சதகுப்பை தீமைகள் | Sathakuppai Seeds Side Effects in Tamil

Advertisement

சதகுப்பை விதையின் தீமைகள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சதகுப்பை தீமைகள் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். சதகுப்பை அல்லது சதக்குப்பி செடியானது பார்ப்பதற்கு சீரக செடியினை போன்று இருக்கும். இந்த செடியினை சோயிக்கீரை, மதுரிகை என்ற பெயரினாலும் அழைப்பார்கள். இது பூக்கும் தாவர வகையை சார்ந்தது ஆகும். இவற்றில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சிக்கலை போக்கும். செரிமானத்தை மேம்படுத்தும், உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். பசியை தூண்டும்.

இப்படி உடலிற்கு பலவிதமான நன்மைகளை அளித்தாலும், அவற்றில் ஒரு தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதனை பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சதகுப்பை விதையின் பயன்கள்

சதகுப்பை தீமைகள் | Sathakuppai Seeds Side Effects in Tamil:

சதகுப்பை தீமைகள்

  • சதகுப்பை மூலிகை பெரும்பாலும் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை தந்தாலும், சில நேரங்களில் அல்லது அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
  • சதகுப்பை பெண்களின் மாதவிடாய் பிரச்சனையை போக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால், ஒரு சில பெண்களுக்கு அது எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தக்கூடும்.
  • சதகுப்பையை அதிகமாகவும் அடிக்கடியும் எடுத்துக்கொண்டால் மாதவிடாய் பிரச்சனை இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது.
  • கர்ப்பிணி பெண்களுக்கு சதகுப்பை தீங்கானது. ஏனெனில் அது கருவை பாதிக்கக்கூடும்.  எனவே கர்ப்பிணி பெண்கள் சதகுப்பை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • சதகுப்பை மூலிகையை அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.
  • சதகுப்பை மூலிகையை மற்ற மருந்துகளுடன் சேர்த்து சாப்பிட கூடாது.
  • எனவே, மேற்கூறிய காரணங்களால் சதகுப்பை மூலிகையை அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement