மீன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? – சத்துள்ள மீன் வகைகள் இதோ..

சத்துள்ள மீன் வகைகள்

சத்துள்ள மீன் வகைகள் – Healthy Fish in Tamil

நாம் சாப்பிடும் உணவு வகைகளில் அதிக ஆரோக்கியம் தரும் உணவு மீன். இந்த நீங்களில் நிறைய வகைகள் இருக்கின்றன. அதாவது மீன் தொட்டியில் வைத்து அழகிற்காக வளர்க்கும் மீன் வகைகளும் உண்டும். தின்தோறும் ருசித்து சாப்பிடும் மீன் வகைகளும் உண்டும். பொதுவாக மீன்களில் வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்று ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. மீன் சாப்பிடுவத்தினால் நமது உடலில் நல்ல கொழுப்பு மற்றும் அதிக புரோடீன் சத்துக்களை அதிகரிக்கலாம். நம் உணவு முறையில் மீன் வகைகளை எடுத்து கொள்வதினால் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு திறன், மூளை வளர்ச்சி மற்றும் அனீமியா உள்ளிட்டவைகளுக்கும் சிறந்தது. சரி வாங்க இந்த பதிவில் சத்துள்ள மீன் வகைகள் சிலவற்றை இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம்.

ரோகு மீன் நன்மைகள்:

ரோகு மீன் நன்மைகள்

சத்துள்ள மீன் வகைகள் – இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இந்த ரோகு மீன் கிடைக்கிறது. இந்த ரோகு மீனில் அதிகளவு ரோடீன் மற்றும் ஒமேகா 3 ரக கொழுப்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இந்த மீன் வகையில் மெர்குரி அளவு குறைவாக உள்ளதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம்.

கட்லா மீன் பயன்கள்:

catla fish in tamil

சத்துள்ள மீன் வகைகள் – இந்த கட்லா மீன் சுத்தமான நீரில் கிடைக்கும் மீன் என்று சொல்லலாம். முழுமையாக வளர்ந்த நிலையில், இந்த கட்லா மீன் அதிகபட்சம் 2 கிலோ வரை எடை கொண்டிருக்கும். இது அதிக எண்ணெய் நிறைந்த மீன் ஆகும். இதில் அதிகளவு சல்பர் மற்றும் சின்க் நிறைந்துள்ளது. இது சரும ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது.

காலா மீன் பயன்கள்:

Indian Salmon Fish

இந்த மீன் இந்தியாவின் சால்மன் என்றும் கூறப்படுகிறது. இது நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் அதிகம் கிடைக்கும். இது விலை உயர்ந்த மீன் என்பதோடு, இதன் சுவையும் தூக்கலாக இருக்கும். இந்த மீனில் அதிகப்படியான அமினோ ஆசிட் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது.

சால்மன் மீன் நன்மைகள்

அயிலை மீன் நன்மைகள்:

அயிலை மீன் நன்மைகள்

சத்துள்ள மீன் வகைகள் – இந்த அயிலை மீன் தென் பகுதி மற்றும் மத்திய இந்தியாவில் அதிகம் கிடைக்கும் மீன் ஆகும். இவற்றில் அதிகமாக ஒமேகா 3, வைட்டமின் டி மற்றும் செலனியம் நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியம், மூளை வளர்ச்சி, இரத்த அழுத்தம் என பல்வேறு பிரச்சனைகளை சரி செய்யும்.

சங்கரா மீன் பயன்கள்:

சங்கரா மீன் பயன்கள்

இந்த சங்கரா மீனில் அதிக புரோடீன் மற்றும் மிக குறைந்த அளவு மெர்குரி உள்ளது. இது அதிகளவு புரோடீன் தேவைப்படும் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த மீன் ஆகும். மேலும் இது உடல் எடை குறைப்பு மற்றும் தசைகளை வலுவாக்க சிறந்தது. இந்த மீனும் அனைவரும் வாங்க கூடிய விலையில் கிடைக்கிறது.

வஞ்சிரம் மீன் நன்மைகள்:

வஞ்சிரம் மீன்

இந்த வஞ்சிரம் மீனில் நிறைய புரோடீன், ஒமேகா 3, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 அதுகள் நிறைந்த மீன். இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வது, பார்வை குறைபாட்டை மேம்படுத்துவது, எலும்புகளை வலுவாக்குவது என பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. எனினும் இதில் மெர்குரி அளவு அதிகம் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இந்த மீனை தவிர்ப்பது நல்லது.

நெத்திலி மீன் நன்மைகள்

வவ்வால் மீன் பயன்கள்:

வவ்வால் மீன் பயன்கள்

மத்தி மீன் பயன்கள்:

மத்தி மீன் பயன்கள்

அதிகப்படியான DHA நிறைந்த மீன் இது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் ஞாபக சக்தியை தூண்டும். மேலும் மூளை வளர்ச்சிக்கும் இந்த மத்தி மீன் சிறந்தது. இதில் ஏராளமான புரோடீன், வைட்டமின் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு மன அழுத்தத்தை போக்குகிறது.

கெளுத்தி மீன் நன்மைகள்:

கெளுத்தி மீன் நன்மைகள்

குறைந்த அளவு கலோரி அதிக புரோடீன் நிறைந்த மீன் இது. இது தவிர இந்த கெளுத்தி மீனில் ஏராளமான நியூட்ரியன்ட்கள், வைட்டமின் பி12, செலினியம், ஒமேகா 3, ஒமேகா 6 பேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த மீன் சாப்பிடலாம். இது மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய கோளாறு ஏர்படுவதை தடுக்கும் திறன் கொண்டுள்ளது. இருப்பினும் இதில் மெர்குரி அளவு அதிகம் இருப்பதால் கருவுற்றவர்கள் இந்த மீன் சாப்பிட கூடாது.

விரால் மீன் நன்மைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil