Kiwi Fruit Side Effects in Tamil
அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக கிவி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக பழங்கள் என்றாலே அது சத்துக்களும் நன்மைகளும் நிறைந்ததாக தான் இருக்கும். அப்படி பல சத்துக்கள் நிறைந்த பழங்களில் கிவி பழமும் ஒன்றும். அதுபோல கிவி பழத்தை நம்மில் பலரும் சாப்பிட்டு இருப்போம். என்ன தான் இந்த கிவி பழத்தில் நன்மைகள் பல இருந்தாலும், அதை நாம் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது அதனால் பல்வேறு பக்க விளைவுகள் உண்டாகிறது. ஆகவே இந்த பதிவின் வாயிலாக கிவி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்று பார்க்கலாம் வாங்க..!
கிவி பழத்தை சாப்பிட்டால் மட்டும் போதாது.. இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்..
கிவி பழத்தின் தீமைகள்:
என்ன தான் கிவி பழத்தில் பல சத்துக்கள் இருந்தாலும், அதை நாம் அதிகமாக உட்கொள்ளும் போது கிவி பழம் உடலில் சில பக்க விளைவுகளை உண்டாக்குகிறது. இதை பெரியவர்கள் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறினார்கள். சரி கிவி பழத்தில் இருக்கும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், கிவி பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். அதை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
கணையத்தில் பாதிப்பு இருந்தால்:
கணையத்தில் பாதிப்பு உள்ளவர்கள், கிவி பழம் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் கிவி பழம் அதிகமாக சாப்பிடுவதால் கணைய அழற்சியை உண்டாக்குகிறது. கிவி பழத்தில் பொட்டாசியம், செரோடோனின் மற்றும் வைட்டமின் சி மற்றும் ஈ போன்றவை இருக்கிறது. ஆகவே இந்த சத்துக்கள் அதிக அளவு இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவை மாற்றுகிறது. இதன் காரணமாக கணையத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.
தோல் அழற்சி உண்டாகிறது:
ஒருவர் தினமும் கிவி பழம் சாப்பிட்டு வந்தாலே அவருக்கு தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், ஆய்வுகளின்படி, கிவி அதிகமாக சாப்பிடுவது வீக்கத்திற்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. கிவி பழம் அதிகமாக உண்பவர்களுக்கு அனாபிலாக்ஸிஸ் ஏற்படலாம். அதுமட்டுமில்லாமல், சொறி, ஆஸ்துமா மற்றும் படை நோய் போன்ற பாதிப்புகளை உண்டாக்குகிறது.
ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்படலாம்:
கிவி பழத்தில் இருக்கும் அதிகப்படியான நுகர்வு காரணமாக ஒருவருக்கு ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. நாம் கிவி பழம் அதிகமாக எடுத்து கொள்ளும் போது, வாய் கூச்சம், தொண்டை வீக்கம், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், வயிற்று வலி, தலைச்சுற்றல், சோர்வு மற்றும் இதயத் துடிப்பு போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
வயிற்று கோளாறுகள்:
கிவி பழத்தின் பக்க விளைவுகளில் ஒன்று தான் வயிற்று கோளாறுகள். ஒருவர் கிவி பழம் அதிகமாக சாப்பிடும் போது வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு, செரிமான பிரச்சனைகள் போன்ற வயிற்று கோளாறுகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல், இது மயக்கம், வீக்கம், காய்ச்சல், குளிர், வியர்வை, தசை பலவீனம் மற்றும் விழுங்குவதில் சிரமம் போன்ற பாதிப்புகளையும் உண்டாக்குகிறது.
கர்ப்பிணி பெண்கள் கிவி பழம் சாப்பிடலாமா..?
பொதுவாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், கிவி பழம் சாப்பிடும் முன் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. மேலும் கிவி பழம் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்.
வாய்வழி பிரச்சனைகள்:
ஒருவர் அளவுக்கு அதிகமாக கிவி பழம் சாப்பிடுவதால் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகிறது. அதாவது வாய், உதடுகள் மற்றும் நாக்கு போன்றவற்றில் வீக்கம், அரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |