வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எய்ட்ஸ் பரவும் வழிகள்..!

Updated On: May 29, 2023 12:44 PM
Follow Us:
Aids Paravum Valigal
---Advertisement---
Advertisement

எய்ட்ஸ் பரவும் வழிகள்..!

எய்ட்ஸ் நோய் என்றவுடன், அதனால் உடலளவில் பாதிப்பு ஏற்படுவதை விட, மனதளவில் தான் அதிகம் பாதிப்பு முதலில் ஏற்படும்.  எய்ட்ஸ் என்பது பல நோய்களின் ஒரு கூட்டுத் தொகுப்பாகும். அது ஒரு உயிர்க்கொல்லி நோய், நோய் ஏற்பட்டுவிட்டால் குணப்படுத்த சிகிச்சை ஒன்றும் கிடையாது. ஆனால் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை மூலம் வாழ்நாளை நீட்டிக்க செய்யலாம்.

எனவே எய்ட்ஸ் நோயினைப் பற்றிய விவரங்களை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

எய்ட்ஸ் என்ற சொல்லின் பொருள்

  • Acquired – A ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவர் பெற்றுகொள்வது
  • Immune – I உடலின் எதிர்ப்பு சக்தி
  • Deficiency – D குறைத்துவிடுதல்
  • Syndrome – S பல நோய்களின் கூட்டுத் தொகுப்பு

இந்நோய் முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது.

1986 ஆம் ஆண்டு நம் நாட்டில் சென்னையில் எய்ட்ஸ் நோய் அறிகுறி உள்ளவர்கள் இருப்பதை அறிந்து நமக்கெல்லாம் அதிர்ச்சியும், அச்சமும் ஏற்பட்டது. நம் நாட்டில் இதுவரை பல லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் மிக அதிகமானவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ளனர்.

எய்ட்ஸ் என்றால் என்ன?

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையை முற்றிலும் அழித்து கடைசியில் மரணத்தை நோக்கிய பயணம் என்றே கூறலாம்..

ஆனாலும் எய்ட்ஸ் எப்படி வருகிறது என்ற புரிதல் இன்றளவும் பெரும்பாலோருக்கு இல்லை என்றே சொல்லலாம்..

பல பேருடன் உடலுறவு கொள்வதால் வருவது அல்ல எய்ட்ஸ் நோய். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் தெரிந்தோ தெரியாமலோ, உடலுறவு கொள்வதால், அவரிடமிருந்து அப்படியே பற்றி கொள்ளும்.

அதே சமயத்தில், தனக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது என்பதை கூட அறியாமல் பலரும், பல பேரிடம் பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொள்வதால் மிக எளிதில் பரவுகிறது.

எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள்:

1 உடல் எடை மிக வேகமாக குறைதல்,
2 ஒரு மாதத்திற்கு மேலாக காய்ச்சல்,
3 ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் இருமல்,
4 ஒரு மாதத்திற்குமேல் தொடர்ந்து வயிற்றுப்போக்கு,
உடல் அரிப்புடன் கூடிய தோல்வியாதி ஆகியவை ஆகும்.

இத்தொற்றுநோயை அறிய இரத்தப்பரிசோதனை செய்வதே சிறந்த வழியாகும்.

எய்ட்ஸ் பரவும் வழிகள் – Aids Paravum Valigal:

எய்ட்ஸ் நோய்க்கான கிருமி, உடலில் உள்ள இரத்தம், ஆண் விந்து, பெண் உறுப்பு திரவம் மற்றும் இந்நோயினால் பாதித்த தாயின் தாய்ப்பால் ஆகிய இடங்களில் அதிகமாக வாழ்கிறது. எனவே இந்நோய் கீழ்க்கண்ட விதங்களில் பரவுகிறது.

உடல் உறவு கொள்ளும் இருவரில் யாரேனும் ஒருவர் எய்ட்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும்போது “வஞ்சகம் வாழ்வை கெடுக்கும்”

எய்ட்ஸ் உள்ளவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி மருந்து, ஊசி குழல் சரியாக சுத்தம் செய்யப்படாமல் மற்றவருக்கு பயன்படுத்தும் போது இக்கிருமி உள்ளவர் இரத்தத்தை பிறருக்கு செலுத்தும்போது இவ்வைரஸ் உள்ள தாயிடமிருந்து கருவில் உள்ள குழந்தைக்கு எய்ட்ஸ் ஏற்பட்டுவிட்டால் இன்று அதற்கான சிகிச்சை கிடையாது / மருந்து கிடையாது.

மேலும் எய்ட்ஸ் வராமல் தடுக்க தடுப்பூசி கிடையாது. எனவே ஒவ்வொருவரும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து, எய்ட்ஸ் நோயிலிருந்து தங்களையும் பாதுகாத்து, பிறருக்கும் பாதுகாப்பு வழிமுறைகளையும் எடுத்துச் சொல்லி எய்ட்ஸ் மனித சமுதாயத்திற்கு தந்துள்ள சவாலை எதிர்கொள்ள வேண்டும்.

எய்ட்ஸ் நோய் வராமல் தடுப்பது எப்படி ?

  1. ஒருவனுக்கு ஒருத்தி என்ற சித்தாந்தத்தில் வாழ்வது,
  2. தகாத உடலுறவு கொள்வதை தவிர்ப்பது,
  3. தொற்று நீக்கம் செய்யப்பட்ட ஊசி மற்றும் ஊசி குழல்களை பயன்படுத்துதல்,
  4. இரத்த தானம் பெறும்போது எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்ட இரத்தத்தை தானமாக பெறுவது
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now