நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் | Neer Sathukal Athigam Ulla Fruit in Tamil

Advertisement

நீர்ச்சத்துள்ள பழங்கள் | Neer Sathu Fruits in Tamil

நண்பர்களே வணக்கம் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்று நமக்கு தெரியும். வெயிலின் காரணமாக வெளியில் செல்ல முடியாமல் இருக்கிறீர்கள். ஆனால் நாம் அன்றாடம் வெளியில் சென்றால் தான் வேலைக்கு செல்ல முடியும். ஒரு மனிதனுக்கு இயல்பாகவே அதிக அளவு வெயிலை தாக்குவதற்கான சக்தி இருக்கும். அதன் சக்தி குறைந்தால் மட்டும் தான் வெயிலின் தாக்கத்தை நம்மால் தாங்க முடியாமல் போகிறது. மனித உடலில் நீர் சத்துக்கள் அதிகம் இருத்தால் அதிகப்படியான வெயிலின் தாக்கத்தை நம்மால் தாங்க முடியும். அதற்கு நாம் அன்றாடம் சாப்பிடும் பழங்களில் நீர் சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிட்டால் போதும் கோடை வெயிலில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ளலாம்.

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள்

தர்பூசணி பழம் பயன்கள்:

தர்பூசணி பழம் பயன்கள்

  • தர்பூசணி பழத்தில் ஏராளமான சத்துக்கள் அதிகம் உள்ளது.  இந்த பழம் குறைந்த கலோரி கொண்ட கோடைகால தண்ணீர் பழம். தர்பூசணி 90% தண்ணீர் நிறைந்த பழம் ஆகும். இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நீர் சத்துக்களை இந்த பழமே தரும். அதனால் ஜூஸ் குடிப்பதை நிறுத்திவிட்டு இது போல் தண்ணீர் சத்துக்கள் நிறைந்த பலத்தை சாப்பிடுங்கள்.

வெள்ளரிப்பழம் நன்மைகள்:

வெள்ளரிப்பழம் நன்மைகள்

  • கோடை காலம் என்றால் முதலில் ஞாபகம் வருவது வெள்ளரி பழம், வெள்ளரி காய் தான், இந்த பழத்தில் அதிகளவு நீர் சத்துக்கள் அதிகம் உள்ளது, அதனால் இதனை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். வெள்ளரிக்காய்யை விட பழத்தில் அதிகம் நீர் சத்துக்கள் உள்ளது. இதனை உடைக்கும் போதே தண்ணீர் வெளியில் வரும் அது மட்டும் இல்லாமல் இதன் சுவை நன்றாக இருக்கும்.
  • அதிகம் வெப்பம் நம் உடலில் இருந்தாலும் இந்த வெள்ளரி பழம் அதனை குறைத்து நம் உடலுக்கு தேவையான  நீர் சத்துக்களை தந்து உடலுக்கு குளிர்ச்சியை தரும். அது மட்டும் இல்லாமல் இதில் பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது.

ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்:

ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்

  • சிட்ரிக் அமிலம் உள்ள பழத்தின் ஒன்றானது ஆரஞ்சு பழம் இந்த பழத்தில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் சி சத்துக்கள் மட்டுமில்லாமல் ஏராளமான சத்துக்கள் இருக்கிறது. அதில் மிகவும் முக்கியமான ஒன்று நீர் சத்துக்கள். இந்த பழத்தில் முழுவதுமே நீர் சத்துதான் உள்ளது.
  • இதனை சாப்பிடால் முகம் புத்தம் பொலிவாக இருக்கும். உடல் எடை குறைத்து இளமையான தோற்றத்தை தரும் என்பார்கள். தினமும் ஒரு பழம் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான தாகத்தை குறைக்கும். அதிகம் தண்ணீர் சத்துக்கள் கிடைக்கும்.

நுங்கு பயன்கள்:

நுங்கு பயன்கள்

 

  • கோடைகாலத்தில் மிகவும் புகழ்பெற்றது நுங்கு. இதனை சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இது கோடைகாலத்தில் மட்டும் கிடைக்க கூடியது. இது ரோட்டு ஓரங்களில் தான் கிடைக்கும் ஆனால் இதனை கோடைகாலத்தில் சாப்பிடுவதற்கு கூட்டம் கூட்டமாக கடைகளில் நிற்பார்கள் இதில் அந்த அளவிற்கு நீர் சத்துக்கள் உள்ளது. அதனால் தான் கோடைகாலத்தில் இது ராஜாவாக திகழ்கிறது.
  • அதிகமாக குளிர்பானங்களை அருந்துவதை விட இந்த நுங்குகை தோலுடன் சாப்பிடுங்கள் வெயிலில் காரணமாக வரும் வயிற்று வலிக்கு அதன் தோல் மிகவும் நல்லது. நுங்கு தோல் வயிற்று வலியை வர விடாமல் தடுக்கும் அதனால் தான் தோலை நீக்காமல் சாப்பிடுவார்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement