கொழுப்பு குறைய பாட்டி வைத்தியம் !!!
கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்க..!
உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க தினமும் மிக கஷ்டமான உடல் பயிற்சிகள் மற்றும் மிக கஷ்டமான வழிமுறைகள் ஆகியவற்றை மிகவும் கஷ்ட்டப்பட்டு செய்தாலும், உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க முடியவில்லையா?
இனி கவலை வேண்டாம் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க சில அற்புத பானங்கள் இருக்கின்றது. அவற்றை தினமும் பருகிவந்தாலே உங்களது உடல் எடை மற்றும் தொப்பை குறையும்.
இந்த பானத்தை தொடர்ந்து பருகி வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியேறி உடல் எடையை கச்சிதமாக வைத்துக்கொள்ளலாம்.
எனவே இனிமேல் கடினமான பயிற்சிகள் மற்றும் கடினமான வழிமுறைகளை பின்பற்ற தேவையில்லை. இந்த பானத்தை பருகினாலே போதும்.
12 வகையான நோய்களுக்கு பாட்டி வைத்தியம் !!!
சரி வாருங்கள் அப்படி என்னென்ன பானங்களை பருகினால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது என்று பார்ப்போம்.
கொழுப்பு குறைய அற்புத பானங்கள் !!!
கொழுப்பு குறைய பாட்டி வைத்தியம் – அருகம்புல் ஜூஸ் (Fat loss drinks):-
உடல் எடையை குறைக்கவே இயற்கை அளித்த ஒரு சிறந்த தாவரம் என்னெவென்றால் அதுதான் அருகம்புல். இந்த தாவரம் நமக்கு எளிதாகவே கிடைக்கக்கூடியவை.
இவற்றை ஒரு கைப்பிடி அளவு பறித்துக்கொள்ளவும், பின்பு அவற்றை சுத்தமாக கழுவி மிக்சியில் அரைத்து சாறை வடிகட்டி கொள்ளவும்.
பின்பு பசும்பாலை காய்ச்சாமல் ஒரு டம்ளர் எடுத்து கொள்ளவும், அவற்றில் இந்த அருகம்பில் சாறை கலந்து குடிக்க வேண்டும்.
குறிப்பாக காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இந்த பானத்தை பருகவேண்டும். அப்பொழுதுதான் இவற்றின் முழுமையான பலன் கிடைக்கும்.
இந்த பானத்தை தினமும் பருகி வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ளலாம்.
கொழுப்பு குறைய பாட்டி வைத்தியம் – கொள்ளு சூப் (Fat loss drinks):-
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது கொள்ளு.
எனவே தினமும் அதிகாலை எழுந்தவுடன் ஒரு கையளவு கொள்ளுப்பயறை எடுத்து, அவற்றை ஒரு கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும், பின்பு அவற்றில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்ததும் அடுப்பை அனைத்து விடவும். பின்பு ஆறியதும் அவற்றை வடிகட்டி அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அளவு பருக வேண்டும்.
இந்த பானத்தை தினமும் காலை எழுந்தவுடன் பல் துலக்கியதும் வெறும் வயிற்றில் பருகவேண்டும்.
இந்த பானம் குடித்தால் இந்த நோய் தீருமா?
கொழுப்பு குறைய பாட்டி வைத்தியம் – முருங்கை கீரை சூப் (Fat loss drinks):-
இந்த கீரையில் அதிகளவு இரும்பு சத்து உள்ளது உடலுக்கு அதிக ஆரோக்கியம் அளிக்கக்கூடியது.
இந்த முருங்கை கீரை பானத்தை தினமும் பருகிவர, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க மிகவும் உதவுகிறது.
முருங்கை கீரையை ஒரு கையளவு எடுத்து கொண்டு, ஒரு பாத்திரத்தில் அந்த கீரையை போட்டு, 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
இந்த பானம் சுவையாக வேண்டும் என்றால் ஒரு கல் உப்பு சேர்த்து கொள்ளலாம். இந்த பானம் நன்றாக கொதித்ததும் வடிகட்டி கொண்டு, மிதமான சூட்டில் இந்த பானத்தை காலை வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
உடல் எடை குறைய பாட்டி வைத்தியம் – எலுமிச்சை சாறு (Fat loss drinks):-
தினமும் காலை எழுந்தவுடன் ஓரு டம்ளர் வெந்நீரில் எலுமிச்சை சாறை கலந்து, மிதமான சூட்டில் வெறும் வயிற்றில் பருகிவர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க இந்த பானம் உதவியாக இருக்கிறது.
கொழுப்பு குறைய பாட்டி வைத்தியம் – தேன் (Fat loss drinks):-
தினமும் காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு 1ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகி வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
கொழுப்பு குறைய பாட்டி வைத்தியம் – காய்கறி சூப் (Fat loss drinks):-
உடல் எடையை வேகமாக குறைக்க நினைத்தால், 2-3 மாதங்களுக்கு தினமும் இரவில் காய்கறி சூப் செய்து குடித்து வாருங்கள். இதனால் உங்கள் உடலில் கொழுப்புக்கள் சேர்வது கட்டுப்படுத்தப்படும்.
கொழுப்பு குறைய பாட்டி வைத்தியம் – திராட்சை ஜூஸ் (Fat loss drinks):-
திராட்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும்.
அதோடு இது உடலை சுத்தமும் செய்யும். இந்த திராட்சை புளிப்பும், இனிப்பும் கலந்து இருப்பதால், இதை ஜூஸ் வடிவில் எடுத்தால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
அதிலும் கருப்பு நிற திராட்சையால் தயாரிக்கப்பட்ட ஜூஸை தினமும் காலையில், சாப்பிடும் போது ஒரு டம்ளர் குடித்து வந்தால், அது உடல் எடையை குறைக்க உதவும்.
கொழுப்பு குறைய மேல் கூறப்பட்டுள்ள ஜூஸில் ஏதாவது 1 ஜூஸை தினமும் குடித்து வந்தாலே போதும் 10 நாளில் 5 கிலோ வரை தொப்பை மற்றும் கொழுப்பை குறைக்க முடியும்..!
கொழுப்பு குறைய பாட்டி வைத்தியம் 15 எளிய வழிகள்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |