Watermelon Side Effects in Tamil
இப்போது இருக்கும் சூழலில் வெளியில் வரவே அவ்வளவு பயமாக இருக்கிறது. காரணம் வெயில் தான். வெயில் நம்மை வைத்து வெளுத்து வாங்குகிறது. இப்படி ஒரு நிலைமையில் வேலைக்கு போக கூட பயமாக தான் இருக்கிறது. ஆகவே நாமும் இந்த வெயிலில் இருந்து தப்பிக்க தண்ணீர் மற்றும் உடல் சூட்டை தணிக்கும் தண்ணீர் நிறைந்த பழங்கள் மற்றும் உணவுகளை வாங்கி சாப்பிடுகிறோம்.
அப்படி நாம் அனைவரும் பெரும்பாலும் இந்த வெயில் காலத்தில் அதிகம் சாப்பிடும் பழம் என்றால் அது தர்பூசணி பழம் தான். தர்பூசணி பழத்தில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். மேலும் தர்பூசணியின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும். சரி வாங்க பிரண்ட்ஸ் இந்த பதிவின் வாயிலாக தர்பூசணி பழத்தின் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தர்பூசணி தோலில் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா
தர்பூசணி பழத்தின் தீமைகள்:
என்ன தான் தர்பூசணி பழத்தில் நன்மைகள் பல இருந்தாலும், அதிலும் சில தீமைகள் இருக்கின்றது என்று உங்களுக்கு தெரியுமா..? நாம் வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் என்று வாங்கி சாப்பிடும் தர்பூசணி பழத்தில் நமக்கு தெரியாத சில தீமைகளும் இருக்கிறது. நாம் அதிகளவு சாப்பிடும் போது நம் உடலில் சில பக்க விளைவுகளை உண்டாக்குகிறது. அது என்னென்ன பக்க விளைவுகள் என்று தற்போது காண்போம்.
வீக்கம் போன்ற பிரச்சனைகள்:
பொதுவாக தர்பூசணி பழத்தில் நீர்ச்சத்துக்கள் தான் அதிகமாக நிறைந்துள்ளது. அதிலும் தர்பூசணி பழத்தில் 90% வரை நீர்ச்சத்து தான் இருக்கிறது.
ஆகவே உடலில் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளவர்கள் தர்பூசணியை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் நீர்ச்சத்து அதிகம் உள்ளவர்கள் தர்பூசணி பழத்தை அதிகமாக சாப்பிடும் போது உடல் அதிகளவு சோர்வடையும். அதுமட்டுமில்லாமல், கை, கால் என்று உடலில் வீக்கப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
எனவே நீர்ச்சத்து அதிகம் உள்ளவர்கள், தர்பூசணி பழம் அதிகளவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
தர்பூசணி யாரெல்லாம் சாப்பிட கூடாது
இதய பிரச்சனைகளை உண்டாக்கும்:
தர்பூசணி பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் காணப்படுகிறது. இந்த பொட்டாசியம் பற்றாக்குறை உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு ஒரு காரணமாக இருக்கிறது. அது போலவே அதிகப்படியான பொட்டாசியம் இதயத் துடிப்பை சீரற்றதாக வைத்திருக்கிறது. அதுமட்டுமில்லமல், இதயத் துடிப்பை வேகப்படுத்துகிறது. ஆகவே ஒருவர் தர்பூசணி பழத்தை அதிகமாக சாப்பிடும் போது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்:
தர்பூசணி பழத்தில் 90 சதவீதம் வரை நீர்ச்சத்து தான் இருக்கிறது. ஆனால் மீதி 10 சதவீதத்தில் அதிக அளவிலான சர்க்கரை இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், தர்பூசணி பழத்தில் அதிக கிளைசெமிக் குறியீட்டை கொண்ட ஒரு பழமாகும்.
இதன் காரணமாக தர்பூசணி பழம் அதிகமாக சாப்பிடும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. மேலும் உடலில் குளுக்கோஸை அதிகரிக்கச் செய்கிறது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
தர்பூசணி சாப்பிட்ட பிறகு இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்
கல்லீரல் பிரச்சனைகளை உருவாக்கும்:
நாம் உடல் சூட்டை தணிக்கும் என்று அதிகளவு தர்பூசணி பழம் சாப்பிடும் போது அது கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் கொழுப்புப் பிரச்சினைகளை உண்டாக்குகிறது. அதிலும் ஆல்கஹால் அதிகம் எடுத்துக் கொள்ளும் நபர்கள் தர்பூசணி அதிகமாக எடுத்து சாப்பிட கூடாது. குறிப்பாக, மது அருந்தும் நாட்களில் தர்பூசணி எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்:
ஒருவர் அதிகமாக தர்பூசணி பழம் சாப்பிடும் போது நீர்ச்சத்து மட்டும் கிடைக்காது. அது வயிற்று உப்புசத்தையும் ஏற்படுத்துகிறது. தர்பூசணியில் உள்ள கார்கோஹைட்ரேட் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகளை உண்டாக்குகிறது. வாயுத் தொல்லையையை ஏற்படுத்துவதோடு செரிமான ஆற்றலைக் குறைத்து அஜீரணக் கோளாறையும் ஏற்படுத்துகிறது.
இதில் தண்ணீருடன் சேர்த்து அதிகளவு நார்ச்சத்தையும் கொண்டுள்ளது. ஆகவே இதன் காரணமாக செரிமான பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |