தூயமல்லி அரிசி தீமைகள் | Thooyamalli Rice Disadvantages in Tamil
தூயமல்லி அரிசி தமிழ்நாட்டின் பாரம்பரிய வேலை அரிசி வகையாகும். இது எளிதில் செரிமானம் அடையக்கூடியதும் ஆகும். இதன் சுவை காரணமாகவே பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே, இதனை உட்கொள்ளும்போது உடலிற்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இருந்தாலும், ஒரு சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. எனவே, அதனை பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம்.
தூயமல்லி அரிசி ஆனது, மல்லிகை மொட்டு போன்று இருப்பதால் தூயமல்லி அரிசி என்ற பெயரினை பெற்றது. இதன் தனித்துவமான சுவை காரணமாகவே தூயமல்லி அரிசி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறது. மன்னர்கள் அக்காலத்தில் தூயமல்லி அரிசியை விரும்பி சாப்பிட்டு வந்தார்கள். தூய மல்லி அரிசியை விரும்பி அதிகமாக சாப்பிடுபவர்கள் அதனால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
தூயமல்லி அரிசி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
வயிற்றுப்போக்கு:
தூயமல்லி அரிசியை அதிகம் உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே, இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உடல் எடை அதிகரிப்பு:
தூயமல்லி அரிசியில் கொழுப்புசத்து அளவோடு தான் உள்ளது. ஆனால், இதனை அதிகமாக சாப்பிடும்போது உடல் எடை அதிகரிக்க செய்கிறது.
தூக்கமின்மை:
தூயமல்லி அரிசி ஆனது நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. எனவே, தூயமல்லி அரிசியை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
வயிற்றுப்புண்:
தூயமல்லி அரிசியை அதிக அளவில் உட்கொண்டால் வயிற்றுப்புண் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தூயமல்லி அரிசியை அளவுக்கு அதிகமாக உட்கொள்ள கூடாது. அப்படி அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் மேற்கூரிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |