நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சித்த மருத்துவம்..! Noi Ethirpu Sakthi Tharum Unavugal Tamil..!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க :- பொதுவாக அனைவரது குழப்பமே இதுதான். அதாவது நன்றாகத்தான் இருப்போம் திடீர் என்று உடல் நல குறைவு ஏற்படும், என்ன காரணம் என்றாலும் தெரியாது.

newகொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?

 

சிலருக்கு பருவமாற்றத்தின் காரணமாக கூட உடல் நலகுறைவு ஏற்படுகிறது. இவற்றின் முக்கிய காரணம் என்னவென்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி (increase immunity) குறைவின் காரணமாகவே இம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி in English – Immunity என்று கூறுவர்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

குதிகால் வெடிப்பு நீங்க சில இயற்கை வைத்தியம்..!

எனவே இதை நாம் சரி செய்ய முறையான உணவு முறைகளை பின்பற்றினாலே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க (increase immunity) முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவு அறிகுறிகள் :-

நோய் எதிர்ப்பு சக்தி குறைவு அறிகுறிகள் அதிக சோர்வு, தொடர்ச்சியாக தொற்று ஏற்படுதல், ப்ளூ, சளி மற்றும் தொண்டை புண், அழற்சிகள், காயங்கள் ஆற நாளாகுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தமாகும். இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறைவு அறிகுறிகள் இருந்தா கண்டிப்பாக நாங்க சொல்லியுள்ள சில விஷயங்களை தினமும் நீங்க கடைப்பிடித்து வந்தாலே போதும் இந்த நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

சரி வாங்க எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது (increase immunity) என்று நாம் இவற்றில் காண்போம்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருத்துவம்(noi ethirpu sakthi athikarikka food tamil):

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்(noi ethirpu sakthi tharum unavugal tamil):

வைட்டமின் ஏ, சி, இ ஆகியவை இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் (increase immunity) தன்மை வாய்ந்தது.

அதுவும் உடலுக்குள் நுழையும் நோய் கிருமிகளை அழிப்பதில் மிகவும் வலிமை வாய்ந்தது.

கேரட், பச்சைக்காய்கறிகள், தக்காளி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யா பழம் ஆகியவற்றில் இந்த ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.

அரிய வகைப் பழங்களின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்..!

இவற்றை நாம் அதிகமாக உணவில் எடுத்து கொண்டோம் என்றால் அதிகளவு ஆரோக்கியம் மற்றும் உடலுக்கு அதிகளவு வலிமையையும் அள்ளித்தருகிறது.

இதனுடன் தினமும் 5 பாதாம் பருப்பும் சாப்பிட்டால் அதிக வலிமை பெறலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மஞ்சள் கலந்த பால்:

நோய் எதிர்ப்பு சக்தி

பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது இப்போது அனைவருக்கும் இயல்பாகி விட்டது. மஞ்சள் கலந்த பாலை குடித்து வருவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடும்.

தினமும் குடிக்கும் போது பாலில் மஞ்சளின் அளவை குறைத்து குடிக்க வேண்டும். மஞ்சளின் அளவானது சிட்டிகை அளவில்தான் இருத்தல் வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ப்ரோபயாட்டிக்:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் உடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். தயிர் மற்றும் பால் போன்ற பொருட்களில் காணப்படுகிறது.

உடலில்நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க (increase immunity) பெரிதும் உதவுகிறது. மேலும் ஹீமோகுளோபின் அதிகளவு சுரக்க மிகவும் உதவுகிறது.

ப்ரோபயாட்டிக் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க எலுமிச்சை சாறு:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் தினமும் ஒரு டம்ளர் அளவு எலுமிச்சை சாறு குடித்து வந்தோம் என்றால், உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

மேலும் இவற்றின் அமிலத்தன்மை உடலுக்குள் நுழையும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துத்தநாகம்:

துத்தநாகம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  (increase immunity) உதவுகிறது. துத்தநாகம் பற்றாக்குறை ஏற்பட்டால் நோயெதிர்ப்பு சக்தியை பாதிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை முற்றிலும் செயல் இழந்து போக அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே துத்தநாகம் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு பீன்ஸ், சிப்பி வகை மீன், பருப்புகள், தயிர் மற்றும் பழங்கள் ஆகியவற்றை அதிகளவு உட்கொள்ளவேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (noi ethirpu sakthi food) (Noi Ethirpu Sakthi Tharum Unavugal Tamil):

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் – உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க (increase immunity) அதிகளவு மூலிகைகளை உணவில் சேர்த்து கொள்ளவேண்டும். மூலிகை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் தொற்றுக்களை தடுக்கிறது.

மஞ்சள், சோம்பு மற்றும் பூண்டு ஆகியவை நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை வாந்தது.

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க (increase immunity) உதவுகிறது.

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் உணவுகளில் வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தூக்கம் அவசியம்:

உடலில் வளர்ச்சிதை மாற்றங்கள் சிறப்பாக நடைபெற தூக்கம் மிகவும் அவசியமாகும். மேலும், தூக்கமின்மையால் ஏற்படும் மனஅழுத்தத்தால், உடலில் கார்டிசோல் (Cortisol) என்னும் ஹார்மோன் அதிகரிக்கிறது.

இது நோய் எதிர்ப்புச் செயல்பாட்டைப் பாதிக்கிறது. எனவே, நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற, ஆழ்ந்த தூக்கமும் மனஅழுத்தத்தைத் தவிர்ப்பதும் அவசியமானது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவு(noi ethirpu sakthi foods) – வெங்காயம் :-

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வெங்காயம் – வெங்காயத்தில் உள்ள செலினியம் ( Selenium) தாதுச்சத்து நோய் எதிர்ப்பு செயல்பாடு தூண்டும் தன்மையுடையது. இதில் உள்ள ‘அலிலின்’ என்னும் வேதிப்பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சுகள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க புகைப் பிடிக்காதீர்கள்:

சிகரெட்டில் உள்ள புகையிலை (Tobacco) உடலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகளை அழித்து, நோய் எதிர்ப்புச் சக்தியை குறைக்கிறது. மேலும், நுரையீரலில் உள்ள திசுக்களை அழிக்கவல்லது. இதனால், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியாவின் ஆபத்தை அதிகரிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க டீ அருந்துங்கள்:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் – க்ரீன் டீயில் உள்ள கேட்டச்சின் (Catechins) போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு வலு சேர்க்கும். புற்றுநோய், இதய பாதிப்புகளிலிருந்தும் காக்கிறது. அதேநேரத்தில், இரண்டு தடவைக்கு மேல் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உணவு கீரை:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்(ethirpu sakthi foods) – வாரத்தில் குறைந்தது இரண்டு நாள்களாவது கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் அதிகளவில் வைட்டமின்கள், இரும்புச்சத்து உள்ளிட்ட அத்தியாவசியச் சத்துகள் நிறைவாக உள்ளன. இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தி in english – immunity

மூலிகை சாரும் அதன் பயன்களும் !!! நோய் தீர்க்கும் மருந்து..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்