தோசை தீமைகள் | Dosa Side Effects in Tamil
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக தோசை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நாம் அனைவருமே தோசை சாப்பிட்டு இருப்போம். அதிலும் நம் அனைவரின் வீடுகளிலும் காலை மற்றும் இரவு உணவு பெரும்பாலும் இட்லி தோசையாக தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், கொஞ்சம் கூட அலுப்பு பார்க்காமல் செய்யும் வேலை என்றால், அது இட்லிக்கு மாவு அரைக்கும் வேலை தான்.
அப்படி நமக்கும் தினமும் இட்லி தோசை என்று சாப்பிட்டு அழுத்து போயிருக்கும். இருந்தாலும் நம்மில் பலருக்கும் இட்லியை விட தோசை தான் மிகவும் பிடிக்கும். அப்படி தோசையை அதிகம் விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்..? அப்போ தோசையின் தீமைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தினமும் இட்லி சாப்பிடுபவரா நீங்கள்.. அப்போ அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்
தோசை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
பொதுவாக நம்மில் பலருக்கும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் சிலர் தினமும் தோசை கொடுத்தால் சலிக்காமல் சாப்பிடுவார்கள். ஆனால் எந்த பொருளாக இருந்தாலும், அது அளவுக்கு அதிகமாகும் போது அது நமக்கு தீங்குகளை தான் கொடுக்கும். அதை தான் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.
அதுபோல தான் தோசையும். அதிலும் இன்றைய சூழலில் இட்லி மாவில் பேக்கிங் சோடா தான் அதிகமாக சேர்க்கிறார்கள். இதனால் நம் உடலுக்கு பல பக்கவிளைவுகள் வருகிறது. அது என்ன என்று தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
இட்லி மாவில் பேக்கிங் சோடா போடுபவரா நீங்கள்.. அப்போ அதன் தீமைகளை தெரிஞ்சிக்கோங்க..
பொதுவாக தோசையில் பல நன்மைகள் இருந்தாலும் அதை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அதனால் சில தீமைகள் உண்டாகின்றன. அதை பற்றி தற்போது காணலாம்.
கிளைசெமிக் குறியீடு: பொதுவாக தோசையில் அதிக கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவுகளில் விரைவான உயர்வை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த கிளைசெமிக் குறியீடானது ஆற்றல் மற்றும் உறுப்பு செயலிழப்புக்கு வழிவகுக்கிறது.
அதிக கார்போஹைட்ரேட்டுகள்: தோசையில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருக்கின்றன. இப்படி தோசையில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகளின் அதிகப்படியான நுகர்வு உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.
பைடிக் அமிலம்: பொதுவாக தோசை மாவானது புளிக்க வைக்கும் ஒரு உணவு பொருளாகும். இப்படி புளிக்க வைப்பதால் அதில் பைடிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. இந்த ஃபைட்டிக் அமிலம் ஒரு ஆன்டிநியூட்ரியண்ட் ஆகும். இது உடலில் இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது.
அதிகளவு சோடியம்: தோசையில் சோடியம் அதிகளவு இருக்கிறது. இப்படி அதிகப்படியாக சோடியம் உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மற்றும் இருதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
ஒவ்வாமை கோளாறுகள்: தோசை பொதுவாக அரிசி, பருப்பு மற்றும் சில நேரங்களில் பசையம் கொண்ட தானியங்கள் போன்ற பொருட்களைக் கொண்டுள்ளது. இது உடலில் சில நேரங்களில் ஒவ்வாமை கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |