சீரகத்தை சமையலுக்கு சேர்க்கும் முன் அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்..!

cumin seeds side effects in tamil

சீரகம் தீமைகள்

ஹலோ பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவின் மூலம் நண்பர்களுக்கு ஒரு பயனுள்ள தகவலை தெரிவிக்க போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி..! நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற திருப்தி உங்களுக்கு இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். பொதுவாக நாம் உண்ணும் உணவுகளில் எத்தனையோ பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

அதாவது கடுகு, சீரகம், மிளகு, சோம்பு போன்ற உணவு பொருட்களை தான் கூறுகின்றேன். இவை அனைத்துமே பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால் இதிலும் தீமைகள் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் அது தான் உண்மை. நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பொருட்களிலும் தீமைகள் இருக்கிறது. அந்த வகையில் இன்று சீரகத்தின் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

சீரகம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்

சீரகத்தின் தீமைகள் என்ன: 

சீரகத்தின் தீமைகள் என்ன

நம் வீட்டு அஞ்சறை பெட்டியில் இருக்கும் பொருட்களில் சீரகமும் ஓன்று. நாம் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் சீரகம் சேர்த்து சமைத்து வருகின்றோம். காரணம் சீரகத்தில் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் சீரகத்தில் இருக்கும் பயன்கள் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்தாக இருக்கிறது. ஆனால் இதிலும் தீமைகள் இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா..?

எந்த பொருளாக இருந்தாலும் அதை அளவோடு தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான். அதுபோல தான் சீரகமும். சரி வாங்க நண்பர்களே சீரகத்தின் தீமைகள் பற்றி இங்கு காணலாம்.

சீரக தண்ணீர் யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா 

சீரகத்தின் தீமைகள் என்ன

நெஞ்செரிச்சல்: நாம் அதிகளவு சீரகத்தை உணவில் சேர்த்து கொள்ளும் போது மிகவும் பொதுவான செரிமான பிரச்சனைகளில் ஒன்றான நெஞ்செரிச்சலை  ஏற்படுத்துகிறது.

ஏப்பம் வருவது: சீரகத்தில் இருக்கும் கார்மினேடிவ் என்ற விளைவானது அதிகப்படியான வீக்கம் மற்றும் குடல் குழாயிலிருந்து வாயுவை வெளியேற்றுகிறது.  அதாவது சீரகத்தை அதிகமாக எடுத்து கொண்டால் அது அதிகப்படியான ஏப்பத்தை ஏற்படுத்துகிறது.

கல்லீரல் பாதிப்பு: சீரகத்தில் இருக்கும் எண்ணெய் அதிகளவு ஆவியாகும் தன்மை கொண்டது. அதனால் உணவில் சீரகத்தை அதிக அளவில் சேர்த்து கொள்ளும் போது  கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உணவில் அளவுக்கு அதிகமாக மிளகு சேர்த்து கொள்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரியுமா

சீரகத்தின் தீமைகள் என்ன

இரத்த சர்க்கரை அளவு குறைதல்: பெரும்பாலும் நாம் சீரகத்தை உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ளும் போது உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சீரகத்தை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

அதிக இரத்தப்போக்கு: சீரகத்தை மாதவிடாய் காலத்தில் அதிகமாக எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இதனால் அதிக இரத்தப்போக்கு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

கர்ப்பிணி பெண்கள்: கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் சீரகத்தை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அதிக அளவு சீரகத்தை  உட்கொள்வது கருச்சிதைவுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Health Tips In Tamil