தீக்காயங்களுக்கான முதலுதவி முறைகள் | Fire Accident First Aid in Tamil

Advertisement

தீ விபத்தும் முதலுதவியும் | Fire Accident First Aid in Tamil

Fire Accident First Aid in Tamil: எதிர்பாராத சமயங்களில் வீட்டில் அல்லது வேறு ஏதேனும் இடங்களில் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அப்படி தீ விபத்து ஏற்பட்டால் அப்பொழுது எப்படி தீயை அணைக்க வேண்டும் மற்றும் தீக்காயம் ஏற்பட்ட ஒருவருக்கு என்ன மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அந்த வகையில் நாம் இந்த பதிவில் தீ விபத்து மற்றும் தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தீக்காயம் ஏற்பட்டவர் இறப்பதற்கான காரணம்:

  • தீ விபத்து நடக்கும் போது அந்த இடத்தில் ஏற்படும் அதிக புகையால் அங்கு இருக்கும் ஒருவரின் சுவாசத்தில் தடை ஏற்பட்டு இறந்து விடலாம்.
  • ரத்தம் அதிக அளவு உடலில் இருந்து வெளியேறி இருந்தால் தீ விபத்து ஏற்பட்ட அடுத்த ஆறு மணி நேரத்தில் தீக்காயம் ஏற்பட்ட நபர் இறந்து விடலாம்.
  • உடலில் தீக்காயம் ஏற்பட்டு தோல் சிதைவடைந்து இருக்கும். அப்பொழுது தோலில் சில நுண்ணுயிரிகளின் தாக்கம் அதிகரிக்கபடுவதால் தீக்காயம் ஏற்பட்ட நபர் இரண்டு நாள் கழித்து இறந்து விடுவார்கள்.

தீ விபத்து முதலுதவி – Fire Accident First Aid in Tamil:

  • என்ன வகையான தீ விபத்து என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களால் தீயை அணைக்க முடியும் என்றால் நீங்களே அனைத்து விடலாம். உங்களால் முடியாத பட்சத்தில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • ஒருவரின் மேல் தீப்பற்றி கொண்டால் முதலில் அந்த நபரின் மேல் இருக்கும் தீயை அணைக்க வேண்டும். தீயை அணைப்பதற்கு சாக்கு, Blanket, தண்ணீர் அல்லது வேறு ஏதேனும் Fire Extinguisher போன்றவற்றை உபயோகப்படுத்தலாம்.
  • தீக்காயம் ஏற்பட்டவுடன் முதலில் காயம் ஏற்பட்ட இடத்தை 10 நிமிடம் நீரில் கழுவ வேண்டும். தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் துணி மாட்டி கொண்டால் அதை அவசரப்பட்டு வேகமாக எடுக்க கூடாது.

தீ விபத்தும் முதலுதவியும் – Fire Accident And First Aid in Tamil:

  • வாட்ச், வளையல் etc.. ஏதவாது பொருட்கள் அணிந்திருந்தால் அதை உடனடியாக Remove செய்திட வேண்டும்.
  • தீக்காயம் ஏற்பட்ட நபருக்கு சிறு இடைவெளிகளில் உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு, வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம்.
  • முதல் உதவியை செய்து முடித்த உடன் அருகில் உள்ள மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும்.

தீக்காயம் ஏற்பட்டவுடன் செய்ய கூடாதவை:

  • தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் Ointment, மஞ்சள் தூள், பவுடர், கிரீம் போன்ற எந்த பொருளையும் உபயோகப்படுத்த கூடாது.
  • எரிச்சலை நீக்குவதற்காக ஐஸ் கட்டியெல்லாம் வைக்க கூடாது, அவை எரிச்சலை மேலும் தீவிரமாக்கும்.
  • கொப்புளங்கள், புண் எதுவும் இருந்தால் அதனை உடைத்து விடுவது, சொரிவது என எதையும் செய்ய கூடாது.

தீக்காயம் வகைகள் – First Aid For Fire Accident in Tamil:

தீக்காயங்களில் மூன்று வகை உள்ளது

  1. First Degree Burn
  2. Second Degree Burn
  3. Third Degree Burn

First Degree Burn – தீ விபத்தும் முதலுதவியும்:

  • First Degree Burn: இந்த வகை தீக்காயம் தோலின் மேற்புறத்தில் மட்டும் ஏற்பட்டிருக்கும்.

Second Degree Burn – Fire Accident And First Aid in Tamil:

Second Degree Burn: இந்த வகை தீக்காயம் தோலின் உட்புறத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். கொப்பளங்கள், வீக்கம், ரத்தப்போக்கு போன்றவை ஏற்படும். ஆதலால்  காயம் ஏற்பட்ட இடத்தை உடனடியாக நீரினால் கழுவவும். ஐஸ் கட்டி பயன்படுத்த கூடாது.

அடிப்பட்ட இடத்தை சற்று உயரமான இடத்தில் வைத்து கொள்வது நல்லது. உதாரணத்திற்கு காயம் ஏற்பட்டவரின் கால் அல்லது கை சற்று சுவர் அல்லது நாற்காலியின் மேல் இருக்குமாரு வைத்து கீழே படுக்க வைக்க வேண்டும். படுக்க வைக்கும் பொழுது Pillow உபயோகப்படுத்த கூடாது.

Third Degree Burn – தீ விபத்தும் முதலுதவியும்:

  • Third Degree Burn இந்த வகை தீக்காயம் எலும்பு தெரியும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துவதால் வலி இருக்காது. ஆனால் கொப்புளங்கள், ரத்தம் வெளியேறுவது போன்றவை ஏற்படும். ரத்தம் வெளியே போகாமல் இருப்பதற்காக சுத்தமான காட்டன் துணியை வைத்து கட்டு போட வேண்டும்.
  • முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு இருந்தால் நேராக உட்கார வைக்க வேண்டும்.
  • மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் Cardiopulmonary resuscitation செய்ய ஆரம்பிக்கலாம்.
  • கால் அல்லது கையில் தீக்காயம் ஏற்பட்டு இருந்தால், காயம் ஏற்பட்டவரின் கால் அல்லது கை சற்று சுவர் அல்லது நாற்காலியின் மேல் இருக்குமாரு வைத்து கீழே படுக்க வைக்க வேண்டும். படுக்க வைக்கும் பொழுது Pillow உபயோகப்படுத்த கூடாது.

தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை – Fire Accident And First Aid in Tamil::

  • நீங்கள் இருக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் சுற்றி இருக்கும் ஜன்னலை காற்று உள்ளே வராதவாறு மூடி விட வேண்டும்.
  • நீங்கள் அணிந்திருக்கும் உடை எளிதில் தீப்பற்ற கூடியதாக இருந்தால் அதை Remove செய்து விட்டு காட்டன் துணியை உடுத்தி கொள்ளுங்கள்.
  • ஆடையில் தீப்பற்றி கொண்டால் பயந்து ஓட கூடாது, அப்படி ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பரவும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்து தரையில் உருள வேண்டும்.
  • எண்ணெய் அல்லது வேதிப்பொருள்களால், பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டு இருந்தால் மணலை பயன்படுத்தி அணைக்க வேண்டும். மற்ற  தீ விபத்துகளுக்கு நீரை ஊற்றி அணைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வது?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement