கருணை கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் இவ்வளவா..?

Advertisement

Karunai Kilangu Theemai in Tamil | கருணைக்கிழங்கு தீமைகள்

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதாவது பொதுவாக நம் அனைவருக்குமே நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக நாமும் சத்தான உணவுகளை சாப்பிடுவோம். அப்படி நம் உடலுக்கு அதிக சத்துக்களை தரும் உணவுகள் என்றால் அது காய்கறிகள் தான்.

ஆனால் அந்த காய்கறிகளையும் நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது அதனால் நம் உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இன்று நாம் இந்த பதிவின் வாயிலாக கருணை கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி தான் பார்க்கப்போகின்றோம். மேலும் நீங்கள் கருணை கிழங்கு நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!

கருணை கிழங்கை சமையலுக்கு பயன்படுத்தும் முன்பு இதை தெரிந்துக்கொள்ளுங்கள்

கருணை கிழங்கு தீமைகள்: 

கருணை கிழங்கு தீமைகள்

பொதுவாக நம்மில் பலரும் கருணை கிழங்கை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் கருணை கிழங்கு சாப்பிடுவதால் பலருக்கும் நாக்கில் அரிப்பு ஏற்படுகிறது. இந்த கருணை கிழங்கில் பல நன்மைகள் இருக்கின்றன. ஆனால் நாம் கருணைக் கிழங்கை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளும் போது அதனால் உடலுக்கு பல பாதிப்புகள் வருகின்றன. அது என்னென்ன பாதிப்புகள் என்று தற்போது காணலாம்.

பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்: 

பொதுவாக கருணைக் கிழங்கை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த கருணை கிழங்கில் கால்சியம் ஆக்சலேட் எனும் சேர்மம் அதிகமாக உள்ளது. அதனால் நாம் கருணை கிழங்கை சமைக்காமல் சாப்பிடும் போது, அது வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்துக்கின்றன. ஆகவே கருணை கிழங்கை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பீர்க்கங்காய் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள இதை பாருங்கள்..

ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள்: 

கருணை கிழங்கில் கால்சியம் ஆக்சலேட் எனும் சேர்மம் அதிகமாக இருப்பதால் ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் கருணைக் கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் மருத்துவரின் அனுமதி பெற்று சாப்பிடுவது நல்லது.

வயிற்று கோளாறுகள்: 

பொதுவாக நாம் அளவுக்கு அதிகமாக கருணை கிழங்கு சாப்பிடுவதால் அது வயிற்று போக்கு பிரச்சனைகளை உண்டாக்குகிறது. மேலும் அது மலத்தின் அளவை அதிகரிக்கிறது.

சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள்: 

சைனஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருணை கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காரணம் கருணை கிழங்கில் இருக்கும் பண்புகள் சைனஸ் பிரச்சனையை அதிகரிக்க செய்கிறது.

குறிப்பாக: 

அதுநமட்டுமில்லாமல், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கருணைக் கிழங்கு சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மேலும் உடல் நலக் கோளாறுகளுக்காக மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் கருணைக் கிழங்கு சாப்பிடும் முன் மருத்துவர் ஆலோசனைப் பெற்று சாப்பிடுவது நல்லது.

எந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்..

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement