ஒரு நாளைக்கு எத்தனை கிராம்பு சாப்பிடலாம்..!

Advertisement

கிராம்பு நன்மைகள்..! Krambu Benefits in Tamil..!

நமது விட்டு சமையலறையில் இருக்கக்கூடிய மிகவும் நறுமணம் நிறைந்த பொருட்களில் ஒன்று தான் கிராம்பு. மருத்துவம் குணம் நிறைந்த பொருள் என்றும் சொல்லலாம்.. அசைவ சமையலுக்கு மிகவும் பயன்படும் பொருளும் கூட. தினமும் ஒருவர் கிராம்பை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். கிராம்பு கொஞ்சம் காரத்தன்மையைக் கொண்டிருந்தாலும், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் உள்ளன. அதோடு அழற்சி எதிர்ப்பு, ஆன்டி-செப்டிக், ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளும் நிறைந்துள்ளன. இத்தகைய கிராம்பை அன்றாடம் வாயில் போட்டு மென்று சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் மாறும் ஒரு நாளைக்கு எத்தனை கிராம்பு சாப்பிடலாம் என்பதைக் காண்போம் வாருங்கள்.

ஒரு நாளைக்கு எத்தனை கிராம்பு சாப்பிடலாம்..!

ஒரு நாளில் நீங்கள் இரண்டு கிராம்பு சாப்பிடலாம். இந்த கிராம்பு சாப்பிடுவதினால் கிடைக்கும் அற்புத நன்மைகள் பற்றி பின்வருவனவற்றுள் பார்க்கலாம் வாங்க.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

கிராம்பில் வைட்டமின் சி சத்து அதிகளவு நிறைந்துள்ளது. ஆகவே இது உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உங்கள் உடலை எந்த நோய்த்தொற்றுகளும் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். அதோடு நோய்களுக்கு எதிராகவும் போராட உதவுகிறது

செரிமான பிரச்சனை சரியாகும்:

செரிமான பிரச்சனை

கிராம்பு செரிமான பிரச்சனைக்கு மிகவும் சிறந்த ஒன்றாகும். அதாவது கிராம்பு செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்கிறத. எனவே மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்கிறது. கிராம்பு நார்ச்சத்து நிறைந்தது. இது உங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.

கல்லீரல் ஆரோக்கியம்:

கல்லீரல்

பொதுவாக நமது உடலில் கல்லீரல் தான் நச்சுத்தன்மையை நீக்க பெரிதும் உதவுகிறது. நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளை மெட்டபாலிசம் செய்கிறது. எனவே கல்லீரலின் செயல்பாட்டை ஆரோக்கியமாக்க, நீங்கள் தினமும் கிராம்பு சாப்பிடுவது நன்மை பயக்கும். கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

பல்லுக்கு உறுதி:

பல்வலியைத் தடுக்க கிராம்பு எண்ணெய் பொதுவாக பற்களில் பயன்படுத்தப்படுகிறது. கிராம்புகளை உட்கொள்வது பல்வலியைக் குறைக்கவும் உதவும். கிராம்பு பற்களில் உண்டாகும் அசௌகரியத்தை சரி செய்ய உதவுகிறது. மேலும், உங்கள் பல் வலி, ஈறுகளில் வலி இருந்தாலும் அந்த இடத்தில் கிராம்பு வைத்தால் வலியைத் தணிக்கும்.

தலைவலி குணமாக:

தலைவலி

கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது தலைவலிக்கு ஒரு அற்புதமான தீர்வாக இருக்கிறது.எனவே வலி நிவாரணத்திற்காக நீங்கள் அவற்றை உட்கொள்ளலாம் அல்லது ஒரு கிளாஸ் பாலுடன் கிராம்பு தூள் கலந்து குடிக்கலாம். கிராம்பு எண்ணெய்யை நுகர்ந்தால் கூட நிவாரணம் கிடைக்கும்.

எலும்புகள் வலிமை பெற:

எலும்புகள் வலிமை பெற

கிராம்பில் ஃபிளாவனாய்டுகள், மாங்கனீசு மற்றும் யூஜெனோல் உள்ளன. அவை எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. கிராம்புகளை உட்கொள்வது எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது.

வாய் கிருமிகளை நீக்கும்:

காலையில் 2 கிராம்புகளை வாயில் அப்படியே வைத்திருந்தால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றிவிடும். இது உங்கள் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக, இது உங்கள் வாய்வழி சுகாதாரத்திற்கு சிறந்தது. கிராம்பு மற்றும் துளசி பயன்படுத்தி வீட்டில் மவுத்வாஷையும் தயார் செய்யலாம்.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:

நீரிழிவு நோயாளிகள், தினம் உணவில் கிராம்பு சேர்க்க வேண்டும். கிராம்பு உங்கள் உடலில் இன்சுலின் போல வேலை செய்கிறது. அதாவது, இரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்குவதன் மூலம், அவை இரத்தத்தின் சர்க்கரை சமநிலை செய்கின்றன.

சுவாசப்பாதை ஆரோக்கியம்:

சுவாசப்பாதை ஆரோக்கியம்

ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிக்க கிராம்பு உதவும் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது கிராம்பு சுவாசக் குழாயில் உண்டாகும் அழுத்தத்தை தணிக்கிறது மற்றும் எந்த பாக்டீரியாக்களும் உங்கள் நுரையீரலுக்குள் நுழைவதைத் தடுக்கிறது.

மன அழுத்தம் நீங்கும்:

மன அழுத்தம்

கிராம்பு மன அழுத்த எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது, மேலும் காலையில் அவற்றை மென்று சாப்பிட்டாலோ அல்லது அப்படியே வைத்திருந்தாலோ அன்றைய நாள் முழுவதும் உங்களை மிகவும் நிதானமாகவும் அமைதியாகவும் உணர வைக்கும்.

இது போன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement