தேங்காய் பால் தீமைகள் | Thengai Paal Theemaikal
வணக்கம் பொதுநலம் பதிவின் இனிமையான நேயர்களே. இன்று நம் ஆரோக்கியம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி பார்க்கப்போகிறோம். தேங்காய் பால் சாப்பிடுவதால் என்னென்ன பக்கவிளைவுகள் நமக்கு உண்டாகிறது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ள போகிறோம். வாங்க நண்பர்களே இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.
தேங்காய் பால் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்:
தேங்காயில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. தேங்காய், தேங்காய் பூ, இளநீர், தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் என எல்லாவற்றிலும் தேங்காய் சத்து நிறைந்த பொருளாக உள்ளது. அதிலும் தேங்காய் பாலில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இருந்தாலும் அதை அளவுக்கு மீறி உணவுகளில் சேர்த்து கொள்வதால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. தேங்காயில் அதிகப்படியான கொழுப்புக்களில் லாரிக் அமிலம் உள்ளது.
இதையும் படியுங்கள் ⇒ தேங்காய் பால் நன்மைகள்
- தேங்காய் பால் அதிகமாக உணவில் சேர்த்து கொள்வதால் செரிமான கோளாறுகள் ஏற்படுகிறது.
- தேங்காய் பால் சாப்பிடுவதால் முகத்தில் எண்ணெய் சுரப்பிகளை அதிகரித்து பருக்கள் உருவாக்குகிறது.
- தேங்காய் பால் அதிகமாக சாப்பிடுவதால் வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற குடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதில் அதிகம் நார்சத்து இருப்பதால் இது மலசிக்கலை ஏற்படுத்துகிறது.
- இதை அதிகம் உணவில் சேர்த்து சாப்பிடுவதால் தேமல், அரிப்பு போன்ற தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.
- இதனால் இதய நோய்கள் போன்றவை உருவாக வாய்ப்புள்ளது. இதய நோய் உள்ளவர்கள் தேங்காய் பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- இதை அதிகளவு உணவில் சேர்த்து கொள்வதால் தேங்காய் பால் கெட்ட கொழுப்பாக மாறி பல உபாதைகளை ஏற்படுத்துகிறது.
- இந்த தேங்காய் பாலை அதிகம் சாப்பிடுவதால் கல்லீரல் செயல்பாட்டை குறைத்து கல்லீரல் சம்மந்தப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
- இதில் அதிகப்படியான கொழுப்புகள் இருப்பதால் பக்கவாதம் போன்ற நோய்கள் உண்டாகிறது.
- இந்த தேங்காய் பாலில் அதிகப்படியான சர்க்கரை தன்மை இருப்பதால் சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் பால் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Health Tips In Tamil |