Advertisement
குடைமிளகாய் நன்மைகள் | Capsicum Nanmaigal in Tamil
நண்பர்களே இன்று ஆரோக்கியம் பதிவில் குடைமிளகாய் நன்மைகள் பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக மிளகாய் என்றால் அனைவருக்கும் கொஞ்சம் சாப்பிடுவதற்கு அச்சம் கொள்வார்கள். பச்சைமிளகாய் போல் இந்த குடை மிளகாய் இருக்காது இதன் சுவையும் அதனை போல் இருக்காது. இதில் அதிகப்படியான நன்மைகள் உள்ளது. இதனை மருத்துவத்தில் மருந்தாக பயன்படுகிறது. முக்கியமாக சித்த மருத்துவத்தில் மருந்தாக திகழ்கிறது. இதன் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
நெல்லிக்காய் எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா? |
எடையை குறைக்க என்ன செய்வது:
- குடைமிளகாய் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க உதவும்.
நீரிழிவு நோய் உணவு முறை:
- நீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் அதில் உள்ள சத்துக்கள் நீரிழிவு நோய்க்கு மருந்தாக உதவுகிறது.
இளமையாக இருக்க வழிகள்:
- குடைமிளகாயில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் விட்டமின் எ, விட்டமின் சி, விட்டமின் பி6 போன்ற சத்துக்கள் குடைமிளகாயில் உள்ளது. இதனை சாப்பிடுவதால் இளம் உடல் அழகை தரும்.
- குடைமிளகாயில் உள்ள அல்ட்ரா ஒய்லெட்ரேஸினால் உடலில் ஏற்படும் தோல் சுருக்கம், கருமை, வறட்டு தன்மை நீங்கி இளமையான தோற்றத்தை தரும்.
மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம்:
- மூட்டு வலி உள்ளவர்கள் இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி பிரச்சனைக்கு தீர்வு தரும்.
கண் மங்கல் நீங்க:
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடைமிளகாய் சாப்பிடலாம் இதில் கண்ணுக்கு தேவையான வைட்டமின் எ சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதனை உட்கொண்டால் சிறு வயதில் உள்ள கண் கோளாறுகள் நீங்கி கண் பார்வை தெளிவாக தெரியும்.
வைட்டமின் சி உணவுகள் |
புற்றுநோய் வராமல் தடுக்க:
- குடை மிளகாயில் உள்ள ஒரு வேதிப்பொருள் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை தடுத்து அதன் வளர்ச்சியை தடுக்கிறது.
செரிமான பிரச்சனை நீங்க:
- பெரியவர்கள் இதனை சாப்பிடுவதற்கு பிடிக்காது. சிலர் இதனை விரும்பி சாப்பிடுவார்கள் சிலருக்கு பிடிக்காது ஆனால் இதில் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. நீங்கள் சாப்பிடும் உணவில் சிறிதளவு சேர்த்துக்கொண்டால் போதும் அது உங்களுக்கு செரிமான பிரச்சனைகளிலிருந்து விடிவு தரும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |
Advertisement