கருவேப்பிலை தீமைகள் – Curry Leaves Side Effects in Tamil
உங்களில் யாருக்கு கருவேப்பிலை பிடிக்கும்..! நாம் காய்கறிகளை வாங்க போனால் அதனை இலவசமாக கொடுப்பார்கள். அதனை நாம் வாங்கி வந்து நம்முடைய சமையலுக்கு அதிகம் பயன்படுகிறது. இதில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அதேபோல் கருவேப்பிலை இல்லாமல் ஒரு சமையலும் முடிவு பெறாது. ஏனென்றால் இந்த கருவேப்பிலையை கடைசியில் முடிவுரை செய்வது போல் தாளித்து இறக்குவார்கள். இது இல்லாமல் அதிகளவு சமையல் செய்யவே மாட்டார்கள். அந்த அளவிற்கு இதில் நிறைய சத்துக்கள் உள்ளது. அதேபோல் இதில் தீமைகள் இருக்கும் அல்லவா..? அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!
Curry Leaves Benefits and Side Effects in Tamil:
கருவேப்பிலை அனைத்திற்கும் உதவியாக இருக்கும். அதுவும் முடி வளர்வதற்கும், கருமையாக மாறுவதற்கும் இந்த கருவேப்பிலை உதவியாக இருக்கும். இதனை தவிர நிறைய நன்மைகளை கொண்டது தான் இந்த கருவேப்பிலை. அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
கறிவேப்பிலையில் அதிகளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளது.
தொப்பை குறையும், இரத்த சோகைக்கு, சர்க்கரை நோய்க்கு, இதயத்தை பாதுகாக்க, செரிமான பிரச்சனைக்கு, சளி தொல்லைக்கு , முடி நன்றாக வளர்வதற்கு ,முடி கருமையாக மாறுவதற்கு, கல்லீரலை பாதுகாக்க இதை தவிர கருவேப்பிலை நிறைய பிரச்சனைக்கு உதவி செய்கிறது.பச்சையாக தேங்காய் சாப்பிடுவீர்களா அப்படியென்றால் இதை தெரிந்துகொள்ளுங்கள்
கருவேப்பிலை தீமைகள் – Curry Leaves Side Effects in Tamil:
- பொதுவாக அனைத்து காய்கறிகளும் சரி பழங்களும் சரி நன்மைகளை அளிக்கும். அதனை நாம் எடுத்துக் கொள்வதனை பொறுத்து தான் மாறுபடும். எந்த பொருளாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள் அல்லவா..? அதேபோல் தான் இந்த கருவேப்பிலையும்,
- அளவுக்கு அதிகமான கருவேப்பிலை உட்கொள்ளும் போது வயிற்றில் அமிலத்தன்மை போன்ற சில பக்க விளைவுகளை ஏற்படும். அதனால் வயிறு எரியும், வயிற்று வலி மற்றும் குமட்டல் ஏற்படுத்தும்.
- கறிவேப்பிலையில் அளவுக்கு அதிகமாக நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே, இதனை அதிகமாக உட்கொள்ளும்போது வயிற்று வலி, வயிற்றில் வீக்கம், வயிற்றில் பிடிப்பு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- கருவேப்பிலையை அதிகம் சாப்பிட்டால் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும்.
- மேலும், இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கருவேப்பிலை ஜூஸ் தீமைகள்:
- கருவேப்பிலை உடலிற்கு ஆரோக்கியமானது என்பதால் இதனை ஜூஸாக எடுத்து கொள்கிறீர்கள். ஆனால் இதில் பக்க விளைவுகள் நிறைந்துள்ளது. அதனை பற்றி காண்போம். கருவேப்பிலை ஜூஸ் எடுத்து கொள்வதன் மூலம் உடலில் சர்க்கரை அளவை குறைக்க செய்யும்.
- இந்த ஜூஸை கர்ப்பமாக இருக்கும் போது எடுத்து கொள்ள கூடாது.
- இரத்த அளவை குறைக்க செய்யும். அதனால் இதனை குறைவான அளவில் எடுத்து கொள்வது சிறந்தது.
- உடலிற்கு நன்மையை தருவதாக இருந்தாலும் கூட சரியான அளவில் எடுத்து கொள்வது சிறந்தது. அப்போது தான் பக்க விளைவுகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும்.
தேங்காய் பால் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips In Tamil |














