ஆழ்ந்த தூக்கம் வர முத்திரை | Thookam Vara Muthirai

Thookam Vara Muthirai

தூக்கம் வர முத்திரை | Thookam Vara Mudra

Thookam Vara Yoga Tamil: ஆழ்ந்த தூக்கம் என்பது இப்போது பலரது வாழ்க்கையில் வெறும் கனவாகவே மாறிவிட்டது என்பது தான் 100% உண்மை. நாம் சிரிய வயதில் இருக்கும் போது மனதில் எந்த கவலையும் இல்லாததால் படுத்தவுடன் உறங்கிவிடுவோம். நாம் வளர்ச்சி அடையும் போது நமக்கு நிறைய பொறுப்புகள், வீட்டு சூழ்நிலைகள், நம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் நினைவிற்கு வந்து தூக்கத்தையே பாழாக்கிவிடும். ஆழ்ந்த தூக்கம் என்பது வரம். அந்த வரமானது அனைவரின் வாழ்விலும் கிடைப்பதில்லை. தூக்கமின்மை பிரச்சனையினால் சிலர் அவதிப்படுகிறார்கள் என்றால் அவர்கள் மிகவும் மன அழுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று அர்த்தமாகும். சிலர் படுத்தவுடனே உறங்கி விடுவார்கள். தூக்கம் வராதவர்கள் அவர்களை பார்த்து பொறாமை கொள்வார்கள். வாழ்க்கையில் ஆடம்பர சொத்து சுகம் சம்பாதிப்பது மட்டும் முக்கியம் இல்லை. வாழ்வில் நிம்மதி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தினமும் நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் வேண்டும். நம்மை நாம் தான் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். இரவில் படுத்தவுடனே அற்புதமான தூக்கம் உங்களுக்கும் வர சில பயிற்சி முறைகளை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்..!

இரவில் நன்றாக தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

 

தூக்கம் வர ஆரோக்கியம் அவசியம்:

Thookam Vara Mudraபடுத்தவுடனே இரவில் நன்றாக தூக்கம் வர நமது உடலும், மனதும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும். ஒரே மாதிரியான நேரத்தில் உணவையும், தூக்கத்தையும் பழக வேண்டும். இரவு 9 மணிக்குள் படுக்கை அறைக்கு செல்வதை தொடர்ச்சியாக பழக்கிக்கொள்ள வேண்டும். இரவில் படுக்கைக்கு முன்பு வெறும் தரையிலோ, மேட்டிலோ உட்கார்ந்து பின்வரும் பயிற்சிகளை குறைந்தது 10 நிமிடமாவது செய்ய வேண்டும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

தூக்கம் வர முத்திரை:

தூக்கம் வர முத்திரை

முதலில் உங்களுக்கு வசதிக்கேற்ப நன்றாக உட்கார்ந்து கொள்ளுங்கள். பிராண முத்திரை போன்று விரல்களை வைத்து கொள்ள வேண்டும். அதாவது பெருவிரல், மோதிர விரல், சுண்டு விரல் போன்ற மூன்று விரலினையும் சேர்த்துக்கொள்ளவும். மீதம் உள்ள ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலை தரையை நோக்கி பார்த்தவாறு கால் மூட்டின் மேல் கைகளை வைக்கவும். கைகளின் மூட்டுக்கள் வளையாதவாறு இருக்க வேண்டும்.

ஒரு நிமிடத்தில் ஆழந்த தூக்கம் வர வேண்டுமா ? -சூப்பர் IDEA..!

 

இப்போது மெதுவாக மூச்சை உள்ளிருந்து இழுத்து வெளியே விட வேண்டும். 5 நிமிடம் வரை தொடர்ந்து இதே போல் மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியில் விட  வேண்டும். இதனால் என்ன நன்மை என்றால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாமல் மூச்சு விடும் பகுதியானது சமநிலை ஏற்பட்டு உடலும், மனமும் அமைதி நிலை அடையும்.

அடுத்து முத்திரையை மாற்றி செய்யவும். நடு விரல் மற்றும் பெருவிரலை சேர்த்துக்கொள்ளவும். சுண்டு விரலையும், மோதிர விரலையும் உள்ளங்கையை பார்த்தவாறு மடித்து கொள்ளவும். ஆள்காட்டி விரலை மட்டும் தரையை பார்த்தபடி வைக்கவும். இந்த முத்திரைக்கு பெயர் பிராங்கியல் முத்திரை. இந்த முத்திரையில் மீண்டும் மூச்சு பயிற்சியை 5 நிமிடம் வரை செய்யவும். இவ்வாறு 10 நிமிடம் வரையிலும் இந்த முத்திரையை செய்யலாம். இந்த முத்திரை செய்வதன் மூலம் மனமும், உடலும் ஒருநிலைபட்டு இரவில் ஆழ்ந்த தூக்கத்தை அடையலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Tamil maruthuvam tips