சீரகத் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..?

Jeera Water Benefits

Jeera Water Benefits In Tamil

வணக்கம் பொதுநலம்.காமின் அன்பான நேயர்களே. இன்று நம் ஆரோக்கியம் பதிவில் எதை பற்றி பார்க்கப்போகிறோம் என்று தெரியுமா? அனைவருக்கும் பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்கப்போகிறோம். சீரகத் தண்ணீர் குடிப்பதால் நமது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தான் பார்க்கப்போகிறோம்.

நம் அன்றாட வாழ்வில் எல்லோர் வீட்டு சமையலறையிலும் இடம்பெறும் ஒரு முக்கிய உணவு பொருள் தான் இந்த சீரகம். சீரகத்தின் நன்மைகள் பற்றி நாம் அவ்வளவாக தெரிந்திருக்கமாட்டோம். “ஜீரா அல்லது சீரகம்” என்று அழைக்கப்படும் இது ஒரு அற்புதமான மூலிகை ஆகும். சீரகம் என்ற பெயரிலே ஜீரணத்தை கொண்டுள்ளது. சீரகத்தை அன்றாடம் நம் உணவு பொருட்களில் சேர்ப்பதால் ஜீரண சக்தியை கொடுக்கிறது.

வால் மிளகு மருத்துவ குணங்கள்

 

இந்த சீரகம் ஒரு உணவு பொருட்களில் சுவை கூட்டுவது மட்டுமின்றி பல நன்மைகளை தரும் மருத்துவ பொருளாகவும் பயன்படுகிறது. இந்த சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவருவதால் எண்ணற்ற நன்மைகளை தருகிறது. அதுபோல சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு எண்ணற்ற பலன்களை தரும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது. சீரகம் உடலில் உள்ள உப்புசத்தை சரிசெய்ய உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இவ்வளவு நன்மைகளை தருகின்ற சீரகத்தை தண்ணீரில் கலந்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

Jeera Water Benefits In Tamil:

தினமும் நாம் சீரகத் தண்ணீர் குடிப்பதால் இதய தசைகளை வலுப்படுத்துகிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும் சீரகம் கொழுப்புசத்துக்கள் சேர்வதையும் தடுக்கிறது.

தூதுவளை மருத்துவ பயன்கள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

சீரகத்தில் பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. அதனால் இது உடலில் அதிகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுவதால் தொற்றுநோய் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற ஏராளமான தாதுக்கள் சீரகத்தில் அடங்கியுள்ளன. மேலும் சீரகத்தில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால் தொற்றுநோய்களை தடுப்பதற்கு பயன்படுகிறது.

முக்கியமாக:  சீரகத்தை பச்சையாக பயன்படுத்த வேண்டும். வறுத்து மற்றும் பொடியாக சாப்பிடுவதனால் இதன் ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். 

சீரகத் தண்ணீர் குடித்தால் என்ன பலன்:

  • இந்த சீரகத் தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
  • உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுவதற்கு சீரகத் தண்ணீர் பயன்படுகிறது. இது கல்லீரலுக்கு பலத்தை கொடுக்கிறது. மேலும் சீரகத் தண்ணீர் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வயிற்று வலிக்கு சிறந்த வலி மருந்தாக சீரகத் தண்ணீர் பயன்படுகிறது.
இந்த 5 ஜூஸ் குடித்தால் போதும் கல்லீரல் சுத்தமாகும்
  • சீரகத் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வருவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • இந்த சீரகத் தண்ணீர் குடிப்பதால் நமக்கு தொற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.
  • சீரகத் தண்ணீரில் பொட்டாசியம் அதிகம் காணப்படுவதால் அது உடல் இயக்க செயல்பாட்டிற்கு அதிகம் உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது.
  • சீரகத் தண்ணீர் துரித உணவுகளால் ஏற்படும் அஜீரண கோளாறுகள் வருவதை சரிசெய்கிறது. மேலும் அஜீரணக் கோளாறுகள், குமட்டல், அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்கிறது.

jeera water for weight loss in tamil:

உடலில் ஏற்படக்கூடிய கொழுப்புகளை குறைப்பதற்கு சீரகத் தண்ணீர் உதவுகிறது. மேலும், இந்த சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடல் பருமன் குறைகிறது. மேலும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

Jeera Water For Skin: 

Jeera Water For Skin

  • மேலும் இதில் உள்ள பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், செலினியம், இரும்புச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நம் சரும ஆரோக்கியத்தையும், கூந்தல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
  • சீரகத்தை கொதிக்க வைத்து குடிப்பதால் காலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் இது கல்லீரலை பாதுகாக்கிறது. கல்லீரலுக்கு தேவையான ஒட்டுமொத்த பலன்களையும் கொடுக்கிறது.
  • சீரகத் தண்ணீர் குடிப்பது உடலில் இன்சுலின் உற்பத்தியை தூண்டுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க இது உதவுகிறது.
  • சீரகத்தில் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது சோர்வு, தலைசுற்றல், பலவீனம், ரத்தசோகை போன்றவற்றிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil Maruthuvam Tips