உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா..? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சிறுதானியங்கள் 

சர்க்கரை நோயாளிகள் தான் எடுத்து கொள்ளும் உணவில் கட்டுப்பாடாக இருக்க மாட்டார்கள். அவர்கள் சாப்பிடும் அரிசியில் கூட சர்க்கரை நோய் அதிகரிக்கும் இதனால் நாம் அரிசி சாப்பிடுவதை குறைத்து விட்டு சிறுதுணியங்களை எடுத்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த சிறுதானியங்கள் சாப்பிட்டால் சக்கரை நோய்  கட்டுப்பாடாக இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் தங்கள் எடுத்து கொள்ளும் உணவில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். இனிப்புகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் பழங்கள் மற்றும் நார்சத்து நிறைந்த காய்கறிகள் மேலும் அரிசிக்கு பதில் சிறுதானியங்கள் சாப்பிடலாம். இன்றைய பதிவில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் சிறுதானியங்கள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

ஹை சுகர் இருப்பதற்கான அறிகுறிகள் | High Sugar Symptoms in Tamil..!

சர்க்கரை நோயாளிகள் ஏன் அரிசி சாப்பிட கூடாது:

நாம் அனைவரும் அரிசி உணவுகளை தான் சாப்பிட்டு வருகிறோம். தற்போது கிடைக்கும் அரசிகள் எல்லாம் பாலிஷ் செய்யப்பட்டு வருவதால் அதில் கார்ப்ஸ் தான் நிறைந்திருக்கிறது. பொதுவாக அரிசியில் 78.2 கிராம் கார்போ ஹைட்ரேட்டும், 1 கிராம் நார்ச்சத்து மட்டுமே உள்ளது. இதனால் தான் மருத்துவர்கள், சர்க்கரை நோயாளிகளை  அரிசி உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

சிறுதனியங்களின் பயன்கள்:

நம் முன்னோர்கள் பழங்காலத்தில் அதிக அளவில் சிறுதானிய உணவுகளான தினை, சாமை, வரகு, குதிரைவாலி போன்ற உணவுகளைத் தான் அதிகம் உண்டனர். சிறுதானிய உணவுகளில் தான் குறைந்த அளவில் கார்போ ஹைட்ரேடும், அதிக அளவில் நார்ச்சத்தும் நிறைந்து உள்ளது.

நார்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் தான் நாம் அனைவரும் ஆரோக்கியமாக நோய் நொடி இல்லாமல் வாழலாம். உதாரணமாக, சிறுதானியமான குதிரைவாலியில் 65.5 கிராம் கார்போ ஹைட்ரேட்டும் 13.6 நார்ச்சத்தும் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் சிறுதானிய உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க முடியும்.

சர்க்கரை நோயாளிகள் சிறுதணிய உணவுகளை எடுத்துக்கொள்வதை வழக்கமாக்கி கொண்டாலும், அதனை மாவாக்கி களி அல்லது கூழ் வடிவில் தான் எடுத்துக் கொள்கின்றனர். சிறுதானியங்களான சோளம், கம்பு, ராகி போன்றவற்றில் குறைந்த அளவிலே நார்ச்சத்து உள்ளது. இதனை மாவு வடிவில் எடுத்துக் கொள்வதால் அதில் உள்ள நார்ச்சத்து முற்றிலும் போய்விடும். ஒரு சில சிறுதானியங்கள் உங்கள் சர்க்கரை நோயை அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சிறுதானியங்களின் கார்போஹைட்ரெட் மற்றும் நார்ச்சத்துக்ள்:

சிறுதானியங்கள்  கார்போ ஹைட்ரெட்  நார்சத்து 
தினை  60.2 6.7
சாமை  67 7.6
வரகு  69.5 5.2
குதிரைவாலி  65.5 13.6
சோளம்  70.7 2.0
கம்பு  67 2.3
ராகி  72 3.6

சிறுதானியங்கள் எவ்வாறு இரத்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது:

சிறுதானியங்களில் உள்ள விட்டமின்கள் தாது உப்புகள் ஆன்டிஆக்ஸிடன்ட் ப்ரொபேர்ட்டிஸ் ஆன ஆக்சிஜென் போன்ற அனைத்து அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்திகளை உடலுக்கு கொடுத்து ஆரோக்கியமாக உடலை பேணுகிறது.

தினை, சாமை, வரகு, குதிரைவாலி, சோளம் போன்ற சிறுதானியங்களில் உள்ள அதிகப்படியான நார்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் ப்ரொபேர்ட்டிஸ் கொண்டு இரத்தத்தில் க்ளுகோஸ் அளவை குறைத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் இதில் உள்ள க்ளுட்டன் என்கிற பசைப்பொருள் இல்லாததால், அதிகம் சாப்பிட திருப்தியை கொடுத்து அந்த பசியை குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. க்ளுட்டன் என்கிற பசைப்பொருள் அதிக பசியை தூண்டக்கூடியது அதனால் அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரை அளவு இரத்தத்தில் அதிகரித்து விடும். எனவே க்ளுட்டன் இல்லாத சிறுதானியங்களை எடுத்துக்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரைவள்ளி கிழங்கு மருந்தா..?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement