சோடா குடிப்பதால் ஏற்படும் தீமைகள்| Soda Kudipathan Theemaikal
வணக்கம் நண்பர்களே..! இன்று நாம் பார்க்க போறது சோடா குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றித்தான். சோடா எல்லாரும் அதிகம் குடிக்கும் ஒரு பொருள். ஒரு சிலர் அதனை விரும்பி அருந்துவார்கள். சிலர் சாப்பாடு செரிமானம் ஆகுவதற்கா குடிப்பார்கள். இப்போது எல்லா இடங்களிலும் அதாவது ஹோட்டல் தியேட்டர் பார்க் என எங்கு சென்றாலும் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுடன் சேர்த்து சோடாவையும் குடிக்க செய்கிறார்கள். உணவுடன் சேர்த்து சோடா குடிக்கும் பழக்கம் அதிகமாகி வருகிறது. இப்பழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக குடித்து வருகிறார்கள். உடலுக்கு தீங்கு என தெரிந்தும் சுவைக்காக தொடர்ந்து அருந்துகிறார்கள். சிலர் சோடா குடிப்பதை நிறுத்த முடியாமல் அடிமையாகி போகிறார்கள்.
இதனுடைய பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் சோடா குடித்துக்கொண்டிருக்கிறோம். தவறான தகவல்களால் மருத்துவம் என்று நினைத்து சில தவறான பழக்கங்களை கடைப்பிடித்து வருகிறோம். சிலர் அஜீரணத்திற்காக சோடா குடித்தால் சரியாகும் என்பதனால் குடிப்பார்கள் அப்படி குடித்தால் நம் உடலுக்குள் என்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதை பார்ப்போம்.
கிட்னி பாதிப்பு அறிகுறிகள்:
- சோடா குடிப்பதால் கிட்னி தான் முதலில் பாதிக்கப்படுகிறதாம் இது ஹார்வோர்டு மருத்துவ பள்ளியில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சோடா குடிப்பதால் கிட்னி சேதமடைகிறது அது டயட் சோடாவாக இருந்தாலும் இதே பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்க்கரை நோய்:
- இந்த சோடாவில் அதிகம் சர்க்கரை இருப்பதால். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த சோடாவை குடிப்பதால் அதிகம் சர்க்கரைஅளவை அதிக படுத்தசெய்கிறது .நாம் தினம் சாப்பிடும் சாப்பாட்டில் சர்க்கரை இருக்கும். அதோடு நாம் குடிக்கும் சோடாவில் சர்க்கரை அதிகஅளவு இருக்கிறது இதனால் சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கும் நோய் வர வழி செய்கிறது.
புற்றுநோய் வருவதற்கான காரணங்கள்:
- சோடா பார்க்க அழகாக கண்ணை பறிக்கும் வண்ணத்திற்கு இருக்கும். சோடாவின் வண்ணத்திற்காக பலவிதமான கெமிக்கல் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அதில் இருக்கும் இனிப்பு சுவை என்பது அமோனியா மற்றும் சல் ஃபைடு இரண்டும் அதிக வெப்பத்தினாலும் சேர்க்கப்பட்டிருக்கும். இதில் ஏற்படும் வேதியல் மாற்றாகளினால் Methylimidazole உருவாகிறது.
- எலிகள் மீது நடத்திய சோதனையில் இந்த ரசாயனத்தால் குடல், கல்லிரல் மற்றும் தைரார்டு புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பற்களின் எனாமல்:
- சோடாவில் இருக்கும் அமிலம் பற்களில் இருக்கும் எனாமலை நீக்கும் ஆற்றல் கொண்டது. பி எச் அளவு குறைவாக இருக்கும் போது தான் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். நாம் குடிக்கும் தண்ணீர் அளவு 7.0 ஆனால் சோடாவில் இருக்கும் பி எச் அளவோ 2.5 க்கும் குறைவாக இருக்கும்.
கால்சியம் குறைபாடு அறிகுறிகள்:
- சோடாவில் இருக்கும் போஸ்பொரிக் அமிலம் மனிதர்களின் எலும்பில் இருக்கும் கால்சிய சத்தை தளர செய்கிறது. இதனால் கை கால்களில் வலி மற்றும் முட்டு தேய்மானம் போன்ற பல பிரச்சனைகள் வரக்கூடும்
கால்சியம் உணவை எடுத்துகொண்டாலும் அதனை கிரகத்துக் கொள்ள விட்டமின் டி தேவை. தொடர்ந்து சோடா குடித்து வந்தால் உடலில் சத்துக்கள் குறைவாகத்தான் இருக்கும்.
டயட் சோடா | Diet soda health riskus:
- இன்றைக்கு உடல் எடை குறைக்க விழிப்புணர்வு பெரும்பலானோருக்கு இருக்குறது. டயட் என்ற பெயரில் பல முயற்சிகள் தினம் எடுத்துக்கொண்டுருகிறோம். அவற்றில் ஒன்று தான் டயட் சோடா. சோடா குடிப்பதால் உடல் எடை அதிகரிக்காது என நினைத்துகொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறான ஒன்று. சோடாவில் 80 சதவீதத்திற்கு அதிகமாக இருப்பது சர்க்கரை தான். அதோடு 80 % சர்க்கரை இருக்கும் சோடாவை நாம் குடித்தால் நமக்கு உடல் எடை குறையாது.
இயற்கை வளம் பாதிப்பு:
- சோடா குடிப்பதால் உங்களுக்கும் மட்டும் அல்லாமல் சுற்றி இயற்கை சூழ்நிலைக்கு பெரும் கேடு விளைவிக்கிறது. இரண்டு லிட்டர் சோடா தயாரிக்க 400 லிட்டருக்கு அதிகமான தண்ணீர் தேவைப்படுகிறது. இது நிரப்பி விற்கப்படும் பாட்டில்கள் பயன்படுத்திய பின் மக்காமல் போகிவிடுகிறது. பிறகு அது நாளடைவில் டன் கணக்கில் குப்பைகள் சேர்க்கிறது ஒவ்வொரு நாளும்தன் கணக்கில் குப்பைகள் சேர்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது அதோடு தயாரித்த பிறகு வெளியேற்றப்படும் கழிவு நீரால் பல்வேறு நீர்நிலைகள் பாதிக்கப்படுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆரோக்கியமும் நல்வாழ்வும் |