சுக்கு மருத்துவ பயன்கள் | Sukku Uses in Tamil
சுக்குவானது இஞ்சியை நன்றாக காய வைத்து அதில் உள்ள தண்ணீர் நன்றாக வற்றிய பிறகு நமக்கு கிடைப்பதுதான் இந்த சுக்கு. குழந்தைகளுக்கு பசி எடுக்கவில்லை என்றாலும், ஏதேனும் வயிறு மந்தத்தன்மை போன்று இருந்தாலும் சிறிதளவில் சுக்கு அரைத்து ஊற்று என்று நம் வீட்டில் உள்ள பாட்டி கை வைத்தியம் கூறுவதுண்டு. சுக்கில் அந்த அளவிற்கு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. அனைத்து கடைகளிலும் விலை மலிவில் கிடைக்கக்கூடியது இந்த சுக்கு. இதனாலயே இந்த சக்குவின் மருத்துவ குணம் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. வாங்க இந்த பதிவில் எந்தெந்த நோய்களை சுக்கு குணப்படுத்தும் என்று தெரிஞ்சிக்கலாம்..
வால் மிளகு மருத்துவ குணங்கள் |
வயிறு எரிச்சல் முற்றிலும் நீங்க:
Sukku Uses in Tamil: ஒரு சிலருக்கு அதிக காரம் உள்ள உணவை சாப்பிட்ட பிறகு வயிற்றில் எரிச்சல் ஏற்படும். அதற்கு கரும்பு சாறுடன் சிறிதளவு சுக்கு சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த சாறினை குடித்து வந்தால் வயிறு எரிச்சல் முற்றிலும் குணமாகும்.
மூட்டு வலி நீங்க:
சுக்கு நன்மைகள்: வயதாகிவிட்டாலே அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனையில் ஒன்று முழங்கால் மூட்டுவலி தான். மூட்டுவலி முற்றிலும் குணமாக பாலுடன் சிறிதளவு சுக்கு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்ததை நன்றாக சூடுபடுத்தி இளஞ்சூடான பதத்திற்கு ஆறியதும் வலி உள்ள இடங்களில் பூசிவர மூட்டுவலி முழுமையாக குணமாகும்.
இருமல் குணமாக:
உடலில் சளி அதிகமாக சேர்ந்துவிட்டால் இருமல் தொந்தரவு இருந்துக்கொண்டே இருக்கும். இருமல் சரியாக சுக்குவை தூள் செய்து தேநீர் தயாரித்து தொடர்ந்து குடித்து வர தொடர் இருமல் குணமாகும்.
தூதுவளை மருத்துவ பயன்கள் |
தலைபாரம் குறைய:
Sukku Maruthuva Payangal in Tamil: சிலருக்கு அதிக பணிச்சுமை இருந்தாலும், வெளிப்பயணம் மேற்கொண்டாலும் தலைபாரம் வந்துவிடும். தலையில் நீர் கோர்த்துக்கொண்டால் பயங்கரமான வலி ஏற்படும். தலைப்பாரத்தை உடனடியாக நீக்க சுக்குவினை சொரசொரப்பாக இருக்கும் கல்லில் உரசி அதிலிருந்து கிடைக்கும் விழுதுடன் சிறிதளவு பெருங்காயத்தூளை சேர்த்து தலையில் பற்றுப்போட்டு கொண்டால் தலைபாரம் உடனே குறைந்துவிடும்.
வாய் துர்நாற்றம் நீங்க:
தமிழில் சுக்கு பயன்கள்: சிலருக்கு சரியாக பல் துலக்காமல் வாய் துர்நாற்றம் ஏற்படும். எப்போதும் வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் சுக்குவை சிறிதளவு பொடி செய்து அதனுடன் உப்பு சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால் பல் கூச்சம் மற்றும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |