கால் விரல் நகம் சொத்தை பிரச்சனை | நகம் சொத்தை குணமாக வைத்தியம்
இப்போது அனைத்து வயதினரும் சந்திக்கின்ற ஒரு பிரச்சனைகளில் நகம் சொத்தை பிரச்சனை உள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால் ஒழுங்கற்ற பராமரிப்பு முறை மட்டுமே காரணமாக உள்ளது. இந்த நகம் சொத்தை பிரச்சனையை ஆரம்பக்காலத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இல்லையெனில் நகங்களில் பலவகையான நோய்களை ஏற்படுத்திவிடும்.
இந்த நகம் சொத்தை பிரச்சனையை சரி செய்ய மருத்துவரிடம் செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. நமக்கு எளிதில் கிடைக்கும் சில பொருட்களை வைத்தே இந்த நகம் சொத்தை பிரச்சனையை சரிசெய்து விட முடியும். சரி வாங்க இந்த கால் நகம் சொத்தை குணமாக இயற்கை வழிமுறைகள் என்ன உள்ளது. அதனை பற்றி இந்த பதவின் வாயிலாக அறிந்து கொள்ளுங்கள்.
நகம் சொத்தை காரணம் :
கால் நகம் சொத்தை எதனால் ஏற்படுகிறது? நகம் சொத்தை காரணம் என்ன? என்று இப்போது படித்தறிவோம் வாங்க. குறிப்பாக காலில் செருப்பு அணியாமல் நடப்பது, மற்றவர்கள் செருப்பை போட்டுக் கொள்வது மற்றும் கால் விரல் நகம் சொத்தை உள்ளவர்களின் செருப்பை அணிந்துக் கொள்வது போன்றவை காரணமாக, கால் விரல் நகம் சொத்தை ஏற்படுகிறது.
கால் விரல் நகம் சொத்தை (ingrown toenail treatment) ஏற்பட்டவுடன் அதனை கவனிக்காமல் விட்டு விட்டால் மற்ற விரல்களையும் பாதித்து விடும். ஆரம்ப காலத்திலேயே கவனித்து தகுந்த மருத்துவத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
![]() |
அதற்காக மருத்துவரை தான் அணுக வேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்கு எளிய முறையாக நம் வீட்டிலேயே சமையல் அறையில் உள்ள சில பொருட்களை வைத்து இதனை குணபடுத்த முடியும்.
அட ஆமாப்பா. இங்கு அடிப்படை வைத்தியத்திற்கு உதவ கூடிய பொருட்களை பற்றியும் அதனை பயன்படுத்தும் முறையையும் விரிவாக பார்ப்போம்.
அல்சர், நெஞ்செரிச்சல் ஒரு நாளில் சரியாக இந்த ஒரு கிளாஸ் போதும்..!
கால் பெருவிரல் நகம் சொத்தை படம்:
கை நகம் சொத்தை குணமாக வைத்தியம் – ஆப்பிள் சிடர் வினிகர்:
- கொஞ்சம் தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து அரை மணி நேரம் உங்கள் காலை ஊற வைக்கவும். இந்த முறையை சொத்தை நகம் போகும் வரை செய்து வர வேண்டும்.
- இவ்வாறு செய்வதால் நோய் தொற்றுகள் மற்ற விரல்களுக்கு பரவாமல் சொத்தை விரலை குணப்படுத்துகிறது.
- இதன் முக்கிய காரணம் ஆப்பள் சிடர் வினிகரில் உள்ள லேசான அமிலத் தன்மை தான். அதிலும் ஆப்பிள் சிடர் வினிகர் நுண்ணுயிரிகளை அழிக்கக் கூடிய தன்மை உள்ளது.
கை விரல் நகம் சொத்தை குணமாக வைத்தியம் – பேக்கிங் சோடா:
- பேக்கிங் சோடாவுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ஒரு பேஸ்டு போல் செய்து கொண்டு சொத்தை நகம் உள்ள இடத்தில் போட்டு, ஒரு 20 நிமிடம் ஊற விட வேண்டும். அதுவும் இரவில் தூங்கும் போது போட்டு கொண்டால் மிகவும் நல்லது.
- இவ்வாறு இந்த முறையை தினமும் செய்து வந்தால் போதும், விரைவில் கால் நகம் சொத்தை குணமாகி வரும்.
- பேக்கிங் சோடா மிகவும் கார தன்னை கொண்டது. அதனால் சொத்தை நகம் மற்ற நகத்திற்கு பரவாமல் தடுத்து நக விரலை காத்துக் கொள்கிறது.
குதிகால் வெடிப்பு ஏற்பட காரணம் என்ன ?
நகச்சொத்தை மருத்துவம் – டீட்ரீ ஆயில் (Tea Tree Oil):
- டீட்ரீ ஆயில் பொதுவாகவே கிருமிநாசினி தன்மையை கொண்டது. அதுவும் கால் விரலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து விடும் குணமுள்ளது.
- நக சொத்தை ஏற்பட்ட இடத்தில் கொஞ்சம் ஆல்கஹால் கொண்டு சுத்தம் செய்த பிறகு, இந்த டீட்ரீ ஆயிலை சொத்தை நகமுள்ள இடத்தில் தடவ வேண்டும்.
- தினமும் ஒரு முறை என்று ஒரு மாதம் வரை செய்து வந்தால் நக சொத்தை (ingrown toenail treatment) உள்ள இடமே தெரியாமல் போய்விடும்.
கால் விரல் நகம் சொத்தை மருந்து – கற்பூரவல்லி எண்ணெய்:
- கற்பூரவல்லி எண்ணெயும் ஒரு கிருமிநாசினியாக விளங்குகிறது. இந்த எண்ணெயை சொத்தை நகமுள்ள இடத்தில் தேய்த்து 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.
- இவ்வாறு செய்வதன் மூலமாக நகத்தில் உள்ள கிருமிகள் அழிந்து, நக சொத்தையை குணப்படுத்துகிறது.
கால் விரல் நகம் சொத்தை மருந்து – பூண்டு:
- கொஞ்சம் பூண்டு பற்களை எடுத்து நன்றாக நசுக்கி அரை வாலி தண்ணீரில், நசுக்கிய பூண்டு பற்களை கொட்டி நன்றாக கலந்து, அந்த தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
- பின்பு மிதமான சூடு வரும் வரை காத்திருக்கவும், அதன் பிறகு அந்த தண்ணீரில் சொத்தை நகம் உள்ள கால் விரலை நன்றாக ஊற வைக்க வேண்டும்.
- இந்த முறையை தினமும் செய்து வாந்தால் கால் நக சொத்தை குணமாகும்.
கால் விரல் நகம் சொத்தை மருந்து – மஞ்சள் தூள்:
பொதுவாக மஞ்சள் தூள் கிருமிநாசினியாக விளங்குகிறது. எனவே கால் சொத்தையை எளிதில் சரி செய்கிறது. அதனால் தினமும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் சிறிது நீர் சேர்த்துக் கலந்து சொத்தை நகம் உள்ள இடத்தில் தடவி 3 முதல் 4 மணி நேரம் கழித்து பிறகு கழுவி விட வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் சொத்தை நகம் விரைவில் சரியாகிவிடும்.
கால் விரல் நகம் சொத்தை மருந்து – வேப்பிலை:
வேப்பிலை பொதுவாக பல்வேறு நோய் தொற்றுகளை குணபடுத்தும் தன்மை உடையது.அதனால் தினமும் ஒரு கை அளவு வேப்பிலை இலையை ஒரு பேஸ்டு போல் அரைத்து எடுத்து, அவற்றில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, சொத்தை நகம் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
கால் விரல் நகம் சொத்தை மருந்து – வெங்காயம்:
வெங்காயத்தை அதிகமாக நாம் சமையலுக்கு தான் பயன்படுத்துவோம். ஆனால் வெங்காயம் நக சொத்தையை குணபடுத்தும் தன்மை உடையது என்று யாருக்கும் தெரியாது. அதனால் வெங்காயத்தை நறுக்கி கால் நகம் சொத்தையுள்ள இடத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்து பிறகு கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நக சொத்தை விரைவில் குணமாகும்.
நகம் சொத்தை மருந்து – தேங்காய் எண்ணெய்:
இது ஒரு எளிய வைத்திய முறையாகும். அதனால் சிறிது தேங்காய் எண்ணெயை எடுத்து கால் நகத்தில் தினமும் தடவ வேண்டும். அதுவும் ஒரு நாளுக்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் கால் நகம் சொத்தை குணமாகும்.
குறிப்பு:
கால் விரல் நகம் சொத்தை பிரச்சனைக்கு இந்த முறையெல்லாம் செய்தால் மட்டும் போதாது, திரும்ப கால் நகம் சொத்தை வராமல் பாத்துக்கொள்ள வேண்டும். அதாவது மற்றவர் செருப்பை அணியக் கூடாது, காலில் செருப்பு போடாமல் போகவே கூடாது. இதை எல்லாம் செய்து வந்தால் உங்களுக்கு சொத்தை நகமே வராது.
கால் நகம் சொத்தை குணமாக கீழாநெல்லி:
நகம் சொத்தை பிரச்சனை உள்ளவர்கள் இனி கவலைப்பட தேவையில்லை. கீழாநெல்லி கீரை, நகம் சொத்தை பிரச்சனையை சரிசெய்ய சிறந்த மருந்தாக விளங்குகிறது.
எனவே இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு கீழாநெல்லி கீரை மற்றும் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து அரைத்து நகம் சொத்தை உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
பின்பு மறுநாள் காலை வெது வெதுப்பான நீரை கொண்டு நகம் சொத்தை உள்ள விரல்களை சொத்தமாக கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர, ஒரே வாரத்தில் நகம் சொத்தை சரியாகி விடும்.
கால் நகம் சொத்தை குணமாக படிகாரம்:
படிகாரம் கால் நகம் சொத்தை பிரச்னையை சரி செய்ய மிகவும் பயன்படுகிறது. அதனால் இதனை எப்படி தயாரிக்க வேண்டும் என்று அறிந்து கொள்வோம். படிகாரத்தை முதலில் கொஞ்சமாக எடுத்து ஊற வைக்க வேண்டும். இவை ஊறியதும் அதனை பேஸ்ட் ஆகா அரைத்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டினை இரவு தூங்கும் போது நகம் சொத்தை உள்ள இடத்தில் வைத்து கட்டி இரவு முழுவதும் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
பின்பு மறுநாள் காலை வெது வெதுப்பான நீரில் நகங்களை சுத்தமாக கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சில நாட்லளிலேயே நகம் சொத்தை பிரச்சனை சரியாகிவிடும்.
குதிகால் வலிக்கு எருக்கன் செடி வைத்தியமா?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |