தைராய்டு அளவு அட்டவணை..!

தைராய்டு அளவு அட்டவணை

தைராய்டு அளவு அட்டவணை..!

மனித உடல் அமைப்பில் தொண்டை மற்றும் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. நமது உடலில் இந்த தைராய்டு ஹார்மோன்கள் குறைந்தாலும் பிரச்சனைதான்.. அதேபோல் அதிகரித்தாலும் பிரச்சனை தான். இந்த தைராய்டு ஹார்மோன்கள் சரியான அளவில் இருக்க வேண்டும். அப்பொழுது உடலில் எந்த ஒரு பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்கும் சரி இந்த பதிவில் தைராய்டு அளவு அட்டவணை மற்றும் தைராய்டு பிரச்சனைக்கு என்ன பரிசோதனை அளிக்கப்படுகிறது போன்ற தகவல்களை படித்தறியலாம் வாங்க.

தைராய்டு அளவு அட்டவணை:

வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், ரத்தத்தில் T3, T4,TSH, FT3, FT4 , anti TPO ஆகியவற்றின் அளவுகளைப் பரிசோதித்தால், நோயின் நிலைமை தெரியவரும். பொதுவாக T3 0.7 2.04 ng/dL என்ற அளவிலும், T4 4.4 11.6 ng/dL என்ற அளவிலும் TSH 0.28 6.82 IU/dL என்ற அளவிலும் FT3 1.4 – 4.2 pg/dL, FT4 0.8 2 ng/dL இருக்க வேண்டும்.

இந்த இயல்பு அளவுகள் ஆய்வகத்தைப் பொறுத்தும், நோயாளியின் நோய்நிலை, அவர் எடுத்துக்கொள்ளும் மருந்துகள், வயது, கர்ப்பம், வயது ஆகியவற்றைப் பொறுத்தும் சிறிதளவு மாறலாம். எனவே, நோயாளியானவர் தான் எடுத்துக்கொள்ளும் மருந்து விவரத்தையும் கர்ப்பமாக இருந்தாலும் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.

தைராய்டு வகைகள்:

  • குறை தைராய்டு
  • தைராய்டு வீக்கம்
  • மிகைத் தைராய்டு

தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கான அளவு அட்டவணை:

lகுறை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் குறைவாகவும், TSH அளவு அதிகமாகவும் இருக்கும்.

மிகை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் அதிகமாகவும், TSH அளவு குறைவாகவும் இருக்கும்.

இந்த மூன்று அளவுகளும் குறைந்திருந்தால், முன்பிட்யூட்டரி சுரப்பியில் குறைபாடு உள்ளது என்று பொருள்.

சிலருக்குக் குறை தைராய்டு பிரச்சனை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும். TSH அளவு அதிகமாக இருக்கும்.

சிலருக்கு மிகை தைராய்டு பிரச்சனை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும். TSH அளவு குறைவாக இருக்கும்.

FT3, FT4 அளவுகள் அதிகமானால் மிகை தைராய்டு உள்ளது என்று அர்த்தம்.

குறை தைராய்டு உள்ளவர்களுக்கு ரத்த ஹீமோகுளோபின் அளவு குறைவாகவும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகவும் இருக்கும்.

anti TPO பரிசோதனை ‘பாசிட்டிவ்’ என்றால் முன்கழுத்துக் கழலைக்குக் காரணம் தன்தடுப் பாற்றல் நோய் என்றும், ‘நெகட்டிவ்’ என்றால் சாதாரணக் கழலை என்றும் அறிய உதவும்.

இதர பரிசோதனைகள்:

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றின் மூலம் தைராய்டு சுரப்பியின் வடிவம், எடை, அளவு ஆகியவற்றை அளந்து, தைராய்டு பாதிப்பை ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடியும்.

இப்போது ‘ஐசோடோப் ஸ்கேன்’ பரிசோதனை தைராய்டு பாதிப்புகளை மிகவும் துல்லியமாகத் தெரிவிக்கிறது.

வீக்கம் காணும் தைராய்டு சுரப்பியிலிருந்து ஊசி மூலமாகச் சிறிய அளவில் திசுவை அகற்றி செல்களைப் பரிசோதிப்பதன் (FNAC) மூலம் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய முடியும்.

தொடர்புடைய பதிவுகள் 
தைராய்டு அறிகுறிகள் என்னென்ன?
தைராய்டு முற்றிலும் குணமாக 10 ஆரோக்கிய உணவுகள்..!
தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது? இதற்கான சிச்சை?
தைராய்டு குணமாக பழங்கள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips In Tamil