கலோரி என்றால் என்ன? | What is Calorie in Tamil

Advertisement

கலோரிகள் என்றால் என்ன? | Calorie Endral Enna

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கலோரி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி கேட்கும் வார்த்தைகளில் ஒன்று கலோரி, கொழுப்பு போன்றவை. அதிலும் உடல் எடை அதிகம் உள்ளவர்கள் பருமனை குறைப்பதற்கு யோசனை கேட்டால் அனைவரும் முதலில் சொல்வது ஒரு நாளைக்கு தேவையான கலோரி உள்ள உணவை மட்டும் தான் சாப்பிட வேண்டும், கலோரி அதிகம் உள்ள உணவை சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும் என்று கூறுவார்கள். அப்போது பலருக்கும் தோன்றும் கேள்வி கலோரி என்றால் என்ன என்பது தான், உங்களின் கேள்விக்கு விடை காணும் விதமாக இந்த பதிவில் கலோரி என்றால் என்ன மற்றும் மனிதன் ஒரு நாளுக்கு எவ்வளவு கலோரி எடுத்து கொள்ள வேண்டும் என்பதை விரிவாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

கலோரி என்றால் என்ன?

கலோரி என்றால் என்ன

  • What is Calorie in Tamil: கலோரி என்பது அளவிடுவதற்கு உபயோகப்படுத்தப்படும் ஒரு யூனிட் ஆகும். நாம் சாப்பிடும் உணவை உறிஞ்சி அது செரித்த பிறகு உடலுக்கு கிடைக்கும் ஆற்றலின் அளவை மதிப்பிடும் அலகு தான் கலோரி.
  • நாம் உட்கொள்ளும் உணவு செரிமானம் அடைந்த பின் கிடைப்பது கலோரி. நீங்கள் அதிக அளவு கலோரி உள்ள உணவை உட்கொள்ளும்போது உடல் தனக்கு தேவையான கலோரியை மட்டும் எடுத்து கொண்டு மீதம் இருக்கும் ஆற்றலை கொழுப்பாக மாற்றி விடும்.
  • ஆற்றல் அதிகமாக சேமிக்க தொடங்கும்போது உங்கள் எடை அதிகரிக்க ஆரம்பித்து விடுகிறது.
  • எல்லா உணவுகளிலுமே கலோரிகள் இருக்கும். அது உணவில் கார்போஹைட்ரெட் அல்லது புரதம் போன்ற வடிவத்தில் கூட இருக்கலாம்.
  • உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதாலும் உடல் எடை அதிகரிக்கலாம்.

கலோரியை கண்டுபிடிப்பது எப்படி?

கலோரி என்றால் என்ன

இதை கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கு BMR மற்றும் PAL தெரிந்திருக்க வேண்டும். இதில் BMR என்பது Basal metabolic rate, PAL என்பது Physical Activity Level

BMR கண்டுபிடிப்பதற்கு உங்களுடைய எடை, உயரம் எவ்வளவு என்று தெரிந்திருக்க வேண்டும். உடல் எடை, வயது, பாலினம், உயரம் போன்றவற்றை பொறுத்து ஒருவரின் BMR வேறுபடும்.

ஆணிற்கான BMR Formula = (10×wt) + (6.25 × Ht) – (5 × Age) + 5

பெண்ணிற்கான BMR Formula = (10×wt) + (6.25 × Ht) – (5 × Age) – 161

உதாரணம்:

கவின் எடை 60 கிலோ என்றும், உயரம் 158 CM என்றும், வயது 30 என்றும் வைத்து கொள்வோம்.

ஸ்டேப்: 1

BMR = (10×60) + (6.25 × 158) – (5 × 30) + 5

= 600 + 987.5 – 150 + 5

= 1,442.5

ஸ்டேப்: 2

Physical Activity Level இது ஒருவர் செய்யும் உடல் உழைப்பை பொறுத்து மாறும்.

Sedentary (சிறியதாக மற்றும் உடற் பயிற்சி செய்யதவர்களுக்கு) 1.2
Lightly Active (கொஞ்சம் சுறுசுறுப்பாக இருப்பவர்கள்) 1.375
Moderately Active (வாரத்திற்கு மூன்று நாட்கள் உடற்பயிற்சி செய்பவர்கள்) 1.55
Very Active (வாரத்தில் ஏழு நாட்களும் உடற்பயிற்சி செய்பவர்கள்) 1.725
Extra Active (எல்லா நாட்களிலும் உடல் உழைப்பு அதிகம் செய்பவர்கள்) 1.9

 

இப்போது BMR மற்றும் PAL இரண்டையும் பெருக்கி கொள்ளவும். மேற்கூறப்பட்டதில் நீங்கள் எந்த Physical Activity Level-ல் உள்ளீர்கள் என்பதை பார்த்து அதற்கான Value -வை எடுத்து கொள்ளுங்கள்.

Calorie = BMR × PAL 

= 1,442.5 × 1.55 (Moderately Active)

Calorie = 2,235.88

இது தான் ஒரு மனிதனின் கலோரியாகும்.

கலோரி அட்டவணை தமிழில்:

கலோரி அட்டவணை தமிழில்

100 கிராம் ஆப்பிளில்  59 கலோரி இருக்கும் 
வாழைப்பழத்தில்  116 கலோரி உள்ளது 
300 கிராம் சாதத்தில்  346 கலோரிகள் உள்ளது 
100 கிராம் நட்ஸில்  550 முதல் 600  கலோரிகள் வரை உள்ளது 
100 கிராம் எண்ணெயில்  900 கலோரிகள் உள்ளது  
100 கிராம் வேகவைத்த பருப்பில்   339 கலோரிகள் உள்ளது 

 

உடல் எடை குறைய கலோரி குறைந்த உணவுகள்

 

இதுபோன்ற உடல் ஆரோக்கியம் பற்றிய தகவலை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் Heath Tips In Tamil
Advertisement