திணை அரிசி பயன்கள் | Thinai Arisi Payangal in Tamil

Thinai Rice Benefits in Tamil

தினை அரிசி நன்மைகள் | Thinai Rice Benefits in Tamil

தினை என்பது ஒரு முக்கிய சிறுதானிய பயிர் வகையை சேர்ந்ததாகும். திணைக்கு ஆங்கிலத்தில் ‘பாக்ஸ் டெயில் மில்லட்‘ என்ற வேறு பெயரும் அமைந்துள்ளது. தினை அதிகமாக ஆப்ரிக்கா மற்றும் வட சீனாவில் அதிகமாக பயிரிடப்படுகிறது. பழங்காலத்தில் மனிதர்களால் முதலாவதாக பயிரிடப்பட்ட தானிய வகை தினை தான். தினை உற்பத்தியில் உலகில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. நாம் இந்த பதிவில் உணவில் தினை அரிசி சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகளும், அதுமட்டுமல்லால் எது மாதிரியான நோய்களையும் சரி செய்கிறது என்று தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க..

நவதானியம் சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

திணை அரிசியில் அடங்கியுள்ள சத்துக்கள்:

 தினை அரிசி பயன்கள்

தினை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற ஏரளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஆண்மை குறைபாடு நீங்க:

 thinai arisi benefits in tamil

திருமணமான ஆண்கள் சிலருக்கு மலட்டு தன்மை பிரச்சனை ஏற்பட்டு குழந்தை பாக்கியம் குறைபாடு ஏற்படுகிறது. மலட்டு தன்மை பிரச்சனை சரியாக தினையை நன்றாக மாவு போன்று இடித்து அந்த மாவில் பசுநெய் கலந்து களி போன்று சாப்பிட்டு வந்தால் மலட்டு தன்மை நீங்கும்.

வயிறு சம்பந்த பிரச்சனைக்கு:

 திணை அரிசி பயன்கள்

திணையில் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இரண்டு வேளை உணவாக இதனை சாப்பிட்டு வரும்போது மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கொடுக்கிறது. மேலும் வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்துகிறது. வயிற்றில் அல்சர் புண்களை சரி செய்து குழந்தைகளுக்கு உணவு எளிதில் ஜீரணம் ஆகிறது.

தூயமல்லி அரிசி நன்மைகள்

மன அழுத்தம் நீங்க:

 thinai arisi payangal in tamil

இன்றைய காலத்தில் பலருக்கும் மன அழுத்தம் அதிகரித்துவிட்டன. வெளியில் வேலை டென்சன், வீட்டில் ஏற்படக்கூடிய ப்ரச்சனையினால் அதிக டென்ஷன், கவலை, மனதில் ஏற்படும் அதிக குழப்பதினால் மன அழுத்தம் பிரச்சனை ஏற்படுகிறது. திணை தானியத்தில் மன அழுத்தத்தைக் குறைக்கும் வேதி பொருட்கள் அதிகமாக நிறைந்துள்ளது. அதனால் தினை கொண்டு சமைக்கப்பட்ட உணவினை தினமும் சாப்பிட்டு வந்தால் மன அழுத்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு:

 தினை அரிசி நன்மைகள்

அரிசி உணவுகள் அதிகம் சாப்பிட்டால் நீரிழவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சர்க்கரை சத்து அதிகம் உள்ள அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிப்படைந்தவர்கள் தினை உணவுகளை சாப்பிட்டு வருவதன் மூலம் நீரிழிவு நோயால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற முடியும். மேலும் உடலில் சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்திருக்கும்.

ஞாபக மறதி சரியாக:

 thinai rice benefits in tamil

அல்சைமர் என்பது ஞாபக மறதி நோயை சேர்ந்ததாகும். இந்த நோய் ஏற்பட்டவர்கள் சில நேரத்தில் தங்களையே மறந்துவிடுவார்கள். தினை அரிசியானது மூளை வளர்ச்சிக்கு புத்துணர்ச்சியை அளித்து ஞாபக சக்தியை மேம்படுத்துகிறது. இதனால் அல்சைமர் நோய் குறைய வாய்ப்புள்ளது.

கார்போக அரிசி மருத்துவ பயன்கள்

எலும்புகள் வலுவடைய:

 தினை அரிசி பயன்கள்

உடலில் உள்ள எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்சியம் சத்துக்கள் மிகவும் தேவை. இந்த கால்சியம் சத்தானது தினை அரிசியில் அதிகமாக நிறைந்துள்ளது. எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைய தினமும் கால்சியம் சத்து நிறைந்த தினை அரிசி உணவுகளை சாப்பிட்டு வரலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil