சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் | Surya Namaskar Benefits in Tamil

Advertisement

சூரிய நமஸ்காரம் பயன்கள் | Benefits of Surya Namaskar in Tamil

மனிதனின் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்று. அதற்காக தான் நம் முன்னோர்கள் உணவு முதல் உடற்பயிற்சி வரை அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் அதற்கான வழிமுறையையும் கற்று கொடுத்து சென்றுள்ளனர். அதில் முக்கியமான ஒன்று தான் உடற்பயிற்சி, அதிலும் சூரியன் முன் நின்று செய்யும் சூரிய நமஸ்காரத்தால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. அப்படி என்ன நன்மைகள் கிடைக்கிறது மற்றும் அதை செய்யும் முறையை பற்றியும் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

தொப்பை குறைய யோகாசனம்

சூரிய நமஸ்காரம்:

  • உடலுக்கு பலவிதத்திலும் நன்மைகளை தருவது சூரியன், இதில் உள்ள வைட்டமின் டி உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது. இதை நீங்கள் காலை மற்றும் மாலையில் செய்வது நல்லது.
  • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்யலாம். கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த உடற்பயிற்சியை செய்வது நல்லது.

சூரிய நமஸ்காரம் பெயர்கள் – Surya Namaskar 12 Steps Names in Tamil:

  1. பிராணமாசனம்
  2. அஸ்ட உட்டனாசனம்
  3. அஸ்டபாதாசனம்
  4. ஏகபாதபிரஸர்நாசனம்
  5. தந்தாசனம்
  6. அஷ்டாங்க நமஸ்காரம்
  7. புஜங்காசனம்
  8. அதோ முக்கா ஸ்வானாசனம்
  9. அஸ்வ சஞ்சலாசனம்
  10. உட்டனாசனம்
  11. அஸ்ட உட்டனாசனம்
  12. பிராணமாசனம்

இரத்த ஓட்டத்தை சீராக்க:

Sun Salutation Benefits Tamil

Sun Salutation Benefits Tamil: சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இயங்குகிறது, அதனால் இரத்த குழாய்களில் உள்ள அடைப்பு நீங்குகிறது. எனவே இரத்த குழாய் அடைப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த பயிற்சியை மேற்கொள்வது நல்லது. இதய துடிப்பை சீராக பராமரிக்கவும் உதவியாக இருக்கும்.

உடல் எடை குறைய: 

சூரிய நமஸ்காரம் பயன்கள்

  • Surya Namaskar for Weight Loss in Tamil: பருமனாக உள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சியில் முக்கியமான ஒன்று சூரிய நமஸ்காரம். வயிறு, தொடை, இடுப்பு, கழுத்து போன்ற இடங்களில் உள்ள கொழுப்புகள் குறையும்.
  • மேலும் இது உங்கள் உடல் உறுப்புகளுக்கு வலிமை தருவதற்கும், எலும்பு வளர்ச்சிக்கும் பெரிதும் உதவி வருகிறது.

மாதவிடாய் காலத்தில்:

Surya Namaskar Benefits For Ladies in Tamil

  • Surya Namaskar Benefits For Ladies in Tamil: பெண்களுக்கு உள்ள பெரும்பாலான பிரச்சனைகளில் முதன்மையாக இருப்பது மாதவிடாய் சுழற்சி தான்.
  • ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் வருவதில் தாமதம் ஏற்படும், அதனை சரி செய்வதற்கு தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

நினைவாற்றல் அதிகரிக்க:

Surya Namaskar Benefits For Ladies in Tamil

  • Surya Namaskar Benefits in Tamil: நரம்பு மண்டலத்தை சீராக இயங்க வைப்பதற்கு சூரிய நமஸ்காரத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று சொல்லலாம்.
  • நரம்புகளின் செயல்கள் சீராக இருப்பதால் மூளையின் வளர்ச்சிக்கும், நினைவாற்றல் அதிகரிக்கவும் உதவியாக உள்ளது.

சரும பொலிவிற்கு:

சூரிய நமஸ்காரம் பயன்கள்

  • சூரிய நமஸ்காரம் பயன்கள்: எந்த உடற்பயிற்சி செய்தாலுமே உடலுக்கு ஒரு கூடுதல் பொலிவு கிடைக்கும்.
  • அதிலும் இந்த உடற்பயிற்சி செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. முக சுருக்கம் மற்றும் வயதான தோற்றத்தை தாமதப்படுத்த உதவுகிறது.

நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்க:

சூரிய நமஸ்காரம் பயன்கள்

  •  Surya Namaskar Benefits in Tamil: இந்த உடற்பயிற்சி செய்வதால்  உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது. இதனால் நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கவும், சீராக செயல்படவும் உதவுகிறது.
  • மேலும் தைராய்டு மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு சீராக இருப்பதால் பதட்டம் மற்றும் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது.

தோல் வலிமை பெற:

Benefits of Surya Namaskar in Tamil

  • Benefits of Surya Namaskar in Tamil: சூரிய நமஸ்காரத்தில் உடலில் உள்ள தசைகள் அனைத்தும் வலுவடைகிறது. அதிலும் முக்கியமாக கழுத்து, தோல், மணிக்கட்டு, வயிறு பகுதியில் உள்ள தசைகள் வழுவடைவதற்கு உதவியாக இருக்கும்.
உடல் எடை குறைய யோகாசனம்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement