கொய்யா பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

கொய்யா பழம் தீமைகள்

அனைவருடைய வீட்டிலும் பழங்கள் மற்றும் காய்கறிகள் தான் அதிகமாக சாப்பிடுகின்றனர். ஆனால் நாம் சாப்பிடும் பழமாக இருந்தாலும் சரி காயாக இருந்தாலும் சரி சாப்பிடுவதற்கு என்று அளவு இருக்கிறது. அதன் அடிப்படியில் தான் நாம் சாப்பிட வேண்டும். ஆகையால் பழங்களின் வகைகளில் ஒன்றான கொய்யா பழத்தின் தீமைகள் என்ன என்பது பற்றி பார்க்கப்போகிறோம். மேலும் இந்த கொய்யா பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது பற்றியும் விரவாக தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ காலிபிளவரை சாப்பிடுவதற்கு முன்பு நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..!

கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள்:

கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள்

 கொய்யாப்பழத்தில் வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் C, பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்புச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகிய 10 பத்து விதமான சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது.  

ஒரு நாளைக்கு 2 கொய்யா பழம் மட்டுமே சாப்பிட வேண்டும். அது தான் நமது உடலில் பக்க விளைவுகள் ஏற்படாமல் இருக்க உதவும்.

Guava Fruit Side Effects in Tamil:

வாந்தி மயக்கம்:

வாந்தி

கொய்யாப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது வாந்தி மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகள் வரும்.

வயிற்று வலி:

வயிற்று வலி

அதேபோல இரவு நேரத்தில் கொய்யாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி நீங்கள் சாப்பிட்டால் வயிறு வலி பிரச்சனைகள் வரும்.

தொண்டை வலி:

தொண்டை வலி

கொய்யாப்பழம் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது. ஏனென்றால் கொய்யா பழம் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கும் போது தொண்டையில் வலி ஏற்படும். அதனால் சிறிது நேரம் இடைவெளி விட்டு தான் தண்ணீர் குடிக்க வேண்டும். 

ஆஸ்துமா நோய்:

ஆஸ்துமா நோய்

வாதம் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் கொய்யா பழத்தை மருத்துவரின் ஆலோசனை படி மட்டுமே சாப்பிட வேண்டும்.

இத்தகைய கொய்யா பழத்தை நாட்டு மருத்துவம் அல்லது சித்த மருத்துவத்தின் படி உடலுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் கொய்யா பழம் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

பாகற்காயை சாப்பிடுவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

கொய்யாப்பழத்தை சாப்பிட வேண்டியவர்கள்:

  • தொப்பை உள்ளவர்கள் 
  • கண் பிரச்சனை உள்ளவர்கள் 
  • நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் 
  • உடலில் அதிக அளவு ரத்த சர்க்கரை உள்ளவர்கள் 
  • உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள்

மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடாமல் அளவோடு சாப்பிட்டால் உடலிற்கு நல்லது.

கொய்ய பழம் சாப்பிட கூடாதவர்கள்:

  • குறைந்த அளவு இரத்த சர்க்கரை உள்ளவர்கள் 
  • வாதம் உள்ளவர்கள் 
  • ஆஸ்துமா உள்ளவர்கள் 
  • செரிமான கோளாறு பிரச்சனை உள்ளவர்கள்
  • அலர்ஜி

மேல் சொல்லப்பட்டுள்ள நபர்கள் மருத்துவரின் ஆலோசனை படி கொய்யா [பழம் சாப்பிட வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்