சிறுநீர் தொற்று நீங்க இயற்கை மருத்துவம்

siruneeraga thotru

சிறுநீர் தொற்று சிகிச்சை வீட்டு வைத்தியம்

siruneeraga thotru:- சிறுநீரக குழாய்களில் ஏற்படும் தொற்று காரணமாக சிறுநீரக பகுதியில் எரிச்சல் ஏற்படும். இந்த பிரச்சனை ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிக தொந்தரவை கொடுக்கிறது. இருப்பினும் இந்த சிறுநீர் தொற்று எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்களை நாம் கண்டறிந்துவிட்டால் நாம் அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும். சரி இந்த பதிவில் சிறுநீர் தொற்று ஏற்பட காரணங்கள் என்ன?, அதன் அறிகுறிகள் மற்றும் இந்த பிரச்சனைக்கு இயற்கை மருத்துவம் ஏதாவது உள்ளதா என்பதை பற்றி படித்தறியலாம் வாங்க..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் –> சிறுநீரக பாதிப்பு அறிகுறிகள்

சிறுநீர் தொற்று ஏற்பட காரணம்:

சிறுநீரகம் மற்றும் அது தொடர்பான பகுதியில் ஏற்படும் பிரச்சனைக்கு என்ன காரணம் என்று கீழ் பார்க்கலாம்.

காரணம்: 1

பொதுவாக பெண்களுக்கு இயற்கையாகவே சிறுநீர்ப்பையின் அளவு பெரியதாக இருக்கும். இதனால் பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க தேவை இருக்காது. இதற்காக சிறுநீர் கழிக்காமல் இருந்தால் அதுவே சிறுநீரக பகுதியில் தொற்று ஏற்பட காரணமாகிவிடுகிறது.

காரணம்: 2

சரியான வாழ்க்கை முறை இல்லாமல், எப்போது வேண்டுமானாலும் சாப்பிடுவது, சரியான நேரத்திற்கு உறங்காமல் இருப்பது, ஒரே இடத்தில் வெகுநேரம் அமர்ந்து வேலை செய்வது, உடலுக்கு நல்ல பயிற்சி இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களினால் ஹார்மோன் அளவுகளில் மாற்றம் ஏற்படும். அதன் விளைவாக சிறுநீரக பிரச்சனையும் வந்து சேரும்.

காரணம்: 3

பொதுவாக யாராக இருந்தாலும் அவர்களது உடலுக்கு தகுந்தளவு தண்ணீர் அருந்த வேண்டும். ஒருவர் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருந்தால் சிறுநீரகம் பகுதியில் மாசுக்கள் தங்கிவிடுகிறது. இதன் காரணமா சிறுநீரக பகுதியில் தொற்று ஏற்படுகிறது.

காரணம்: 4

ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக தேநீர், காபி மற்றும் குளிர்பானங்களை அருந்துவதன் மூலமாகவும் சிறுநீரக பகுதியில் தொற்றுகள் உண்டாகுகிறது.

காரணம்: 5

பயணத்தின்போது எட்டுமணி நேரம் முதல் பத்துமணி நேரம் வரை கூட சிறுநீர் கழிக்காமல் இருப்பதனால் நிச்சயம் சிறுநீரக தொல்லை ஏற்படும்.

காரணம்: 6

உள்ளாடைகளை ஈரமாக போட்டு கொண்டாலும் சிறுநீரக பகுதியில் தொற்று ஏற்படும். ஆகவே நன்கு உலர்ந்த உடைகளை மட்டும் பயன்படுத்துவது நல்லது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் –> சிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..!

சிறுநீரக தொற்று அறிகுறிகள் | Siruneeraga noi thotru arikurigal in tamil:

  1. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு.
  2. அடி வயிறில் வலி ஏற்படும்.
  3. பின் முதுகில் வலி ஏற்படும்
  4. கிராம்ப்(cramp) இழுத்துப் பிடிப்பது போன்ற ஒரு உணர்வு
  5. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி உந்துதல்
  6. தானாகவே சிறுநீர் கசிவு ஏற்படுதல்
  7. தூங்கும்போது நீங்கள் உணராமலேயே சிறுநீர் கழித்து விடுதல்

இது போன்ற அறிகுறிகள் அனைத்தும் சிறுநீரக தொற்று அறிகுறிகள் ஆகும்.

சிறுநீர் தொற்று நீங்க இயற்கை மருத்துவம்:

பார்லி கஞ்சி:

இந்த சிறுநீரக தொற்றுக்கு சிறந்த இயற்கை மருத்துவத்தில் இதுவும் ஒன்று பார்லி அரிசியில் கஞ்சி செய்து அதில் சுக்குப்பொடி சேர்த்து ஆறவிட்டு, மோருடன் கலந்து பருகி வந்தால் நோய்த் தொற்று குணமாகும்.

கற்றாழை:

இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கற்றாழையை சுத்தம் செய்து சாப்பிட்டு வரலாம். இதனால் உடல் சூடு தணியும். சிறுநீர் போவதில் சிரமம் இருக்காது.

இளநீர்:

இளநீர் நன்கு குளிர்ச்சி வாய்ந்த பானமாகும். இந்த இளநீரில் சிறிது ஜீரகத்தை சேர்த்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலையில் அந்த தண்ணீரை பருகுங்கள், இவ்வாறு பருகுவதால் சிறுநீரக தொற்று குணமாகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் –> கிட்னி கல் வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

 

குறிப்பு:

வெது வெதுப்பான தண்ணீரில் உங்கள் உறுப்பை சுத்தம் செய்து கொள்வது. மேலும், கல் உப்பு கலந்து அந்த தண்ணீரைப் பயன்படுத்தியும் சுத்தம் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதினால் எரிச்சல் அடங்கும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்