நேந்திரம் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகளா.?

Advertisement

Nendram Pazham Disadvantages in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நேந்திரம் பழம் தீமைகள் (Nendram Pazham Disadvantages in Tamil) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். வாழைப்பழம் வகைகளில் மிகவும் பிரபலமான மற்றும் பிடித்தமான பழமாக இருப்பது நேந்திரம் பழம். இது கேரளாவில் அதிகமாக வளர்க்கப்படும் பழ வகையாகும். நேந்திர பழம் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும் அதில் பல நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது. ஆகையால், நேந்திரம் பழம் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.

நேந்திரம் பழம் அதிக இனிப்பு சுவை மற்றும் அதிக ஊட்டச்சத்து மதிப்பை கொண்டுள்ளது. இதன் இனிப்பு சுவைக்காகவே நேந்திரம் பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகிறார்கள். நேந்திரம் பழத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்வது போல, அதில் உள்ள தீமைகள் பற்றியும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

நேந்திரம் பழம் தீமைகள்:

நேந்திரம் பழம் தீமைகள்

உடல் எடை அதிகரிப்பு:

நேந்திரம் பழத்தில் அதிக கலோரி இருப்பதால், உடல் எடையை எளிதில் அதிகரிக்க செய்கிறது. நேந்திர பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும். எனவே, உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நேந்திரம் பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் அல்லது குறைவாக சாப்பிட வேண்டும்.

பழுத்த வாழைப்பழம் இருந்தா இந்த ரெசிபி செய்து சாப்பிடுங்க.

அதிக அளவு சர்க்கரை:

நேந்திரம் பழத்தில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. நேந்திரம் பழத்தை அதிகமாக உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் நேந்திரம் பழத்தை சாப்பிட கூடாது அல்லது மருத்துவரின் பரிந்துரையின் படி அளவாக சாப்பிட வேண்டும்.

ஒவ்வாமை:

சிலருக்கு நேந்திரம் பழம் ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும். அரிப்பு மற்றும் படை நோய், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும். இதனை தவிர்த்து சிலருக்கு வேறு விதமான ஒவ்வாமைகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.

உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம் எங்கு வளர்கிறது தெரியுமா…?

வயிற்றுப்போக்கு:

நேந்திரம் பழத்தை அதிகமாகி சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நேந்திரம் பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும். 

Advertisement