வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கரும்பு ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு தீமைகளா..?

Updated On: May 19, 2026 5:08 PM
Follow Us:
Sugarcane Juice Side Effects in Tamil
---Advertisement---
Advertisement

Sugarcane Juice Side Effects in Tamil

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! இப்போது Summer வேற தொடங்கிவிட்டது. இனி வெளியிலும் வர முடியாது. வீட்டிலும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு வெயில் நம்மை கொளுத்தி எடுத்துவிடும். இதனாலேயே பலரும் வெளியில் வர பயப்புடுகிறார்கள். இந்த மாதிரி வெயில் காலத்தில் நாம் நீர்சத்து அதிகம் உள்ள உணவுகளை தான் வாங்கி சாப்பிட வேண்டும். அப்படி நாம் இந்த வெயிலை சமாளிப்பதற்காக குளிர்பானங்கள், ஐஸ் கிரீம், ஐஸ் வாட்டர் போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவோம்.

அதுபோல நாம் வெளியில் செல்லும் போது என்ன தான் தாகத்திற்கு தண்ணீர் குடித்தாலும், ஜூஸ் குடித்தால் தான் மனதிற்கு ஒரு திருப்தி கிடைக்கும். அப்படி நாம் இந்த வெயில் காலத்தில் அதிகம் குடிக்கும் ஜூஸ் என்றால் அது கரும்பு ஜூஸ் தான். சரி கரும்பு ஜூஸில் இருக்கும் நன்மைகள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். மேலும் நீங்கள் அதை தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

கரும்பு சாறு குடித்தால் உடலிற்கு இவ்வளவு நன்மைகளா..

கரும்பு ஜூஸ் தீமைகள்: 

Sugarcane Juice Side Effects

பொதுவாக வெயில் காலம் தொடங்கிய உடனே, சாலை ஓரங்களில் பார்த்தால் ஒரு ஜூஸ் கடை ஆரம்பித்து இருப்பார்கள். அது தான் கரும்பு ஜூஸ் கடை. சாலையில் செல்லும் போது பார்த்தால், ஆங்காங்கே இந்த கரும்பு ஜூஸ் கடையை நாம் பார்க்கலாம். காரணம் வெயிலுக்கு இதமான பானமாகவும், அதிக ஆரோக்கியம் நிறைந்த பானமாகவும் கரும்பு ஜூஸ் இருக்கிறது.

என்ன தான் இந்த கரும்பு ஜூஸில் அதிக நன்மைகள் இருந்தாலும், இதிலும் சில தீமைகள் இருக்கிறது. அதாவது பழமொழி போல தான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதாவது நாம் கரும்பு ஜூஸ் அதிகமாக குடிப்பதால் சில பாதிப்புகள் ஏற்படுகிறது. அது என்னவென்று இப்போது பார்க்கலாம்.

உடல் எடை அதிகரிக்கும்: 

உடல் எடை அதிகரிக்கும்

கரும்பு ஜூஸில் கலோரிகள் அதிகம் இருக்கிறது. அதனால் நாம் அதிகமாக கரும்பு ஜூஸ் குடிக்கும் போது உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் இதனால் இரத்தத்தத்தில் சர்க்கரையின் அளவில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன.

வயிற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும்:

கரும்பு ஜூஸில் உள்ள பாலிகோசனால் நம் செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, வயிற்றில் வலி, வாந்தி, தலைச்சுற்றல், தூக்கமின்மை, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் செரிமான அமைப்பில் ஏதும் பாதிப்புகள் இருந்தால் கரும்பு ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

கரும்பு சொட்டு நீர் பாசனம் முறை மற்றும் அதன் அவசியம்..

சர்க்கரை நோய் உள்ளவர்கள்: 

சர்க்கரை நோய் உள்ளவர்கள்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கரும்பு ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம், கரும்பு ஜூஸில் இயற்கையாகவே சர்க்கரை அதிகமாக இருக்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள் கரும்பு ஜூஸ் குடித்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துகிறது.

காய்ச்சல் மற்றும் தலைவலி: 

பொதுவாக காய்ச்சல் உள்ளவர்கள் கரும்பு ஜூஸ் குடிக்கவே கூடாது. அதுபோல தலைவலி பாதிப்பு உள்ளவர்கள், கரும்பு ஜூஸ் குடித்தால் அது மேலும் தலைவலியை ஏற்படுத்துகிறது. எனவே அடிக்கடி தலை வலி இருந்தால் கரும்பு ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு: 

சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு

கரும்பு ஜூஸ் அதிகம் எடுத்து கொண்டால் அது, கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இது கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கிறது.

அதுபோல கரும்பு ஜூஸில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது சிறுநீரகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் கரும்பு ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

கரும்பு ஜூஸ் மெஷின் விலை பட்டியல் | Karumbu Juice Machine Price List

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now