நவதானியங்கள் வகைகள் | Navathaniyam List in Tamil
நவதானியங்கள்: நவதானியம் என்பது ஒன்பது வகை தானியமாகும். நவதானியத்தினை புதிதாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் வைத்து வழிபடுவது இன்றும் நம் ஊரில் வழக்கம் மாறாமல் உள்ளது. நமக்கு தெரியாத நவதானியங்களின் வகைகளை தெரிந்துகொள்ளுங்கள். இன்றைய பொதுநலம்.காம்-ல் நவதானியத்தின் வகைகள், 9 வகையான நவதானியத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளது, அதன் மருத்துவ குணங்களை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
நவதானியம் வகைகள் | Navathaniyam Names in Tamil:
- நெல்
- கோதுமை
- பாசிப்பயறு
- துவரை
- மொச்சை (அவரை)
- எள்
- கொள்ளு
- உளுந்து
- கொண்டைக் கடலை
நெல்லில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ குணம்:
- ஒவ்வொரு வகை நெல்லிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. அரிசியில் 20 மில்லி கிராமிற்கு அதிகமாக இரும்புச்சத்து உள்ளது மற்றும் தவிட்டில் தான் அதிகளவு நார்ச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் இ உள்ளது.
- புற்றுநோய், நீரழிவு நோய் போன்றவைக்கு நெல் நல்ல பலன் கொடுக்கும்.
கோதுமையில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ குணம்:
- கோதுமையில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜெரோட்மின், தயாமின், ரிபோஃப்ளோவின், நயாசின், ஃபோலிக் ஆசிட், காப்பர், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, துத்தநாகம், சல்ஃபர், குரோமியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
- இதன் மருத்துவ குணங்கள் – புளித்த ஏப்பம் குணமாகும், வெயில் காலத்தில் உண்டாகும் வியர்க்குரு குணமாகும், புற்றுநோய் குணமாகும், கப பிரச்சனை குணமாகும், உடலில் இருக்கும் அதிகமான சர்க்கரை அளவு குறையும், உடலில் ஏற்படும் எரிச்சல் குணமாகும், அசுத்த இரத்தத்தை நீக்கும், உடல் வலி அனைத்தும் நீங்கும்.
பாசிப்பயறில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ குணம்:
- பாசிப்பயறில் அதிகளவு கால்சியமும், பாஸ்பரசும் நிறைந்துள்ளது. மேலும் பாசிப்பயறில் புரதம், கார்போஹைட்ரெட், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் தாதுப்பொருட்களும் அடங்கியுள்ளன.
- மருத்துவ குணம் – கோடைக்காலத்தில் ஏற்படும் சின்னம்மை, பெரியம்மை, காய்ச்சல், நினைவுத்திறன் பாதிப்பு, ஆசனவாய்க் கடுப்பு, பித்தம், மலசிக்கல், மூலம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கொடுக்கும் இந்த பாசிப்பயறு.
துவரம் பருப்பில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ குணம்:
- துவரம் பருப்பில் புரதசத்து , வைட்டமின் சி சத்து, அமினோ அமிலம், நார்ச்சத்து போன்றவை அதிகமாக இருக்கிறது.
- துவரம் பருப்பினால் உடல் ஒல்லியாக இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும், இரத்த ஓட்டம் சீராக இருக்கும், உடல் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும், அடிபட்ட காயங்கள் சீக்கிரம் ஆறும், இரத்த சோகை, உடலில் ஏற்படும் வீக்கம், அலர்ஜி, செரிமான கோளாறு பிரச்சனை, இதய சம்பந்த பிரச்சனை, உடலில் நோய் எதிர்ப்பு குறைவு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.
மொச்சையில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ குணம்:
- மொச்சையில் நமது உடலிற்கு தேவையான புரதச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், மினரல் போன்றவை அதிகமாக உள்ளது.
- மருத்துவ பயன் – இதய சம்பந்த பிரச்சனை, மலச்சிக்கல், புற்றுநோய், புதிய செல்களை உருவாக்குவதற்கு, அதிக உடல் எடையை சரி செய்ய போன்ற எல்லா பிரச்சனைகளுக்கும் முக்கிய தீர்வு கொடுக்கிறது.
எள்ளு பயன்கள்:
- எள்ளு விதைகளில் அதிகமாக மக்னீசியம் சத்து இருப்பதால் இரத்த அழுத்த நோயை குணப்படுத்துகிறது.
- எள்ளின் விதையை வெல்லப்பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம் அல்லது எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலநோயினை குணமாக்கும்.
- பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய பனை வெல்லம், கருஞ்சீரகம், எள்ளுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
கொள்ளு பயறு பயன்கள்:
- கொள்ளில் புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து, மாவுசத்து, தாதுபொருள்கள், வைட்டமின் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
- உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறுவதற்கு கொள்ளு பருப்பை ஊற வைத்து குடித்து வரலாம்.
- ஜலதோஷம் நீங்க கொள்ளை நீரில் வேகவைத்து அந்த நீரினை பருகி வரலாம்.
உளுந்து பயன்கள்:
- மக்கள் அன்றாடம் பயன்படுத்திய தானிய வகைகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது உளுந்து. கடுமையான மற்றும் கொடிய நோயின் பாதிப்பிலிருந்து விடுபட்டவர்கள் உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு மிகவும் நல்லது.
- உளுந்து வடை பசியை போக்கும், உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், மற்றும் பித்தத்தைக் குறைக்கும்.
- 4 தேக்கரண்டி உளுந்து மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை தீரும்.
கொண்டைக்கடலை பயன்கள்:
- கொண்டைக்கடலையில் கரையும் நார்ச்சத்துக்கள், புரோட்டீன், அதிகமாக இரும்புச்சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
- கொண்டைக்கடலையை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் பெண்களை தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை சரியாகும் .
- இதில் இரும்புசத்து அதிகமாக இருப்பதால் இரத்த சோகை பிரச்சனைக்கு நல்ல தீர்வினை கொடுக்கிறது.
- மேலும் உடலுக்கு உறுதி கிடைக்க கொண்டைக்கடலையை அவித்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வரலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
Health Tips in Tamil |