சிறுகுறிஞ்சான் தீமைகள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சிறுகுறிஞ்சான் தீமைகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். சிறுகுறிஞ்சான் என்பது இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை செடி ஆகும். இதில் ஏராளமான நன்மைகள் கொட்டி கிடக்கிறது. இருந்தாலும், இதில் ஒரு சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
சிறுகுறிஞ்சான் ஆனது, சர்க்கரை கொல்லி என்றும் அழைக்கப்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது உடலில் உள்ள சர்க்கரை அளவை உறிஞ்சுவதாக சொல்லப்படுகிறது. இதனை தவிர பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு சிறுகுறிஞ்சான் சிறந்த மூலிகை செடியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பலரும் சிறுகுறிஞ்சான் மூலிகையை பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி சிறுகுறிஞ்சான் மூலிகையை பயன்படுத்துவார்கள் அதனால், ஏதேனும் உடல்நலத்திற்கு தீமைகள் ஏற்படுமா.? என்பதை இப்பதிவை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
Sirukurinjan Side Effects in Tamil:
சிறுகுறிஞ்சான் மூலிகை ஆனது, நமக்கு பெரும்பாலும் நன்மையே அளிக்கிறது. இருந்தாலும், இதனை அதிகமாகவோ அல்லது அடிக்கடியோ எடுத்துக்கொண்டு அது உடலிற்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அவை பின்வருமாறு:
- சிறுகுறிஞ்சான் மூலிகையை அதிகமாக பயன்படுத்துவதால் சிலருக்கு உடல் பருமன், இரைப்பை பிரச்சனை, மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
- சிறுகுறிஞ்சான் அதிக பசியை தூண்டக்கூடியது. இதனால், சிறுகுறிஞ்சான் மூலிகையை அதிகமாக எடுத்துக்கொண்டால் பசி உணர்வு அதிகரித்து உடல் எடை அதிகரிக்கலாம்.
- சிறுகுறிஞ்சான் மூலிகையில் உள்ள கசப்பு சுவை மற்றும் நச்சு தன்மைகள் சிலருக்கு ஒவ்வாமை மற்றும் வாந்தி போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
- நீரிழிவு நோயாளிகள் சிறுகுறிஞ்சானை சரியான அளவு மற்றும் சாப்பிடும் முறையைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
- சிறுகுறிஞ்சான் மூலிகை பயன்படுத்தும் ஒரு சிலருக்கு தலைவலி, குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம்.
- இன்சுலின் போடும்போது, இதையும் சேர்த்து சாப்பிட்டால் அதிக ரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம். எனவே, மருத்துவரின் அனுமதி இல்லாமல் சிறுகுறிஞ்சான் மூலிகையை எடுத்துக்கொள்ளக் கூடாது.
சிறுகுறிஞ்சான் மாடித்தோட்டத்தில் எப்படி பயிரிடுவது..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |