Saamai Arisi Theemaigal
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சாமை அரிசி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் உடலிற்கு தீமைகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். சாமை அரிசி ஆங்கிலத்தில் Little Millet என்று அழைக்கப்படுகிறது. இதனை அறிவியல் பெயர் பெயர் பானிகம் சுமட்ரன்ஸ் (Panicum sumatrense) என்பதாகும். இது வளர்ச்சியை தாங்கி வளரக்கூடிய பயிர் ஆகும். இதனை நீண்ட காலம் சேமித்து வைத்து, விதைத்தாலும் நன்றாக வளரும் தன்மை கொண்டது. சாமை அரிசி ஆனது, அரிசி மற்றும் கோதுமையை விட அதிக ஊட்டசத்து நிறைந்ததாக கூறப்படுகிறது.
சாமை அரிசியை இந்தியா, சீனா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகள் அதிகம் உற்பத்தி செய்கின்றன. சாமை அரிசியில் நம் உடலிற்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக இருக்கிறது. குறிப்பாக சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புரதம் நிறைந்த நல்ல உணவாக சாமை அரிசி இருக்கிறது. என்னதான் இதில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், இதனை அதிகமாகவும் அடிக்கடியும் எடுத்துக்கொண்டால் உடலில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதனை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சாமை அரிசி பயன்களை தெரிந்து கொள்ளுங்கள்
Little Millet Disadvantages in Tamil | சாமை அரிசி தீமைகள்:
சாமை அரிசியை குறைவாகவும் அளவோடும் எடுத்துக்கொண்டால் எந்த பிரச்சனையும் வராது. அதுவே, அதனை அதிகமாகவும் அடிக்கடியும் உணவில் சேர்த்து வந்தால் உடலிற்கு பல பாதிப்புகளை உண்டு பண்ணும்.
செரிமானம் மற்றும் மலசிக்கல் பிரச்சனை:
சாமை அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை அதிகமாக சாப்பிட்டால் செரிமானம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் . மேலும், வீக்கம் மற்றும் வாயு போன்ற செரிமான கோளறுகளையும் ஏற்படுத்தும்.
ஒவ்வாமை பிரச்சனை:
சாமை அரிசி சாப்பிட்டால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை உண்டாகும். ஆகையால், ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள் சாமை அரிசியை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
தைராய்டு பிரச்சனை:
சாமை அரிசியில் கோய்ட்ரோஜன்கள் உள்ளது. இது, தைராய்டின் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. ஹைப்போ தைராய்டிசத்திற்கு வழிவகுக்கும். எனவே, தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் அல்லது அயோடின் குறைபாடு உள்ளவர்கள் சாமை அரிசியை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக கற்கள் உருவாகலாம்:
சாமை அரிசியில் ஆக்சலேட்டுகள் உள்ளது. இது கால்சியம் போன்ற தாதுக்களுடன் பிணைக்கப்பட்டு சிறுநீரகங்களில் கற்களை உருவாக்கலாம். எனவே, சாமை அரிசியை அளவோடு உட்கொள்ள வேண்டும்.
சாமை அரிசியினை சேர்ப்பதற்கு முன்பாக இதை தெரிந்துக்கொள்ளுங்கள்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |