், மற்றும் இறைச்சி உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

அல்லது:

டாக்டரின் ஆலோசனையின் படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

உடல் நோய் அறிகுறிகள் 5 – விரல் முட்டிகளில் வலி ஏற்பட்டால் என்ன நோய்?

ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி பிரச்சனைவுள்ளது என்று அர்த்தம்.

இந்த நோயின் காரணமாக விரல் முட்டிகளில் அதிக வீக்கமும் மற்றும் வலியும் ஏற்படும்.

குறிப்பாக இது வயதானவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் இந்த பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது.

மூட்டுவலி குணமாக :

உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் பி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம்.

ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

உடல் நோய் அறிகுறிகள் 6 – வாய் ஈறுகளில் இரத்தம் வந்தால் என்ன நோய்?

பல் ஈறு சம்மந்தப்பட்ட நோய் இருக்கிறது என்று அர்த்தம்.

ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும்.

பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

பல் ஈறு சம்மந்தப்பட்ட நோய் சரியாக :

தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்கள் கரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

உடல் நோய் அறிகுறிகள் 7 – சாப்பிடும்போது வாய் முழுவதும் வலி ஏற்பட்டால் என்ன நோய்?

இந்த உடல் நோய் அறிகுறிகள் இருந்தால் வாய்ப்புண் இருக்கிறது என்று அர்த்தம்.

அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம்.

உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும் இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

வாய்ப்புண் சரியாக:

மல்டி விட்டமின் மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் வலியை குறைக்கலாம்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

உடல் நோய் அறிகுறிகள் 8 – வாய் ஈரப்பசை இன்றி உலர்ந்து போனால் என்ன நோய்?

உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

மேலும் அதிகப்படியான வேர்வை மற்றும் நீரிழிவு நோயின் காரணமாகக்கூட வாய் வறண்டு காணப்படும்.

இந்த பிரச்சனையை குணப்படுத்த:

உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

தினமும் 1 1/2 லிட்டர் தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம். மேலும் பழங்களையோ அல்லது பழச்சாரையோ அருந்துவது மிகவும் நல்ல பலன் கிடைக்கும்.

அல்சர் குணமாக பாட்டி வைத்தியம் ..! Ulcer Tamil Maruthuvam

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

SHARE