Lemon juice benefits in tamil
lemon uses in tamil: எலுமிச்சை நம் உடலுக்கு பலவகையான நன்மை அளிக்கக்கூடிய ஒரு மருத்துவ பொருளாகும். தற்போது எலுமிச்சை சாறு அழகு கலைகளுக்கு அதிகளவு பயன்பட்டு வருகிறது.
இந்த எலுமிச்சை குறைந்த விலையில் அதிகளவு கிடைக்கும் பழமாகும். இதில் உயர்ரக ஊட்டச்சத்துகளான கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் இருக்கின்றன. மேலும் இதில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்தின் பயன்களும் இருக்கிறது.
எலுமிச்சை பழத்தின் மிக சிறந்த பலன் எதுவென்றால் உடல் எடையை குறைக்க அயராது பாடுபடும்.
கற்றாழை ஜூஸ் பூண்டு சாறு கலந்து குடித்தால் இந்த 8 விஷயமும்…
வாங்க எலுமிச்சை ஜூஸ் பயன்கள் (Lemon juice benefits in tamil) இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம்.
எலுமிச்சை ஜூஸ் நன்மைகள் (Lemon juice Payangal)..!
எலுமிச்சை ஜூஸ் பயன்கள் – இரத்த அழுத்தத்தை குறைக்க:-
தினமும் எலுமிச்சை சாறு பருகிவர எலுமிச்சையில் உள்ள வைட்டமின் C அதிகம் இருப்பதினால் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது.
தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் – உடல் எடை குறைய:-
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் பருகி வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது எலுமிச்சை.
எனவே ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைய , தினமும் காலையில் எலுமிச்சை சாற்றுடன் மஞ்சள் தூள் கலந்து பருகி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
Lemon juice Payangal – தொண்டை வலி சரியாக :-
குறிப்பாக எலுமிச்சை நீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் தொண்டை வலி மற்றும் தொண்டை கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.
எலுமிச்சை ஜூஸ் – இரத்த கொதிப்பு குறைய :-
எலுமிச்சையின் மற்றொரு சிறந்த பயன், இது இரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உங்களது உடலை சோர்வடைவதில் இருந்து மீட்டு ஓய்வளிக்கும். எலுமிச்சை சாறு நமது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
எலுமிச்சை வேக வைத்த நீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள்???
செரிமான பிரச்சனை சரியாக:-
நம் உடலில் செரிமானம் மண்டலம் மட்டும் சரியாக இல்லாவிட்டால் உடலில் பலவகையான பிரச்சனைகளை ஏற்படும்.
எனவே தினமும் எலுமிச்சை ஜூஸை சாப்பிடும் போது, அது உடலில் உள்ள அனைத்துக் கசடுகளையும் அடித்து இழுத்துக் கொண்டு வருவதால், செரிமானப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும்.
எலுமிச்சை ஜூஸ் நன்மைகள் – மூட்டு வலி குணமாக:-
தினமும் எலுமிச்சை சாறு நீரில் கலந்து பருகிவர மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
பி.எச் அளவுகள்:-
நம் உடலில் அல்கலைன் மற்றும் அமிலப் பண்புகளுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில் எலுமிச்சை ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.
உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவைத் தகர்த்து விடுகிறது.
கல்லீரல் பிரச்சனைக்கு:-
குறிப்பாக எலுமிச்சை சாறு கல்லீரலில் உள்ள நச்சு கிருமிகளை அழிக்கிறது. இதனால் கல்லீரல் சுத்தம் அடைவது மட்டும் இல்லாமல் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் விரைவில் தீர்வு காண இயலும்.
மலச்சிக்கல் பிரச்சனை சரியாக:-
மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப் படுபவர்கள், இந்த எலுமிச்சை சாறு பானத்தை தினமும் பருகி வந்தால், செரிமானம் மேம்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.