பல நோய்களுக்கு வீட்டு வைத்தியம்..!

Advertisement

பல வகை நோய்களுக்கு வீட்டு வைத்தியம்..!

நம் வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு. அட ஆமாங்க நம் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

சரி வாங்க பல வகை நோய்களை குணப்படுத்த வீட்டு வைத்தியம் என்னென்ன உள்ளது என்று இந்த பகுதியில் படித்தறிவோம்.

சொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..!

உடல் நகம் பெற வீட்டு வைத்தியம்: 1

கொத்தமல்லி செரிமானத்திற்கு உதவுகிறது. இதயத்திற்கு மிகவும் நல்லது.
இருமல், காய்ச்சல், செரிமானமின்மை வாந்தி போன்ற பிரச்சனைகளை
குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

இவற்றில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் தினமும் உட்கொள்ளும்போது இரத்த சோகையை தவிர்க்கலாம்.

கொத்தமல்லியை தினமும் உட்கொண்டு வந்தால் குடல் நோய் மற்றும் வயிற்று புண் குணமாகும். இவற்றின் சாற்றை தேமல் உள்ள இடத்தில் தேய்த்து வர தேமல் சரியாகும்.

உடல் நலம் பெற வீட்டு மருத்துவம்: 2

வாயுவை குறைத்தல் மற்றும் பெருங்குடல் நோயை குணமாக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது சோம்பு.

கக்குவான் இருமல், நுரையீரல் நோய்களை தடுக்கும். உடலில் வாயு நீக்கி, செரிமானத்தை கொடுக்கும்.

உடல் நலம் பெற வீட்டு வைத்தியம்: 3

வெந்தயம் நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. மோருடன் சேர்த்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கை நீக்குகிறது.

உடல் நலம் பெற வீட்டு மருத்துவம்: 4

கடுகில் உள்ள சல்பர், அப்லோ டாக்சின் போன்றவை நச்சுத் தன்மையை நீக்கும். இருமல், நீரிழிவு, பக்கவாதம், தோல் நோய் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS

உடல் நலம் பெற வீட்டு வைத்தியம்: 5

வயிற்றுபோக்கு மற்றும் வாயுவை தவிர்க உதவுகிறது. காயங்கள், கொப்புளங்கள் மீது பூண்டை தடவினால் விரைவில் குணமடையும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் வீக்கம், கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்கிறது. மூலத்தை குணப்படுத்துகிறது.

உடல் நலம் பெற வீட்டு மருத்துவம்: 6

ஓமம் இதன் தைலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும். இதன் எண்ணெய் நுண்ணுயிர்களை அழிக்கும். வாயு தொல்லை, வயிற்றுபோக்கு, வாந்தி, வயிற்று வலி, ஜலதோஷம், புண், சிரங்கு, தொண்டை கோளாறு தீர்க்கிறது.

உடல் நலம் பெற வீட்டு வைத்தியம்: 7

பட்டை செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்சனை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது.

உடல் நலம் பெற வீட்டு மருத்துவம்: 8

ஜாதிக்காய் பல்வலி, தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, ஆண்மையின்மை ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

ரத்த ஓட்டம் மற்றும் மனதை ஒருமனப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.

உடல் நலம் பெற வீட்டு வைத்தியம்: 9

கிராம்பு நுரையீரல் தொடர்பான நோய், காயங்களினால் திசுக்களில் ஏற்படும் வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. குடலில் உள்ள ஒட்டுண்ணி, பூஞ்சை, பாக்டீரியாக்களை அழிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

உடல் நலம் பெற வீட்டு மருத்துவம்: 10

மலச்சிக்கல், வயிற்று கோளாறு ஆகியவற்றை போக்குகிறது. நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் காயங்கள் ஆறும் தன்மையை அதிகரிக்கும் தன்மை இஞ்சியில் உள்ளது.

உடல் நலம் பெற வீட்டு வைத்தியம்: 11

புதினா ஜீரண உறுப்பை சீர்செய்து, மலச்சிக்கலை குறைக்கும் தன்மை இதில் உள்ளது. உணவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது. ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை தடுக்கும் திறன் வாய்ந்தது.

படிகாரத்தை வைத்து 9 அருமையான Treatment..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement