வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எலுமிச்சை வேக வைத்த நீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள்???

Updated On: May 19, 2023 7:59 AM
Follow Us:
எலுமிச்சை வேக வைத்த நீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள்
---Advertisement---
Advertisement

எலுமிச்சைப் பழத்தின் மருத்துவ நன்மைகள்

உடல் எடையை குறைக்க பெரும்பாலும் அனைவரும் பின்பற்றுவது அதிகாலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறை கலந்து குடிப்பது. எலுமிச்சைசாறில் தான் அதிக நன்மை உள்ளது என்று நினைப்பது தவறு.

எலுமிச்சைசாறை விட, எலுமிச்சை தோலிலும் அதிக நன்மைகள் நிறைந்துள்ளது. அவற்றின் நன்மைகளை பற்றி நீங்கள் அறிந்தால் எலுமிச்சை தோலை தூக்கி வீசமாட்டீர்கள்.

சரி வாருங்கள் கொதிக்கவைத்த தண்ணீரில் எலுமிச்சைசாறு மற்றும் எலுமிச்சை தோலும் சேர்த்து கொதிக்க வைத்த பானத்தை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இவற்றில் நாம் காண்போம்.

எலுமிச்சை பானம் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:

  • எலுமிச்சை – 6
  • தண்ணீர் 1/2 லிட்டர்
  • தேன் – தேவையான அளவு

தயாரிக்கும் முறை:

முதலில் எலுமிச்சை பழங்களை பாதியாக வெட்டிக் கொள்ளவும். அதன் பிறகு பாத்திரத்தில் 1/2 லிட்டர்  தண்ணீரை ஊற்றி வைத்துக் கொள்ளவும்.

பின்பு அந்த நீரை 3 நிமிடம் அடுப்பில் நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். 10-15 நிமிடம் ஆறவைத்து, பின்பு அந்த நீரை வடிகட்டி வைத்துக்கொண்டு, ஒரு சிறிய டம்ளரில் அந்த நீரை ஊற்றி கொஞ்சம் தேன் கலந்து குடிக்கவும்.

நோய்யெதிர்ப்பு சக்தி:

இந்த பானத்தை தினமும் காலை ஒரு டம்ளர் குடித்து வந்தால், நோய்யெதிர்ப்பு மண்டலம் வலிமையடைகிறது. எனவே நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

சுறுசுறுப்பாக இருக்க:

தினமும் இந்த  நீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீங்கள் மிகவும் ஆற்றலுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

செரிமானத்திற்கு:

செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும் மற்றும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை சீராக வைத்துக்கொள்ளும்.

உடல் சுத்தமாகும்:

தினமும் காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால், உடலில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடலை சுத்தபடுத்தும்.

PH நிலையாகும்:

முக்கியமாக உடலில் உள்ள PH அளவை நிலைப்படுத்தும்.

உடல் எடை குறைய:

இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்டக்கொழுப்புகள் வெளியேற்றப்படுகிறது, எனவே இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் நல்ல மாற்றங்கள் தெரியும்.

மனம் அமைதி பெரும்:

நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், இந்த பானத்தை குடிப்பதன் மூலம் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now