சப்போட்டா பழம் தீமைகள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பழங்கள் சாப்பிடுவதால் அவர்கள் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்தை அளிக்கிறது. வளர்ந்து வரும் குழந்தைகள் பழங்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அவர்கள் உடல் வலுவாகும். இன்றைய காலத்தில் உள்ள உணவுகளில் பெரும்பாலான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. அதனால் மனிதர்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்காக பழங்கள் சாப்பிடுகிறார்கள்.
தினமும் பழங்கள் சாப்பிடுவது நன்மை தான். அதுவே ஒரு சில பழங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது அவை உடலுக்கு கெடுதல் விளைகிறது. இன்றைய பதிவில் சப்போட்டா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
சப்போட்டா பழம் நன்மைகள் | Sapota Benefits in Tamil
சப்போட்டா பழத்தில் உள்ள சத்துக்கள்:
சப்போட்டா பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் குடல் புண் மற்றும் குடல் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.
சப்போட்டா பழத்தின் தீமைகள்:
- சப்போட்டா பழம் மிகவும் கசப்பு தன்மை உடையது என்பதால் குழந்தைகள் இவற்றை அதிகம் உண்பதால் வாய் புண், தொண்டை அரிப்பு மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்படும்.
- சப்போட்டா பழத்தில் அதிக நீர் சத்து நிறைந்திருக்கிறது, அதிக அளவில் உடல் குளிர்ச்சியாக இருப்பவர்கள் சப்போட்டா பழத்தை சாப்பிட்டால் தலை வலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
- ஒரு சில மனிதர்களுக்கு சப்போட்டா பழம் சாப்பிடுவதனால் உடல் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- சப்போட்டா பழத்தில் நார் சத்துக்கள் நிறைந்திருப்பதால், இந்த பழத்தை அதிகம் எடுத்துக்கொள்ளும் போது செரிமான கோளாறு மற்றும் வயிற்று வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- சப்போட்டா பழத்தில் க்ளுகோஸ் மற்றும் கலோரி அதிகமாக இருப்பதால், இவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது இரத்தத்தில் சுகிறோஸ் அளவு அதிகமாகிறது இதனால் தான் நீரழிவும் ஏற்படுகிறது.
- உணவு கட்டுப்பாட்டில் இருக்கிறவர்கள் மற்றும் உடல் பயிற்சி செய்பவர்கள் ஒன்று அல்லது இரண்டு பழங்கள் எடுத்து கொள்ளலாம்.
- இந்த பழத்தில் சர்க்கரை அளவு இயற்கையாகவே அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
- இந்த பழத்தில் கலோரி இருப்பதனால் கர்ப்பிணி பெண்கள் சப்போட்டா பழத்தை அதிகம் உட்கொள்ளும் போது அவர்களுக்கு தேவையற்ற உடல் எடையை அதிகரிக்கும்.
- பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது தான் தினமும் ஒரேபழம் சாப்பிடாமல் வெவ்வேறு பழங்களை எடுத்து கொள்ளுங்கள். அதேபோல் ஒன்று அல்லது இரண்டு பழம் மட்டும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
- உடலுக்கு கெடுதல் தரும் உணவுகளை தவிர்த்து தினமும் பழங்கள் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள்.
கர்ப்ப காலத்தில் சப்போட்டா பழம் சாப்பிடலாமா? Sapota Benefits in Pregnancy
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |