சித்தரத்தை சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகளா..? இவர்கள் மறந்தும் கூட சாப்பிடாதீர்கள்..!

Advertisement

சித்தரத்தை தீமைகள் | Sitharathai Disadvantages in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சித்தரத்தை தீமைகள் (Sitharathai Disadvantages in Tamil) பற்றி பார்க்கலாம் வாங்க. அற்புத மூலிகை பொருட்களில் சித்தரத்தையும் ஒன்று. நெஞ்சில் இருக்கும் சளியை அகற்றக்கூடிய அருமருந்து. சித்திரத்தை இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. இவற்றின் மறுத்துவ குணங்கள் பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். அதேபோல், சித்தரத்தையில் ஒரு சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதுமட்டுமில்லாமல், இதனை ஒருசிலர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எனவே, அவற்றின் விவரங்கள் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.

சித்தரத்தையை நாம் பயன்படுத்தி வருவோம். இதில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், ஒரு சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதனை பற்றி நாம் தெரிந்துகொள்வதில்லை. நாம் உட்கொள்ளும் உணவு பொருட்களின் நன்மைகளை எப்படி நாம் தெரிந்துகொள்கிறமோ அதேபோல், அதனால் ஏற்படும் தீமைகளை பற்றி தெரிந்துகொள்வதும் அவசியம்.

சித்தரத்தை மருத்துவ பயன்கள்

சித்தரத்தை தீமைகள்:

சித்தரத்தை தீமைகள்

சித்தரத்தையில் கலோரி, கார்போஹைட்ரேட், புரோட்டின், நார்ச்சத்து, சோடியம் மற்றும்
வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் நம் உடலிற்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும். இதனை அதிகமாக எடுத்துக்கொண்டால் ஒரு உடல் உபாதைகளையும் ஏற்படுத்துகிறது.

வயிற்றுப்போக்கு:

சித்தரத்தையில் என்னத்தான் அதிக அளவில் ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் ஒரு சில தீமைகளும் இருக்க செய்கிறது. அவற்றில் ஒன்றுதான் வயிற்றுப்போக்கு. அதாவது, சித்தரத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. ஆகையால், இதனை அளவோடு உட்கொள்வது நல்லது.

குமட்டல் மற்றும் வாந்தி:

சித்தரத்தையை அதிக அளவில் எடுத்துக்கொள்வதால் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே, சித்தரத்தையை மருத்துவர் கூறிய அளவில் எடுத்து கொள்வது அவசியம்.

ஆண்மை குறைவு:

ஆண்கள் சித்தரத்தையை அதிகமாக எடுத்துக்கொள்வதால் ஆண்மை குறைவு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, ஆண்கள் இதனை கொஞ்சமாக சாப்பிடுவது நல்லது.

சித்தரத்தை யார் சாப்பிடக்கூடாது.?

  • சித்தரத்தையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாது. ஏனென்றால் சித்தரத்தை கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.
  • வயிறுபோக்கும், வாந்தி போன்ற வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் சித்தரத்தையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனைகளுக்காக மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் நபர்கள் சித்தரத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • ஆண்மை குறைவு பிரச்சனை உள்ள ஆண்கள் இதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • ஏனென்றால், சித்தரத்தையை மற்ற மருந்துகளுடன் சேர்த்து உட்கொள்ளும்போது பலவிதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

கழற்சிக்காய் தீமைகள் | கழற்சிக்காய் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா..?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement